search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிராமம் கிராம மாக சென்று கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    • இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கிராமம் கிராம மாக சென்று கட்சியினரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

    அப்போது நிர்வாகிகள் பேசுகையில், அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒ.பன்னீர்செல்வம் தான் நிரந்தர ஒருங்கி ணைப்பாளர். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயல லிதா. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியில் துரோகம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதை ஒ.பி.எஸ். சட்ட ரீதியாக பார்த்துகொள்வார்.

    ஒ.பி.எஸ் என்ன சொல்கிறாரோ அதை செய்வோம். அ.தி.மு.கவின் தொண்டர்கள் எப்போது ஒ.பி.எஸ். பக்கமே உள்ளனர். இதனை நிருபிக்கும் வகையில் ஓமலூர் தொகுதியில் ஒவ்வொரு கிராமமாக கூட்டம் நடத்தப்படும். விரைவில் கட்சி தொண்டர்களை ஒ.பி.எஸ். சந்திக்கும் வகையில் மிகப்பெரிய பொதுகூட்டம் நடத்தப்படும் என்றார்.

    • இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • சுசீந்திரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    நாகர்கோவில், ஆக.12-

    ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

    பாதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத் தில் இருந்து தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். அடுத்த மாதம் 7-ந் தேதி சுசீந்திரத்தில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறார். சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார்.பின்னர் அவரது தொகுதி யான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் 3500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை செல் லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி பாத யாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத் தில் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால், மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்,அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாத யாத்திரையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். சுசீந்திரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்

    • மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
    • கொள்ளிடகரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமாரமங்கலம் முதல் அளக்குடி வரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் ஆதனூர் இடையே கட்டப்பட்டு வரும் கதவணை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் நிருர்களிடையே பேட்டியளித்தபோது கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு உட்பட்ட குமாரமங்கலம், மணல்மேடு, அளக்குடி, முதலைமேடு, நாதல்படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடகரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அளக்குடி பகுதியில் கொள்ளிடக் கரையை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு கரையை பலப்படுத்த நிரந்தர தீர்வுகாண்பதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரின் வரத்து அதிகரித்தால் தேவைக்கு ஏற்ப மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்துகொடுப்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர் என்றார்.

    இதில் மாவட்ட கலெக்டர் லலிதா, பொதுபணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கட்சி யினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    ஓசூர்,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற செவ்வாய்கிழமை ( 9-ந் தேதி) கிருஷ்ணகிரி வருகிறார்.

    மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கி, கட்சி யினருக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    மேலும் இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா, ராஜி, மஞ்சுநாத், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம் ரெட்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சந்திரன், வட்ட செயலாளர் சங்கர் என்ற குபேரன், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பகுதிகளின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
    • நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் விசாகன், வருவாய் அலுவலர் லதா, அலுவலர் பிரபு, கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், அந்தோணியார், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்டத் துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி,

    ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களிலிருந்து திருடப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது
    • அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை செயலிழந்து போயின.

    கன்னியாகுமரி :

    திற்பரப்பு அருவிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதில் குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இங்குவரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

    இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களிலிருந்தும், இதர குளிக்கும் பகுதியிலிருந்தும் திருடப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருவிப்பகுதிகளைக் கண்காணிக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை செயலிழந்து போயின.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமையில் தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் நேற்று அருவிப் பகுதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து பிரதான சாலையிலிருந்து அருவிக்கு செல்லும் நுழைவுப் பகுதி முதல் வாகனங்கள் நிறுத்தப்படும் கடைசி எல்லைப் பகுதி வரை கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தின் மத்தியில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான அறிக்கைகளை மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்கவும், மாவட்ட சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு கணேசனுக்கு உத்தரவிட்டார்.

    • மங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவரும், கட்சியின் முன்னாள் மங்கலம் ஊராட்சி செயலாளருமான சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
    • உடுமலையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான தொண்டர்களை பங்கேற்க வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மங்கலம்:

    மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் உடுமலையில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மங்கலம் ஊராட்சி எம்.செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மங்கலம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவரும், கட்சியின் முன்னாள் மங்கலம் ஊராட்சி செயலாளருமான சுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் பாசன சபை தலைவர் சௌந்தரராஜன், மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் முத்துக்குமார், ஜெயம் என்.மகேந்திரகுமார்,நல்லிநகர் கிளைசெயலாளர் அங்காளம்மன் நடராஜ்,

    சின்னப்புத்தூர் காளியப்பன், ஜே. ஜே. நகர் சரவணன், மகேஷ் குமார், பெரியபுத்தூர் கோபால் ,சுப்ரமணி, மேட்டுபாளையம் மணி, ராமர், ஆனந்த், பக்குளிபாளையம் துரை, மூர்த்தி , தமிழ் , கண்ணன் , மங்கலம் எம்.ஆர்.எம்.பாபு, நாசர், மன்சூர், ரகுமான்அகமது, கத்தாபி, இந்தியன் நகர் சரவணன், ஆரோக்கியசாமி, ரோஸ் கார்டன் சுப்பிரமணி , எம்ஜிஆர். சக்தி, செட்டிபாளையம் சுந்தரமூர்த்தி, கருப்புசாமி, லோகநாதன், ஆனந்தன், பத்மநாதன், வெங்கடேஸ்வரா நகர் ராமர், அஜித் கோவிந்தன், சத்ய நகர் ரவி, பாரதி நகர் பாலு, சுல்தான்பேட்டை ஆறுமுகம், மூர்த்தி, எம். மூர்த்தி, நீலி பிரிவு வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் உடுமலையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமான தொண்டர்களை பங்கேற்க வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் .
    • கூட்டாலு மூட்டில் வாக்காளர்களிடம் கலந்துரையாடுகிறார்.

    நாகர்கோவில்:

    பாரதிய ஜனதா கட்சி 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் தொகுதி வாரியாக பொறு ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளராக மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் நேற்று குமரி மாவட்டம் வந்தார்.இன்று நாகர்கோவிலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதி துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் கலந்து கொண்டு பேசினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு,இளைஞரணி, ஊடகப்பிரிவு, தரகு தளம் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொ ண்டார். இதை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம். ஆர் காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மகளிர் தலைவி உமாரதி, பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன்.பால கணபதி, தொகுதி பொறுப்பாளர் ராஜ கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாளை காலை 10 மணிக்கு மத்திய அரசின் திட்டப்பணிகளை பார்வை யிடுகிறார்.கோட்டார் ரயில் நிலையம் ஆளூர் பகுதியில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட்டு நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் ஆய்வு செய்கிறார். மதியம் கூட்டாலு மூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் .

    மாலை 3 மணிக்கு கூட்டாலு மூட்டில் வாக்கா ளர்களிடம் கலந்துரை யாடுகிறார்.

    • மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் மைதானம், மேடை அமைப்பு, வாகன ஏற்பாடுகள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
    • பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.

    திருப்பூர் :

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லடம் அடுத்த கரையான்புதூரில் வருகிற 17 ந்தேதி நடக்கிறது.

    பொதுக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முருகானந்தம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் மாநாட்டு மைதானம், மேடை அமைப்பு, வாகன ஏற்பாடுகள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ், வி. கே. பாலசுப்ரமணியம் , பாலகுமார் , மாவட்ட பொருளாளர் நட்ராஜ் ,துணைத் தலைவர் குணசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது.
    • அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது. இதில் 16ந் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார் . 15-ந்தேதி பொள்ளாச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவு உடுமலை வழியாக திருமூர்த்தி மலைக்கு வருகிறார். அன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் 16 ந் தேதி காலை அமராவதி சைனிக் பள்ளியில்நடைபெற உள்ள வைரவிழாவில் கலந்து கொள்கிறார்.

    முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் வைரவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் உடுமலை வழியாக திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி நகர் செல்லும் பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது.

    ஆர்டிஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார் .கூட்டத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர். தேன்மொழி வேல் ,சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு, நீர்வள ஆதார அமைப்பு ,பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம் ,நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை ,மருத்துவ துறை ,ஊரக வளர்ச்சி துறை ,போக்குவரத்து துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுஅதன்படி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

    • கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் இந்து அறநிலைய துறைக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் பல்லடம் பொன்காளிஅம்மன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். நீண்ட காலமாக, இந்த கோயில் கும்பாபிசேகம் நடத்தப்படவில்லை. தற்போது, கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் பிரேமா பேசுகையில், கோயிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் பல்லடம் நகர பகுதியில் இருந்தும்,கோயிலுக்கு போதிய வருவாய் இல்லை. நிலத்தை குத்தகைக்கு விடுவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் இதனால்,கோயில் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது. அந்தந்த கோயில் வருவாயை அந்த கோயில்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வங்கி மூலம் கிடைக்கும் வைப்பு தொகை வட்டி கொண்டு தான் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் செய்யப்படுகிறது என்று கூறினார். கோயில் வளாகத்தில் அலுவலக கட்டடம், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர்உள்ளிட்ட வேலைகள் உள்ளன. முதலில் மதிப்பீடு செய்த பிறகு பணிகள் துவங்கினால் நன்றாக இருக்கும். அதன் பின்னர் செலவு கூடினால் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்படும்.

    எனவே கோயில் வளாகத்தில் போதிய வசதிகளை செய்த பின்னர் கோயில் திருப்பணி மேற்கொள்வது நல்லதாக இருக்கும். மேலும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    • குமாரபாளையம் ஜானு ஓமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நகராட்சி பூங்கா எதிரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஜானு ஓமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நகராட்சி பூங்கா எதிரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள் ஜனனி, இந்திரா, தமிழரசு மற்றும் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு, தைராய்டு, ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பியல் நோய்கள், குழந்தையின்மை, கர்ப்பபை நீர் கட்டிகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். 

    ×