search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • நாமக்கல் மாவட்டத்தில் 557 கிலோ கஞ்சா பறிமுதல் - 48 பேர் கைது.
    • வழக்கில் சம்மந்தப்பட்ட 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறியதாவது-

    நாமக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்தவர்கள் மீது நடப்பு ஆண்டில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 குற்றவாளிகள் கைது செய்யபப்பட்டு அவர்களிடம் இருந்து 557 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கஞ்சா வழக்கில் 7 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வழக்கில் சம்மந்தப்பட்ட 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளது.

    போதை பொருள் கடத்தல், விற்பனை செய்தல், தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு செல்போன் எண் 9498181216 -க்்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    • மதுரை ரெயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் ெரயிலில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

    மதுரை

    மதுரை எக்ஸ்பிரஸ் ெரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று இரவு 12 மணி அளவில் மதுரைக்கு வந்து சேர்ந்தது. அப்போது போலீசார் ெரயிலில் வந்தவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது தோல் பைகளுடன் வந்த 2 பேரை மறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்எதேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் 62 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு விசாரணை நடத்தியதில் கஞ்சா கடத்தியது மதுரை செல்லூர் ஜீவா தெரு, ஜெயபாண்டி ‌(31), ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பெருக்கீடு, குடிவாடா ரோடு, ஹனுமான் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் வாழி (22) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதன்மூலம் கஞ்சா விற்பனை
    • கஞ்சா புழக்கத்தின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குளச்சல், கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் கஞ்சா விற்பனை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா விற்பவர்களின் வங்கி கணக்குகளையும் போலீ சார் முடக்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ராஜாக்கமங்கலம் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலமாக கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கூரியர் நிறுவ னங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கஞ்சா விற்பனை செய்யும் கும்பல், வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதன்மூலம் கஞ்சா விற்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கூரியர் நிறுவனங்களுக்கு வரும் பார்சல்களை சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்க வேண்டும் என்று கூரியர் நிறுவனங்க ளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூரியர் நிறுவனம் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஆம்னிபஸ் உரிமையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அவர்களை உடனடியாக போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்க வேண்டும். பஸ் மற்றும் கூரியரில் பார்சல் அனுப்புபவர்களின் ஆவண நகலை பெற்றுக் கொண்டே அனுப்ப வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கஞ்சா விற்பனையில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூரியர் மூலமாக கஞ்சாவை வரவழைத்து விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர் ஆசாமிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர் . கஞ்சா புழக்கத்தின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.எனவே கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    • பார்சல்களை சோதனை செய்து எடுக்க வேண்டும்
    • குமரி. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தலைமையிலான போலீசார் நெசவாளர் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த மேல ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (வயது 20), ராமன்புதூர் நாஞ்சில் நகரைச் சேர்ந்த தீபு(19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வீரமணி, தீபு இருவரையும் கைது செய்தனர்.

    இதேபோல் ராஜா க்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் எறும்புகாடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அங்கு நின்று கொண்டி ருந்த ஆசாரி பள்ளத்தை சேர்ந்த ஜெனிஸ் (24), எறும்புகாட்டைச் சேர்ந்த வினோத்(28), மேலரா மன்புதூர் பகுதியைச் சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் செல்போன், 3 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்ய ப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தியபோது கூரியர் நிறுவனம் மூலமாக வெளியூர்களிலிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து இவர்க ளுக்கு வந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் ஹைதராபாத்திலிருந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்திற்கு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமை யிலான போலீசார் அந்த கூரியர் நிறுவனத்திற்குச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது கஞ்சா புழக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.

    வெளியூர்களில் இருந்து பஸ்கள் மற்றும் ெரயில்களில் கொண்டுவரப்படும் கஞ்சாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூரியர் பார்சல் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கூரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களை அனுப்பு ம்போது அனுப்புனர், பெறுநர், முகவரி சான்று, செல்போன் எண் போன்றவை கண்டிப்பாக வாங்கி வைத்திருக்க வேண்டும்.

    முறையான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். முகவரி சான்று இல்லாமல் பார்சல்களை அனுப்பவோ, வினியோகம் செய்யவோ கூடாது.

    பார்சல்கள் அனுப்பும் போது சந்தேகம் ஏற்பட்டால் பரிசோதனை செய்த பிறகே பார்சலை அனுப்ப வேண்டும்.

    விதிமுறைகளை கடை பிடிக்காத கூரியர் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து அலுவலகங்களிலும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்ப ட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் தீவிர விசாரணை
    • குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள கொரியர் நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து கஞ்சா பார்சல்கள் வந்திருப்பதாக கோட்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கோட்டார் போலீசார் சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் கொரியர் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அதன் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கொரியர் நிறுவனத்தை திறந்து சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 வாரங்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
    • சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக கூறினார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர்கள் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாைவ பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது ஒருவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் சென்னையில் படித்து வருவதாக தெரிவித்தார். சென்னையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • அவனியாபுரத்தில் கஞ்சா, ரூ. 1 லட்சம் பணத்துடன் வாலிபர் சிக்கினார்.
    • விசாரணையில் அவர் மாநகராட்சி காலனி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் காவல் துறையினருக்கு மாநகராட்சி காலனி பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவனியாபுரம் மாநகராட்சி காலனி டாஸ்மார்க் கடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வெள்ளைநிற சாக்குப் பையுடன் ஒருவர் இருந்தார். அவரை அழைத்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் சாக்குப்பையில் கஞ்சா இருப்பதை கண்டு பிடித்தனர்.

    அவரிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 780 ரொக்கம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர் மாநகராட்சி காலனி பகுதியை சேர்ந்த வழிவிட்டாள் என்பவரின் மகன் மாரீஸ்வரன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 2.700 கிலோ கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குனியமுத்தூர்:

    கோவை போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் செட்டிபாளையம் ஈச்சனாரி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 2.700 கிலோ கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த பிள்ளையார் புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டியை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.மேலும் அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் 19 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து ரெயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.கே .மீனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்,போலீசார் கமலநாதன், சவுந்தரராஜன், பெரியசாமி, செந்தில்குமார் மற்றும் ஈரோடு ஆர்.பி. எப் சப்-இன்ஸ்பெக்டர் தரம் சிங் மீனா மற்றும் குழுவினர் , போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    சேலம் ரெயில் நிலையத்தில் தொடங்கி ஈரோடு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது எஸ்-1 பெட்டியில் சந்தேகப்படும் படி பெரிய கைப்பை இருந்தது. போலீசார் அந்த பேக் யாருடையது என்பது குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வனபார்தி பாபிராஜ்னுடையது என தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பேக்கை திறந்து சோதனை செய்ததில் 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வனபார்தி பாபிராஜனை கைது செய்து 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், பின்னர் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டில் கஞ்சா விற்பனை செய்ததாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கஞ்சா விற்பனை செய்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிட மிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 31 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து 75 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் ரூ.1.95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு 28 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு சாமநாயக்கன் பாளையம் மைதானத்தில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதானத்தில் ஒரு மூதாட்டி சந்தேகத்திற்கிடமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த போலீசார் அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூதாட்டியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த மூதாட்டி சாமநாயக்க ன்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த சரஸ்வதி (வயது 62) என்பதும் அவர் மீது ஆனைமலை, துடியலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிக வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    • ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 159 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் அதாவது ஜனவரி முதல் மே மாதம் வரை கஞ்சா விற்பனை தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதேப்போல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இதுவரை தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ.89,720 கைப்பற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நடந்த 201 குற்ற வழக்குகளில் 152 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 183 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கடந்த மே மாதம் மட்டும் நடந்த 41 குற்ற வழக்குகளில் 21 வழங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.32 லட்சத்து 97 ஆயிரத்து 920 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

    ×