search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்ய தேடிய நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் அங்கு நேற்று விரைந்தனர். அப்போது சதாம் உசேன் தச்சநல்லூர் பெருமாள்கோவில் தெருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று அவரை கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    அப்போது சிறிது நேரத்தில் ஜீப்பில் இருந்த சதாம் உசேன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டார். இதில் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படையினர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டவர் திடீரென கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

     அவினாசி :

    அவினாசி அருகே கஞ்சா வைத்திருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி மங்கலம் ரோடு கருணை பாளையம் பிரிவு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சயிராப் குமார் (25 ) என்பதும் அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு, போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    • தலா 200 கிராம் கஞ்சா, 2 வாகனங்களிலும் இருந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் பலர் கைது செய்யப்பட் டுள்ளனர். போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    போதையில்லாத குமரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீ சாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு, போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    அருமனை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார், நேற்று மாலை ஆயவிளை-முல்லையாறு திருப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 2 வாகனங்க ளிலும் சீட்டுக்கு அடியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தலா 200 கிராம் கஞ்சா, 2 வாகனங்களிலும் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், செறுவல்லூர் ஆயவிளையை சேர்ந்த சலீம்ராஜ் (வயது 24), சிஜூ (20) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே ஊர் வடக்கன் கரையை சேர்ந்த ஷாஜி (38) ஏற்பாட்டின் பேரில், கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார், ஷாஜியை தேடி வருகின்றனர்.

    • போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே விற்பனைக்காக 80 கிராம் கஞ்சா வைத்திருந்த வெள்ளகோவில், தீரன் சின்னமலை நகர் பகுதியை சேர்ந்த பழனிகுமார் மகன் ஸ்ரீநாத் (23,)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வெள்ளகோவில் போலீசார், அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் தவமணி(29). இவர் தனது கடையில் தடைசெய்யப் பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்.

    அதேபோல் சுந்தர பாண்டியம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(43), இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்.இவர்கள் மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    வத்திராயிபுருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கோட்டையூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக கோட்டையூரை சேர்ந்த வீரகுமார்(33), ராஜ பாளையம் அடுத்த சொக்க நாதன்புத்தூரை சேர்ந்த சந்தான நல்ல ஜெகன்(33) ஆகிய பேரையும் வத்திரா யிருப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 221 பாக்கெட் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தபோது, பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
    • இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும்டி.எஸ்.பி. டீம் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தனர்.அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம்இருந்து 310 கிராம் கஞ்சா பொட்டல ங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பத்மநாதன் (வயது 25) தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பத்மநாதன் காட்டுமன்னார்கோயில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்து வந்தார்.
    • அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு டெலிவரி செய்த பரந்தாமனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் சோதனை செய்தபோது,அவர் வைத்திருந்த பெட்டியில் உணவு மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள தொண்டமா நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்பத்மநாதன் (வயது 25) தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பத்மநாதன் காட்டுமன்னார்கோயில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்து வந்தார்.அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு டெலிவரி செய்யும் பரந்தாமன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் சோதனை செய்தார். அப்போது அவர் வைத்திருந்த பெட்டியில் உணவு மற்றும் கஞ்சா விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் அவரிடமிரு ந்து கஞ்சா பொட்டலம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் காட்டுமன்னா ர்கோயில் போலீஸ் நிலையத்திற்கு பத்மநாதனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை யில் கஞ்சாைவ வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து உணவு டெலிவரி மூலம் நூதன முறையில் விற்பனை செய்வதாக பத்மநாதன் போலீசாரிடம் கூறினார். மேலும் போலீசார் தொடர்ந்து பத்மநாபனிடம் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    அந்த பகுதியில் தொட ர்ந்து கஞ்சா மட்டும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்ய வேண்டுமென என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    • வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
    • தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. கடந்த வாரம் ஊட்டி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் கஞ்சாவை மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்து வலுவான கோரிக்கை எழுந்தது.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையிலான சிறப்பு போலீசார்கள் கஞ்சா வேட்டையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கண்ணெரிமுக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமா ன்காண், முஜாஹிர், சரவ ணன், சிவமணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர்கள் மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

    பின்பு போலீசார் அவரது வீட்டில் மேலும் கஞ்சா செடிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரிடமிருந்து சுமார் 125 கிராம் கொண்ட 5 வெடிமருந்து நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், மருந்துகளை வெடிக்க வைக்கும் ஒயர்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு மூதாட்டியும், வாலிபரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது போலீசார் சோதனை செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சேடப்பட்டி அருகே உள்ள பெரியகட்டளை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தின் அருகே சென்றபோது ஒரு இருசக்கர வாகனம் வந்தது. அதில் ஒரு மூதாட்டியும், ஒரு வாலிபரும் இருந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது 4கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளையை சேர்ந்த பூமா என்ற பூவம்மாள் (வயது61), வனராஜ்(32) என்பதும் தஞ்சை விளார் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 3பேர் மீதும் சேடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவம்மாள், வனராஜை கைது செய்தனர்.

    • சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • ரயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை அண்ணா நகர், விஜயபுரம், திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நயினார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த வாலிபரை சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பது தெரிய வந்தது. பிறகு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

    • வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை
    • கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல், சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் புத்தேரி பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சுஜித் குமார் (27), ஒழுகினசேரியை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (25) என்பது தெரியவந்தது.

    சுஜித் குமார் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீ ராமச்சந்தி ரன் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்கும், சுஜித் குமாரின் தாயாரின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்க நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ×