search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • விவசாயிகள் 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், இடையகோட்டை, வெள்ளாளபட்டி, போத்துராவுத்தன்பட்டி, மஞ்சக்காம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விவசாயிகள் தங்களுடைய 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 11,603 கிலோ.

    முத்தூா், காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.64.44 முதல் ரூ. 69.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.70.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பல கலந்து கொண்டனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9,999 -க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150 -க்கும், சராசரி விலையாக ரூ .8,950 -க்கும் விற்பனையானது.பருத்தியின் மொத்த அளவு 3,039 மூட்டைகள், குவிண்டால் 1023.04. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 97 ஆயிரத்து 133. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
    • தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

     மதுரை

    தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

    ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் இந்த அலுவலக வளாகத்தில் 24-ந் தேதி காலை 11 மணிக்குள் ரூ.1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் காவல் வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. விற்பனை வரியுடன் சேர்த்து 24-ந் தேதி உடனே செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி தளவாய் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

    • ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
    • மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.

    அவினாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,500 முதல் ரூ.9,999 வரையிலும், மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 137விவசாயிகள் கலந்து கொண்டு 71ஆயிரத்து 142கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 14வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.30க்கும், குறைந்தபட்சம் ரூ.66.90 க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.56லட்சத்து 2ஆயிரத்து 376க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 4 ரத வீதிகள், அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிகமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

    பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பறிக்கும் முயற்சியிலும், பக்தர்கள் மீது மோதும் முயற்சியிலும் மாடுகள் ஈடுபடுகின்றன. இதனையடுத்து மாடுகளை அந்த பகுதியில் விடுவதற்கு அனுமதிக்க கூடாது எனவும், உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம், நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் ஆணையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ந் தேதி முதல் கோவிலை சுற்றி 4 ரத வீதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் சுற்றி திரிந்த 22 மாடுகளை பிடித்து கோவிலுக்கு சொந்தமான அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பிர்லா காட்டேஜ் வளாகத்தில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் 6 பேர் மட்டும் அபராதம் கட்டி மாடுகளை அழைத்து சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் மாடுகள் சாலைகளுக்கு வரக்கூடாது என்றும், தனி இடங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

    இதனை யடுத்து இந்த வளாகத்தில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    இந்த மாடுகளுக்கு அன்றாட உணவுப் பொரு ட்கள், தண்ணீர் கொடுத்து பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. உடனடியாக 16 மாடுகளையும் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் அழைத்துச் செ ல்ல வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தில் விடும் என்றும் நகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 55ஆயிரத்து 470கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75.35க்கும், குறைந்தபட்சம் ரூ.53.65க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    நேற்று செவ்வாய்கிழமை 103 விவசாயிகள் கலந்து கொண்டு 55ஆயிரத்து 470கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த மொத்தம் 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 75.35க்கும், குறைந்தபட்சம் ரூ.53.65க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்த ரூ.36 லட்சத்து 85ஆயிரத்து 677க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குமரிக்கு வந்து செல்வார்கள்.
    • தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறைக்கு சுற்றுலா பயணிகள் வருவர்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.

    இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சபரிமலை சீசன் கால மாக கருதப்படுகிறது. மேலும் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசன காலங்களில் இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அதுமட்டுமின்றி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய தொடர் விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

    இந்த சீசனையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணி களுக்கு வசதியாக கன்னியா குமரியில் நடைபாதை களில் சீசன் கடைகள் அமைப்பதற்கான அனு மதியை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் மூலம் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி யில் சீசன் கடைகள் நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இதனால் கன்னியா குமரியில் சீசன் கடைகள் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரியில் பேரூராட்சி நிர்வாகம் சீசன் கால முன்னேற்பாடுகளை செய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் முற்றிலுமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி விட்டனர்.

    இந்த நிலையில் 2 ஆண்டு களுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி கன்னியா குமரியில் சபரிமலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்து மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.இத னால் இந்த ஆண்டும் கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பதில் பேரூராட்சி நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    சீசன் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கன்னியா குமரியில் சீசனுக்கான எந்தவித முன்னேற்பாடு களும் செய்ய முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதன் பிறகு தான் சீசனுக்கான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்ப டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    • 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த தேங்காய் பருப்பு ஏலம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. நேற்று 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.62லட்சத்து 39ஆயிரத்து 823க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,766 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 96 காசுக்கும், அதிகபட்ச விலையாக 79 ரூபாய் 8 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 10 காசுக்கும், இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 53 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 71 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 85,805 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 61 லட்சத்து 84 ஆயிரத்து 604 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • ரூ.3.54 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது
    • விவசாயிகள் கொண்டு வருகின்றனர்

    கரூர்:

    கரூர், க.பரமத்தி பகுதிகளில் விளையும் நிலக்கடலையை, சாலைபுதுார் ஒழுங்குமுறை கூடத்துக்கு ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த ஏல விற்பனைக்கு, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 132 மூட்டை நிலக்கடலையை கொண்டு வந்தனர். ஒரு கிலோ, குறைந்தபட்ச விலையாக, 68.70 ரூபாய், அதிகபட்ச விலையாக, 74.30 ரூபாய், சராசரி விலை யாக, 73.50 ரூபாயக்கு ஏலம் போனது. மொத்தம், 4,300 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 3 லட்சத்து, 54 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனையானது.

    • இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
    • 153 விவசாயிகள் கலந்து கொண்டு 96 ஆயிரத்து 386 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்கிழமை 153 விவசாயிகள் கலந்து கொண்டு 96 ஆயிரத்து 386 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.80க்கும், குறைந்தபட்சம் ரூ.56.65க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.65லட்சத்து 98ஆயிரத்து 91க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது
    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம் மற்றும் வேப்பமுத்து ஏலம் நடைபெற்றது.

    மக்காச்சோளம் ஏலத்தில் 5 விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 66.30 குவிண்டால் வரப்பெற்று, 5 குவியலாக ஏலம் விடப்பட்டது. அதிகபட்ச விலையாக ரூ.2,439க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.2,271க்கும் சராசரி விலையாக ரூ.2,393க்கும் விலை போனது.

    வேப்பமுத்து ஏலத்தில் கலந்து கொண்ட 2 விவசாயிகளிடமிருந்து 159 கிலோ வேப்பங்கொட்டை வரப்பெற்று, 2 குவியலாக ஏலம் விடப்பட்டது. இதில் கலந்து கொண்ட வியாபாரிகள் 4 பேர், குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.11,524-க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.4,018-க்கும் வாங்கினர்.

    ×