search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209780"

    • நேற்று முன்தினம் மொத்தம் ரூ.41லட்சத்து 13ஆயிரத்து 340க்கு வணிகம் நடைபெற்றது.
    • 74ஆயிரத்து 829கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று முன்தினம் வியாழக்கிழமை 109 விவசாயிகள் கலந்து கொண்டு 74ஆயிரத்து 829கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.58.59க்கும், குறைந்தபட்சம் ரூ.45.69க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று முன்தினம் மொத்தம் ரூ.41லட்சத்து 13ஆயிரத்து 340க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 443 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9229 -க்கும் குறைந்தபட்சவிலையாக ரூ.6240-க்கும் சராசரி விலையாக ரூ. 7750-ற்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 3460 மூட்டைகள், குவிண்டால் 1065.29. இதன் மதிப்பு ரூ.82 லட்சத்து 75 ஆயி்ரத்து 26 ஆகும். 12 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.
    • 78 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பஸ் நிலையம். பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்தநிலையில் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் 78 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை.இதனால் பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு ஏலம் நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 116 விவசாயிகள் கலந்து கொண்டு 86ஆயிரத்து 531கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.54.29க்கும், குறைந்தபட்சம் ரூ.44.26க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வியாழக்கிழமை 116 விவசாயிகள் கலந்து கொண்டு 86ஆயிரத்து 531கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.54.29க்கும், குறைந்தபட்சம் ரூ.44.26க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ. 44லட்சத்து 49ஆயிரத்து 37க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
    • இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 34 இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஏலம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இருசக்கர வாகனத்திற்கு விலையை நிர்ணயித்து ஏலம் தொடங்கியது.

    இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். அதிகபட்ச விலையை கேட்கும் நபருக்கு வாகனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.

    • 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ரூ.6, 850 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது.

    சேவூா் :

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.93 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 3, 450 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், முதல் ரக நிலக்கடலை ரூ.6, 850 முதல் ரூ.7,000 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.93 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.

    • வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது
    • நேற்று மொத்தம் ரூ.61லட்சத்து 53ஆயிரத்து 968க்கு வணிகம் நடைபெற்றது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 160 விவசாயிகள் கலந்து கொண்டு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 390 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 11வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.57.27க்கும், குறைந்தபட்சம் ரூ.45.33க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.61லட்சத்து 53ஆயிரத்து 968க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 719-க்கு விற்பனை நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 7 ஆயிரத்து 665 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 5 காசுக்கும், சராசரி விலை யாக 23 ரூபாய் 60 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3 ஆயிரத்து 352 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 78 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதேபோல் கொப்பரை தேங்காய்கள் 13 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 73 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 616 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 44 ஆயிரத்து 979 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 719-க்கு விற்பனை நடை பெற்றது.

    • பிரதமர் மோடியின் 1,200 பரிசு பொருட்கள் ஏலம் தொடங்கியது.
    • பலரும் ஏலம் கேட்கிற பொருட்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி

    பிரதமர் மோடி விழாக்களில் பங்கேற்றபோது, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பின்போது நினைவுப்பரிசுகளாக வழங்கப்பட்ட 1,200 பொருட்களை ஆன்லைன் வழியாக (மின்னணு ஏலம்) ஏலத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த மின்னணு ஏலம் நேற்று முன்தினம், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளில் தொடங்கி உள்ளது. இது அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நீடிக்கிறது. இந்த ஏலம் pmmementos.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் நடத்தப்படுகிறது. அதில் அதிகம் பேர் பங்கேற்ற ஏலம் என்ற தலைப்பில் பொருட்களை பட்டியலிடும் பிரிவு உள்ளது.

    இப்படி அதிகளவில் பெரும்பாலோர் ஏலத்தில் வாங்க விரும்பும் பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய ஒரு பார்வை இது:-

    * பிரதமர் மோடி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) முன்னாள் வீரர் என்பதற்கான அடையாள அட்டை. நேற்று காலை 11 மணி நிலவரப்படி இந்த அட்டையை 20 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

    * அயோத்தியில் கட்டப்படுகிற பிரமாண்ட ராமர் கோவில் மாதிரி. இது கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட இந்த மாதிரியின் அடிப்படை விலை ரூ.10 ஆயிரத்து 800 ஆகும்.

    * ஏலத்துக்கு வந்துள்ள ஆன்மிக நினைவுப்பொருட்களில் உலோக சங்கு, பிள்ளையார் சிலைகள், திருப்பதி பாலாஜி மரச்சிலை மாதிரி , திரிசூலம் உள்ளிட்டவை அடங்கும். திருப்பதி பாலாஜி மரச் சிலை மாதிரியை பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசாக வழங்கியவர், ஆந்திர கவர்னர் பிஸ்வா பூஷண் ஹரிசந்தன் ஆவார்.

    * உலோக சங்கானது, நேர்த்தியானது, அது ஒரு சிவப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சங்கில் நாகத்தின் மீது விஷ்ணு ஓய்வு எடுப்பதையும், லட்சுமி தேவி அவரது பாதங்களை தொடுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு தனது சூலாயுதம், தாமரை, சங்கு போன்றவற்றை வைத்திருப்பதாக காட்டப்பட்டுள்ளார். 10 செ.மீ. நீளமும், 1150 கிராம் எடையும் உள்ள இந்த சங்கை நேற்று காலை 11 மணி வரை 30 பேர் ஏலம் கேட்டிருக்கிறார்கள்.

    * சென்னையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் (சிலை) ஏலத்துக்கு உள்ளது. சிலை தம்பி என்று அழைக்கப்படுவதாகும். இது தமிழர்களின் பாரம்பரிய உடையில் கைகளை குவித்து வணக்கம் சொல்வதாக அமைந்துள்ளது. 31 செ.மீ. உயரமும், 1,650 கிராம் எடையும் உள்ள தம்பியை 30 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.

    * அலங்கரிக்கப்பட்ட வாள், அசோக சின்னம், நடராஜர் சிலை போன்றவையும் பலரால் ஏலம் கேட்கப்படுகிற நினைவுப்பரிசுகளாக அமைந்துள்ளன.

    * தும்பிக்கையை மேல் நோக்கி உயர்த்திய தங்க முலாம் பூசப்பட்ட யானை, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மர செஸ் பலகை மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட 32 சதுரங்க துண்டுகள் ஆகியவையும் அடங்கும்.

    * பிரதமர் மோடி பேசுவது போன்ற சிறிய சிலை

    * சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் கையெழுத்திட்ட வெள்ளை டி சர்ட்டும் ஏலத்துக்கு இருக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.3 லட்சம் ஆகும்.

    இந்த ஏல விற்பனையில் கிடைக்கிற தொகை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

    • சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து ஏலத்தில் கொண்டனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி மதுவிலக்கு போலீசார், அவிநாசி சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மதுவிலக்கு போலீசாரால்107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வாகனங்கள் கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி இளங்கோவன்., மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுகுமாரன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அவினாசி மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் 99 இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என ரூ. 28 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அனுராதா தெரிவித்தார்.

    • பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம்,.பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.40குவிண்டால் எடை கொண்ட 7 ஆயிரத்து 194தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.06-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ.53 ஆயிரத்து 372-க்கு விற்பனையானது.

    அதேபோல் 153.51½ குவிண்டால் எடை கொண்ட 322 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.10-க்கும், சராசரி விலையாக ரூ.77.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.48-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.72.12-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 19 ஆயிரத்து 289-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    • 2 லட்சத்து 3ஆயிரத்து 996கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.55.69க்கும், குறைந்தபட்சம் ரூ.45.45க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.

    திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வியாழக்கிழமை 236 விவசாயிகள் கலந்து கொண்டு 2 லட்சத்து 3ஆயிரத்து 996கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.55.69க்கும், குறைந்தபட்சம் ரூ.45.45க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1 கோடியே 5லட்சத்து 77ஆயிரத்து 673-க்கு வணிகம் நடைபெற்றது.விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×