search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டுக்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    அந்த பேக்கில் 5 பண்டல்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த3 பேர் சிக்கினர்.

    மதுரை

    மதுரையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று மதுரை கட்டபொம்மன் நகர், குதிரை பாலம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளுடன் வந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். மேலும் அவர்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடைகளை பிரித்து பார்த்தனர்.

    அதில் 2 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10 ஆயிரத்து 450 ரொக்கம் இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மீனாம்பாள்புரம், காமராஜர் தெரு சேதுபதி (29), கார்த்திக் (25), மகாலிங்கம் மகன் பரத் (24), சேதுபதி மனைவி ரம்யா (22), பவளவல்லி (45) செல்லூர் பிரபு மனைவி சசிகலா (38) என்பது தெரிய வந்தது.

    இதில் பவளவல்லி, சேதுபதி, ரம்யா ஆகிய 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பவளவள்ளியின் மகனான சேதுபதியின் மனைவி ரம்யா ஆவார். மேற்கண்ட 3 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    • பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார். சுமார் 2 மணி நேரம் கழித்து போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்தார்.

    இதனை கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவி பள்ளி அருகே உள்ள டீக்கடையில் கஞ்சா புகைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து டீ கடைக்கு சென்ற மாணவியின் தாய் மகளுக்கு எதற்காக கஞ்சா விற்பனை செய்தாய் என தட்டிக்கேட்டார்.

    அதற்கு அவர் உங்களுடைய மகள் தினமும் ஆண் நண்பர்களுடன் வந்து கஞ்சா அடித்துவிட்டு செல்வதாகவும், பணம் கொடுப்பதால் கஞ்சா கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் தாய் சந்திரகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளி அருகிலேயே மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்சியாளர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    இதற்கு சந்திரகிரி எம்.எல்.ஏ சிவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் பாரபட்சம் இன்றி கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக ஆட்சியை குறை கூறுவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • போலீசாரின் வாகன தணிக்கையில் கஞ்சாவுடன் வாலிபர்கள் சிக்கினர்.
    • கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கஞ்சா கடத்தலை கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் நகர போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெத்தானியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 22), சமயநல்லூர் அருகே உள்ள ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த சூர்யா (21) ஆகிய 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்களிடம் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. அதனை அவர்கள் விற்பதற்காக ெகாண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    • எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது.
    • எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன.

    மதுரா :

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நெடுஞ்சாலை போலீஸ் நிலையம் சார்பில் பல்வேறு சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை செர்கார் கிட்டங்கியில் போலீசார் பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்தபோது, கைப்பற்றப்பட்ட 586 கிலோ கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் கூறிய தகவல்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தது. "எலிகள் மிகச்சிறியதாகவும், போலீசாருக்கு பயப்படாததாகவும் உள்ளன. அவை 581 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டன. எல்லா பிரச்சினைகளுக்கும் போலீசாரால் தீர்வு காண முடியாது" என்று அவர் வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, "எலிகளை கட்டுப்படுத்தவும், எலிகள் 581 கிலோ கஞ்சாவை சாப்பிட்டதற்கான ஆதாரங்களை வரும் 26-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கவும்" போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு முன்பு ஒருமுறை, 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக போலீசார் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் டவுன் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் உதவி கமிஷன் வெங்கடேசன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் குகை ஆற்றோரும் வடக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அங்கு வசித்து வந்த லோகேஸ்வரன் (வயது 32) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (27) ஆகியோரை கைது செய்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.
    • இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதி பள்ளர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 41). இவர் வீட்டின் அருகில் கஞ்சா செடியை வளர்த்து, பராமரித்து வந்து உள்ளார்.

    இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

    • சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை இட்டனர்.
    • அப்போது மர்ம நபர் ஒரு பையில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி,

    திருச்சி ராம்ஜி நகர் போலீசார் நவலூர் குட்டப்பட்டு தேசிய சட்டக் கல்லூரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை இட்டனர்.

    இதில் அந்த நபர் ஒரு பையில் 21 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மதன் என்கிற மதுபாலன் (வயது 29) என்பவரை கைது செய்தனர்.

    சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்கு அந்த கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக ராம்ஜி நகர் போலீசார் தெரிவித்தனர்.

    • அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகி றார்கள். போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக கஞ்சா புழக்கம் தற்போது குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வடசேரி போலீசார் வடசேரி பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த னர். அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது
    • இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் சில கும்பல்கள் ஈடுப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடுமையான நடவ டிக்கைகள் எடுத்து வரு கிறது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தினமும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்து உள் ளார்.

    திருவட்டார் அருகே குமரன்குடி பகுதியில் மறை வான பகுதிகளில் கஞ்சா பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்யப்படு வதாக திருவட்டார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நேற்று மாலை திருவட் டார் போலீசார் குமரன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் நிற்பதை பார்த்து விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    உடனே அவரை திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொண்டு விசாரனை செய்ததில் அவர் குலசேகரம் அருகே பழவிளை ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்த வினோத் (வயது 23) என்று தெரிய வந்தது. அவரிடம் 50 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட் டலம் எங்கிருந்து வருகிறது. இதன் பின்னணியில் யார்? யார்? இருக்கிறார்கள்.

    இது எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.

    • வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • 50 கிராம் கஞ்சா பறிமுதல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் தலைமை யில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். இதற்காக சந்தே கிக்கப்படும் பகுதிகளில் போலீசார் ேராந்து சுற்றி வருகிறார்கள்.

    வேம்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளி அருகில் கஞ்சாவுடன் இரண்டு வாலி பர்கள் நிற்பதாக வெள்ளிச் சந்தை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் வெள்ளிச்சந்தை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்ற போது சூரப்பள்ளம் அஜித் என்ற அஜித்குமார் மற்றும் தோப்புகளை சுதன் (வயது 23) ஆகிய இரண்டு பேரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரை கண்டவுடன் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை செய்தபோது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதற்காக நிற்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வி.கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வி.கைகாட்டி பஸ் நிறுத்த நிழற்குடை அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள், வி.கைகாட்டியை சேர்ந்த அருள்மணி(வயது 28), வைப்பம் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம்(26), விக்கிரமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த சவுந்தர்ராஜன்(24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்தபோது, விற்பனைக்காக அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தலா மூன்று பொட்டலங்களில் இருந்த மொத்தம் 45 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×