search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளுநர்"

    • சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
    • சம்மனில் விசரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

    செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    இருவரும் விசரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதானியை வளர்த்துவிட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள்?
    • ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. தண்ணீருக்காக அடுத்த மாநிலங்களில் கையேந்தும் நிலை இருக்கின்றவரை இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும். இதன் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும்.

    பா.ஜ.க. கடந்த ஒன்பது ஆண்டுகளில் எந்த சாதனையும் செய்யவில்லை. நாடும் நாட்டு மக்களும் பட்டிருக்கின்ற வேதனைகளை தான் விளக்கி பேச வேண்டும். அதானியை வளர்த்துவிட்டதை தவிர இவர்கள் வேறு என்ன சாதனை செய்தார்கள்? எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்ததை தவிர வேறு என்ன செய்தார்கள். எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை.

    கலைஞர் கருணாநிதி இருக்கும்போதே ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார். அதே போன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கி விடுவார். இரண்டு பேருமே எதுவுமே செய்யவில்லை. தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் மக்களுக்கான சேவை அரசியல் கிடையாது, செயல் அரசியலும் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே விளம்பரம் செய்து கொள்கிறார்கள், அதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்.

    செப்டம்பரில் மகளிர் உரிமை தொகை கொடுக்க உள்ள நிலையில், அதனை தற்போதிலிருந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். மாநிலங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போன்று ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.

    இஸ்லாமிய சிறை கைதிகளை இவர்கள் விடுதலையும் செய்யமாட்டார்கள். அதே போன்று சிறப்பு முகாமில் உள்ளவர்களையும் விடுதலை செய்யமாட்டார்கள். அதற்கு வேறு ஆட்சி மாறினால் தான் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
    • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

    இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
    • சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான  அறிக்கை கேட்டுள்ளார்.

    • சென்னை அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
    • திராவிட மாடல், தமிழ்நாடு உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் புறக்கணித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து இன்று நடந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் மறைவுக்காக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    நாளை (11-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கோவிசெழியன் ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது. இதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.

    சட்டசபையில் நேற்று கவர்னர் உரை நிகழ்த்தியபோது சில வாசகங்களை தவிர்த்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கவர்னர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

    சட்டசபையில் கவர்னரை தாக்கி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசக்கூடாது. பேனர், சுவர் விளம்பரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இக்கூட்டம் சில நிமிடங்களில் முடிந்தன.

    • சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.
    • ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேட்டி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று நாகர்கோவில் வந்தார். ஒழுகினசேரி 4 வழிச்சாலையில் வைகோவிற்கு குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தேவராஜ், பொருளாளர் பிச்சைமணி, மாநில மகளிரணி துணை செயலாளர் ராணி செல்வின், ஆபத்து உதவியாளர் அணி மாநில இணை செயலாளர் சுமேஷ், ஒன்றிய செயலாளர் நீலகண்டன், மாணவரணி அமைப்பாளர் சோனிராஜு, தொண்டரணி துணை அமைப்பாளர் அஸ்வின், மர்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சங்கரலிங்கம் நாடார் எந்த கொள்கைக்காக எந்த கோரிக்கைக்காக விருதுநகரில் 28 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்தாரோ, அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபையில் அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரை சூட்டினார்.

    அப்படி சூட்டப்பட்ட இந்த பெயரை மாற்றுகிற விதத்தில் தமிழகம் என்று அழைக்கலாம் என்று எங்கோ இருந்து வந்து அகந்தையின் உச்சக்கட்டத்தில் இந்த மாநிலத்தின் கவர்னர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார்.

    தமிழ்நாடு என்ற பெயரை மாற்றலாம் என்ற யோசனையைச் சொல்வதற்கு இவர் யார்? தமிழ்நாட்டில் சம்பளம் வாங்கிக் கொண்டு இப்படி திமிர்வாதம் பேசுகின்ற இந்த கவர்னர் அகற்றப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும். சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். தவறாகக் சொல்லிவிட்டேன் என்று அவர் செல்ல வேண்டும். நான் கவர்னருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கவர்னரை பின்னால் இருந்து இயக்குவது சங்பரிவார் சக்திகள், இந்துத்வா சக்திகள் மதவாத சக்திகளுக்கு அந்த அளவு தைரியம் இல்லை. இவரை ஊதுகுழலாக வைத்துக் கொண்டு இந்த கருத்தைக் சொல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றவாளிகள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்ட கூடாது என்று கூறினார்.
    • ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காருடன் இழுத்து செல்லப்பட்டு, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது:

    கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்து சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

    குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களில் அரிதினும் அரிது இந்த சம்பவம்.

    இதுபற்றி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடமும் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என்று கூறினேன். ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்து உள்ளார்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    • அவரவர்களுக்கு தேவையான மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் வேண்டும்.
    • இதை சொன்னவுடனேயே மொழி திணிப்பு என்று சிலர் தவறாக முன் நிறுத்துகிறார்கள்.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழாவில் கலந்து கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: 


    மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்றுக் கொள் என்ற சொன்னவுடனேயே அதை திணிப்பு என்று தவறாக முன் நிறுத்துகிறார்கள், இது திணிப்பு அல்ல. இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும். நம் தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்படுகின்றன.
    • ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

    நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை.

    சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி இதை உணர்ந்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசைவில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

    கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். முழுமையான தடை என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது.

    இது பகுதி தடை தான்; தேவையான அளவிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.

    மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.
    • வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக சேர்க்க பேசி வருகிறேன்.

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 406 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 49 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கினார். விழாவில் உரையாற்றிய அவர் கூறியதாவது :

    புத்தக கல்வி அறிவு மட்டும் இன்றைய சமூகத்தில் போதாதது. அதைத்தாண்டி திறன் சார்ந்த கல்வியும் தேவைப் படுகிறது. நீங்கள் இன்னும் தொடர்ந்து வளர வேண்டும். இந்த பட்டம் முடிவு கிடையாது. உங்கள் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும். நம் நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக நாம் இருப்போம். போட்டி நிறைந்த உலகில் நாம் இருக்கிறோம். சுலபமாக வளர்ச்சி இருக்காது. முயன்று முன்னேற வேண்டும். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.

    திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். இதற்கு திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும். அதன் ஒரு கட்டமாக காசி தமிழ் சங்கத்தில், பிரதமர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இதேபோல், வடகிழக்கு மாநிலங்களின் பாடத் திட்டங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக சேர்க்க முதலமைச்சர்களுடன் பேசி வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது

    காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்.

    இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

    மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

    வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ‌.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக முதல் குழுவை ஆளுநர் இன்று வழி அனுப்பி வைக்கிறார்.
    • தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்குகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வின் கீழ், தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் டிசம்பர் 16ந் தேதிவரை ஒரு மாத காலம் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றன. 


    இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மை குறித்து கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு மாநில மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முதல் குழு இன்று ரெயில் மூலம் வாரணாசி புறப்பட்டுச் செல்கிறது.

    216 பேர் அடங்கியுள்ள இந்த குழுவில் 35 பேர் ராமேஸ்வரத்தில் இருந்தும், 103 பேர் திருச்சியில் இருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரில் இருந்தும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கொடி அசைத்து அவர்களை வழி அனுப்பி வைக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×