search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 211596"

    • சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பஹ்ரைன் நாட்டில் தவித்த முதியவர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டார்.
    • இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 59), அவரது மனைவி நல்லம்மாள். இவர்களது மகள் சுந்தராம்பாள், மகன் மணிவேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பச்சமுத்து 1991ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். விடுமுறைக்கு ஊருக்கு திரும்பி அவர் 1993 ஆம் ஆண்டு மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்க்கு சென்றார். அவ்வாறு பஹ்ரைன் சென்ற பச்சமுத்து கடந்த 1996 ஆம் ஆண்டு வரை தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்து குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பவில்லை. மேலும் அவரிடம் இருந்து கடிதம் வரும், வரும் என எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனாலும் தமிழகத்திலிருந்து பஹ்ரைன் நாட்டிற்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் அவ்வப்போது நல்லம்மாள் தனது கணவரை பார்த்தீர்களா? என விசாரித்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு வந்த நல்லம்மாள் தனது மகள் சுந்தராம்பாள் மற்றும் மகன் மணிவேல் ஆகியோர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் பச்சமுத்து என்பவர் பஹ்ரைன் நாட்டில் உள்ளதாக அவரது மகன் மணிவேலுக்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி மணிவேல் குடும்பத்தினர் தனது தந்தை பச்சைமுத்துவிடம் தொலைபேசி யில் வாட்ஸ் அப் மூலம் பேசினர். அப்போது பச்சமுத்து பஹ்ரைன் நாட்டில் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருவதாகவும், தான் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிவேல் தனது தந்தையை ஊருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி பார்வையாளராக பஹ்ரைன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து தந்தையை அழைத்து வர முயற்சி செய்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விசா கிடைக்கவில்லை. தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வரும் தனது கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மகன் நாகராஜ் என்பவரை மணிவேல் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார். மேலும் பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பச்சமுத்து குறித்த உண்மை தன்மையை விசாரணை செய்து அறிக்கையாக மாவட்ட காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பக்ரைன் நாட்டில் உள்ள அன்னைத் தமிழ் மன்ற தலைவர் செந்தில்குமார், உலக வெளிநாட்டுவாழ் கூட்டமைப்பின் தலைவர் சுதீர், இந்திய தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா ஆகியோரின் உதவியுடன் பச்சமுத்து தமிழகம் வந்தார். பச்சமுத்துவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அன்னை தமிழ் மன்றத்தின் செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர் பச்சமுத்துவுடன் சென்னை விமான நிலையம் வரை வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அவரது மகன் மணிவேல் தனது தந்தையை காரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். சொந்த ஊருக்கு சென்ற பச்சமுத்துவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

    • காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈேராடு வி.வி.சி.ஆர். நகர் முதலாவது வீதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (73). இவர் கடந்த 26-ந் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    இந்நிலையில் பழனிக்க–வுண்டன்பா–ளையம் காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் முதியவர் சோமசுந்தரத்தின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பிணமாக மிதந்த முதியவர் சோமசுந்தரம் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் முதியவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாய்க்கால் கரைக்கு சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

    விருதுநகர்

    சிவகாசி விஸ்வநத்தம காமராஜர் நகரை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 39). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த காளிராஜ் சம்ப வத்தன்று பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவருக்கு கடந்த சில மாதங்களாக கை வலி இருந்தது. இதனால் அவ ரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதில் ஏற்பட்ட விரக்தியில் தங்க ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    அருப்புக்ேகாட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள்.

    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு
    • சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் ரதவீதி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் பிள்ளை (வயது 75). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்தார். கோட்டாறு கம்பளம் பகுதியில் சுந்தரம் பிள்ளை நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அரசு அவர் மீது மோதியது.

    இதில் சுந்தரம் பிள்ளை படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுந்தரம் பிள்ளை இறந்தார்.இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுந்தரம்பிள்ளை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அரசு பஸ் எது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சுந்தரம் பிள்ளையின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    • மார்த்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் கல்லன்குழி பயற்றன் கால விளையை சேர்ந்தவர் ஆரோன்மணி (வயது 60) இவர் மகளை குழித்துறை தெற்றி விளையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    சம்பவத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் வழி யாக சிராயன்குழி பகு தியில் சென்று கொண்டி ருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியது. இதில் ஆரோன்மணியின் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் பரிதாபமாக பலியானார்.

    அவரது உடலை கைப்பற்றிய மார்த்தாண்டம் போலீசார் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டி வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த உதயமார்த்தாண்டன் (வயது 55) என தெரிய வந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.
    • இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (68). இவரது கணவர் அண்ணாமலை (69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமலும், தன்னைப் பராமரிக்க யாரும் இல்லாததாலும் மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (28). இவர் தனது மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை ராமலிங்கம் (59). இவரது மனைவி இருவரும் கோபி சாய் அபிராமி நகரில் தனியாக வசித்து வந்தனர். இவர்களிடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இருவருக்கு மிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ராமலிங்கத்தின் மனைவி கோபத்தில் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ராமலிங்கம் மன வேதனை யில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் விக்னேஷ்வரன் தனது தந்தையை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் ராமலிங்கம் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராமலிங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விக்னேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார்.
    • இவருக்கு வலது கால் முட்டியில் காய தழும்பு, இடத கால் முட்டியில் காய தழும்பு உள்ளது.

    ேசலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகம் அவசர சிகிச்சை பிரிவு அருேக உள்ள பொதுக்கழிப்பிடம் எதிரே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார்.

    அவரை ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்கள் மீட்டு டாக்டரிடம் காண்பித்து, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து முதியவர் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.இவருக்கு வலது கால் முட்டியில் காய தழும்பு, இடத கால் முட்டியில் காய தழும்பு உள்ளது. இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் 

    • பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார்.
    • தன்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை முதியவர் திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுத்து ஓட்டிச் சென்று பார்ப்பதாக கூறி சென்றார் ஆனால் வெகுநேரமாகியம் அவர் வராமல் மாயமாகி விட்டார்.

    அப்போது தன்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை முதியவர் திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.

    இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மது போதையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த செல்வம் நகரை சேர்ந்தவர் சகுந்தலா (51). இவர் தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி (70).

    இவர் பெருந்துறை அருகே உள்ள மேற்கு ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று இரவு மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மாத்திரையை (விஷம்) சாப்பிட்டு விட்டு தனது மகள் சகுந்தலாவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக சகுந்தலா தனது தம்பி வெங்கடாசலம் உதவியுடன் கிருஷ்ண சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அழகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது75). இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சந்திரன் அழகர் கோவில் மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அனுப்பானடி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(40). சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிய இவர் விஷம் குடித்து திருமலைநாயக்கர் மகால் முன்பு இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய தெற்குவாசல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ரமேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • குட்டையில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலியானார்.
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தபோது ஏற்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் உள்ள பரியேறும் குட்டையில் நேற்று காலை முதியவரின் உடல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், குட்டையில் பிணமாக மிதந்தவர் அத்தியூர் கக்கன்ஜி நகரை சேர்ந்த முத்து கருப்பன் (வயது 85) என்பது தெரிய வந்தது. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மாலை குளிப்பதற்காக பரியேறும் குட்டைக்கு சென்றார். அப்போது குட்டை தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×