search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213159"

    • மதுரையில் வேலை வாங்கி தருவதாக கூறி காரை பறித்த கும்பல் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில், ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் மாரியப்பன் (56), அவரது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் மகன் தங்கராஜ் (26) ஆகிய 3 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். அதனை நம்பி, நான் அவர்களுக்கு பாண்டியராஜ் என்பவரை அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டியராஜ் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தங்கராஜ் குடும்பத்தினர் எனக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்தனர். அதனை அவர்கள் இதுவரை திருப்பி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.
    • தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று. இந்த ஆலையில் 94 நிரந்தர தொழிலாளர்களும், தினக்கூலியாக 206 பேரும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஆைல நிர்வாகம் பஞ்சு விலை அதிகரிப்பை காரணம் காட்டி பாதிக்குமேல் எந்திரங்களை நிறுத்திவிட்டது.

    மேலும் தொழி லாளர்களை விடுப்பு களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி வேலைக்கு வரவேண்டாம் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குறைந்த சம்பளத்துக்கு படிப்படியாக வடநாட்டு வாலிபர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக சிலருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு .தொழிற்சங்கம் ஆகியவை ஆலைக்கு முன்பு சி.ஜ.டி.யு. சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் தி.மு.க. தொழில் சங்க பொதுச்செயலாளர் மகாராஜாபிள்ளை, மாவட்ட தலைவர்மாடசாமி மாநில தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் இளங்கோ, அழகம்பெருமாள், நம்பி ராஜன் சி.ஐ.டி.யு. சங்க பொறுப்பாளர் வடிவேல், குமார், தாலுகா செயலாளர் மிக்கேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் ஜெயக்குமார் உள்பட பலர் கொட்டும் மழையில் ஆண்களும், பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு அவர்களை வெளியேறும் வரை காத்திருப்புப் போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை சரியான முறையில் வழங்க வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் உள்ளே புகுவதை நிறுத்த வேண்டு மென்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

    • தோல்வி என்பது நம்மை தகுதியற்றவர் என்று நிராகரிக்கவில்லை.
    • உழைப்பாளிகள் தோற்றதாக வரலாறே கிடையாது.

    தொழில் முனைவர், திட்ட அறிக்கைகளை தயாரித்து அவற்றின்படி நிறுவனத்தை நடத்துவது ஒரு புறம் இருக்க, தொழிலை தொடங்குவதற்கு முன்பே இது போன்ற வேறு சில கேள்விகளையும் அவர் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

    தொழில் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் சரிவை சந்தித்தால் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

    ஆறு மாத்திற்குள்ளோ, அல்லது ஆறு மாதங்கள் கழித்தோ சரிவை சந்தித்தால் என்ன செய்யலாம்?

    ஒரு ஆண்டிற்கான குறைந்த பட்ச வருவாயை ஈட்டுவதற்கு உத்தரவாதம் தரக்கூடிய வழிவகைள் என்ன?

    ஒருவேளை தொழில் மிகப் பிரமாதமான வெற்றியை பெற்றால் அதற்கேற்றவாறு எப்படி விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

    இப்படி தமக்குள் பல கேள்விகளை கேட்டு அதற்கான விடைகளை தெளிவாக தொழில்முனைவோர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். தேர்வுக்கு செல்கின்ற மாணவர்கள் எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதிலை தயாரித்து வைத்திருக்கிறார்களோ அது போலத்தான் தொழில்முனைவரும் தங்களை தயாரித்து கொள்ள வேண்டும். தொழில் தொடங்கிய பிறகு ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் ஒரு தொழில் முனைவோருக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்க கூடாது. ஒரு தொழில் முனைவோரின் பலமே சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் காய்களை மாற்றி நகர்த்துவது தான்!

    வெற்றிக்கு விளக்கங்கள் தேவை இல்லை. ஆனால் தோல்வி அடைந்த பிறகு நீங்கள் மேற்கொண்ட முடிவுகளுக்கெல்லாம் காரணங்களை சொல்லியாக வேண்டும். ஒருவர்தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த நிலையும் மாறும் என்ற மனோதிடம் இருந்தால் மீண்டும் வெற்றிக்கனியை பறித்துவிட முடியும். தோல்வியை நாம் இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். ஒன்று, தோல்வியை நீங்கள் எப்படி உள்வாங்குகிறீர்கள்? இரண்டாவது, தோல்வியை நீங்கள் எப்படி வெளி உலகிற்கு சொல்கிறீர்கள்? தோல்வி என்பது என்ன? நினைத்த இலக்கை அடையாதிருத்தல் தான் தோல்வி ஆகும். அப்படியானால் தோல்வியானது நிரந்தரமானதல்ல.

    நாம் அடுத்த சில ஆண்டுகள் கழித்து அந்த இலக்கை அடைந்தோமானால் தோல்வியே கூட வெற்றியாக மாறி விடும். எனவே தோல்வி ஏற்படும் போது அதை தோல்வியாக கொள்ளாமல் வெற்றி தள்ளிப்போவதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

    எது நடப்பினும் அது நல்லதற்கே என்று நினையுங்கள், கரியானது பூமியில் அமுங்க, அமுங்கத்தான் வைரமாக மாறும். உங்களிடம் இருக்க கூடிய ஏதோ ஒரு திறமையை வெளிக்கொணர்வதற்காகத் தான் இந்த தோல்வி உங்களுக்கு ஏற்பட்டது என்று கருதிக் கொள்ளுங்கள்.

    நீங்கள் சிந்தித்த அளவு போதாது என்பதை தான் அது சொல்கிறதே தவிர, நீங்கள் சிந்திக்கவே இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் உழைத்த அளவு போதாது என்பதை தான் அது சொல்கிறதே தவிர, உழைக்கவே இல்லை என்று மறுக்கவில்லை.

    ஆக தோல்வி என்பது நம்மை தகுதியற்றவர் என்று நிராகரிக்கவில்லை. இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறது. இனி உலகிற்கு தோல்வியை எப்படி அறிவிக்கப்போகிறீர்கள்? இது போன்ற தொழில்கள் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். போகப்போக மிகுந்த லாபம் தரும் என்றும் வெற்றிக்கு முந்தைய படியில் நான் நின்று கொண்டிருக்கிறேன் என்றும் நேர்மறையாகவே வெளியில் சொல்லுங்கள்.

    அது போல் சிரித்த முகத்துடன் இன்னும் கூடுதலாக உழைக்க தொடங்குங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எந்த தோல்வியும் இவரை தடுத்துவிட முடியாது என்று நினைக்க வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் வேகம் அதிகரிக்க வேண்டும்.

    ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். திறமைசாலிகள் தோற்கலாம். தந்திரசாலிகள் தோற்கலாம். ஆனால் உழைப்பாளிகள் தோற்றதாக வரலாறே கிடையாது...!

    • கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்ப நாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அத்தியப்பகவுண்டன்புதூர், சின்னட்டிப்பாளையம், டி.ஜி.புதூர், அரசூர், இண்டியன் பாளையம், காளிகுளம், குப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்க தயாரிக்கப்படும் செங்கற்கள் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே செங்கல் சூளைகளுக்கு செங்கல் அறுக்க தேவைப்படும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பெரும்பாலான செங்கல் சூளைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மண் தீர்ந்த நிலையில் தற்போது புதியதாக செங்கல் தயார் செய்ய தேவைப்படும் மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்காததால் தற்போது சத்தியமங்கலம் சுற்று–வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை–வாய்ப்பு இழந்து தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு–றியாகி உள்ளது.

    இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது:-

    இப்பகுதியில் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள நிலையில் செங்கல் தயாரிப்பதற்காக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த போதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று மண் எடுக்க அனுமதி வழங்குமாறு கேட்டால் இன்னும் எங்களுக்கு சுற்றறிக்கை வரவில்லை என தெரிவிக்கின்றனர்.

    இதனால் தற்போது செங்கல் சூளைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வா–தாரம் கேள்விக்குறியா–கியுள்ள நிலையில் அவர்களின் குழந்தைகளின் கல்விகளும் பாதிக்கப்பட்டு–ள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம், அரசு இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் செங்கல் தயாரிப்பதற்காக தேவைப்படும் மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இந்த இணையதளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது.
    • பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கிறது.

    திருமணமான பெண்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார், பெங்களூருவை சேர்ந்த நேஹா பகாரியா. அதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதன் மூலம் வேலைவாய்ப்புடன், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இந்த இணையதளம் முழுக்க, முழுக்க பெண்களுக்கானது. கடந்த 7 ஆண்டுகளாக இலவச சேவையை மேற்கொண்டு வரும் நேஹாவிடம் பேசினோம்.

    ''நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு திருமணமாகி, இரு மகன்கள் இருக்கிறார்கள். நான் பென்சில்வேனியா நாட்டில் பார்மசுட்டிகல் படித்ததோடு, மனிதவள மேம்பாட்டு துறையிலும் பட்டம் பெற்றேன். பின்பு மருத்துவ துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினேன். திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் அலுவலக வேலையில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய மகன்கள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தவுடன், எனக்கான ஓய்வு நேரம் அதிகரித்தது.

    அதனால் மீண்டும் பணியாற்ற ஆரம்பித்தேன். ஆனால் பழைய வேகமும், புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மையும் குறைந்திருந்தது. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப என்னை நானே புதுப்பிக்க (அப்டேட்) வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் என்னை போன்று சிறு இடைவேளைக்கு பின்பு பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்த ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் ஜாப்ஸ் பார் ஹெர்'' என்றவர், பிரத்யேக இணைய தளத்தின் செயல்பாடுகளை விளக்குகிறார்.

    ''இந்த இணையதளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. குறிப்பாக திருமணம், இல்லற வாழ்க்கை, குழந்தைகள் என குடும்ப பந்தம் ஏற்படுத்திய இடைவேளைக்கு பின்பு வேலை தேடும் குடும்ப தலைவிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடியது. மேலும் புதிதாக வேலைத்தேடும் கல்லூரி மாணவிகளுக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.

    சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், தொழில்துறை நிறுவனங்களும் இந்த இணையதளத்தோடு இணைந்து செயல்படுவதால், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. கடந்த வருட கணக்கின்படி, 50 ஆயிரம் பெண்கள் 'ஜாப்ஸ் பார் ஹெர்' இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 7 ஆயிரத்து 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் எங்கள் இணையதளத்தோடு கைகோர்த்திருப்பதால், பெண்கள் விரும்பும் வேலையை, அவர்கள் விரும்பும் பகுதிகளிலேயே பெற முடிகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு பெண்கள் அதிகமாக பயன்பெறுகிறார்கள்'' என்றதோடு, இணையதளம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகிறார். அதை அவரே விவரிக்கிறார்.

    'வழக்கமான வேலை தேடல் இணையதளங்களை போன்றே, எங்கள் இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்கி, தங்களை பதிவு செய்து கொண்டால் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பகிரப்படும். மேலும் சுயவிவர பட்டியல் (ரெஸ்யூம்) உருவாக்குவதில் தொடங்கி, பணிக்கான அழைப்பாணை பெற்றுத் தருவது வரை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். எல்லா பெண்களும், எல்லா துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்.

    ஆனால் அவர்களது ஆங்கில எழுத்து நடையில் நிறைய தவறுகள் இருக்கும். சில பெண்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத வரும், ஆனால் அவர்களால் திறம்பட பேச முடியாது. இதில் இரண்டிலும் சிறப்பானவர்களுக்கு, தேர்வாளர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல முடியாது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் இருக்கின்றன. அதை தீர்த்து வைப்பதும் எங்களுடைய வேலை தான். வேலைதேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதுடன், நேர்காணலில் சொதப்புபவர்களுக்கு தகுந்த பயிற்சியும் வழங்குகிறோம்.

    2015-ம் ஆண்டின் பெண்கள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதள சேவையில் வேலைவாய்ப்புடன், அது சம்பந்தமான எழுத்துத்திறன் பயிற்சி, பேச்சுத்திறன் பயிற்சி, மென்பொருள் பயிற்சி என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றவர், 'இணையதள சேவையில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன' என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.

    ''ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இருமுறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் இணையதள பக்கத்திலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த வகுப்பில் பங்கேற்று, திறமைகளை வளர்த்து கொள்ள முடியும். அதேசமயம் இணையதள இணைப்பில் இருக்கும் துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகளையும் தனிப்பட்ட முறையில் கேட்கலாம்.

    இது ஒரு ரகம் என்றால், ஆப்-லைன் வகுப்புகள் அடுத்த ரகம். இந்த வகுப்புகள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம். குடும்ப தேவைகளுக்காக சில பெண்கள் வேலை தேடுகிறார்கள். சிலர் சமூக அடையாளத்திற்காக பணியாற்றுகிறார்கள். சிலர் மன நிறைவிற்காக பணியாற்றுகிறார்கள். இப்படி ஒவ்வொரு பெண்களுக்கும் ஒருவிதமான தேவையிருப்பதால் குடும்ப தலைவிகளின் அலுவலக பணி, மன நிறைவான பணியாகவே அமைகிறது.

    * திருமணமான பெண்கள், அலுவலக வாழ்க்கையை விரும்புகிறார்களா?, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமா?

    பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மென்பொருள் பொறியாளர், டீம் லீடர்... போன்ற முக்கிய பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ஓரளவிற்கு செட்டில் ஆகியதும், மீண்டும் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை தேடுகிறார்கள். குறிப்பாக பிள்ளைகளுக்கு பள்ளிகளை தேடும்போதே, தங்களுக்கான புது அலுவலகத்தையும் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். மனைவியாக, தாயாக... 6 அல்லது 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு, அந்த பணியோடு புதிதாக கிடைத்திருக்கும் அலுவலக பணியையும் தொடருகிறார்கள்.

    • ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் சுமார் 186 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர்.
    • கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது

    கோவை:

    கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பிளக்ஸ் பேனர் அமைத்தும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சிங்கப்பூரில் பிரபல கம்பெனிக்கு மாதம் ரூ. 3 லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், சிவில் என்ஜினீயர், சூப்பர்வைசர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் வடவள்ளி ஏஜென்சி அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது விசா, பயண கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனை நம்பி ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அவர்கள் சொன்ன வேலைக்கு தகுந்தவாறு ரூ. 1 லட்சம், 1.5 லட்சம், 2 லட்சங்கள் என ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணம் செலுத்தினர். பின்னர் எங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகிவிட்டது என போலியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

    இது தொடர்பாக ஏஜென்சி நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நேரில் சென்று பார்த்தபோது அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

    ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் சுமார் 186 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர். எனவே வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

    • வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலியான நிறுவன பெயரில், போலியான ஆவணங்களை அனுப்பி நம்ப வைத்து பல்வேறு கட்டணங்களை வசூலித்து ஏமாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ரோஸ் நகரைச் சேர்ந்தவர் தக்கலை பீர்முகமது. இவரது மகன் முகமது அப்துல் அப்பாஸ் (வயது21). இவர் டிப்ளமோ மரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு இணையத்தில் வேலை தேடிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் பெயரில் கப்பலில் டி.எம்.இ. வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தனது சுய விபரத்தினை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பிய அப்பாஸ் அவர்கள் தெரிவித்தபடி உரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து மின்னஞ்சலை பார்த்தபோது அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வந்தது.

    இந்த தகவலை நம்பி, அவர்கள் கூறிய தகவலின்படி அவர்களால் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணையில் ரூ1.95 லட்சம் அனுப்பி உள்ளார்.

    ஆனால் பணி குறித்து எந்த தகலும் அதன்பின் இல்லை. வேலைக்கு சேருவது குறித்து விபரம் கேட்ட போது சரியான பதில் தெரிவிக்காமலும், தொடர்பினை தவிர்த்த காரணத்தினை அறிந்து, சந்தேகம் ஏற்பட்டு இணையதளத்தில் தேடி பார்த்த போது ஏமாற்றுக்கா ரர்கள் என தெரியவந்தது. போலியான நிறுவன பெயரில், போலியான ஆவணங்களை அனுப்பி நம்ப வைத்து பல்வேறு கட்டணங்களை வசூலித்து ஏமாற்றினர். இது குறித்து பணத்தை இழந்த அப்பாஸ் ராமநாதபுரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
    • இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி பணி வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையின் பேரில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் கடந்த 9-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேரந்த 182 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 7 நபர்க ளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒரு நபர் சிறுதொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பணி ஆணையை வழங்கினார்.

    இதுகுறித்து வேலை வாய்ப்பு பெற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கூறியதாவது:

    எனக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். எனது கணவர் திடீரென கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. பெரும் துயரத்தில் இருந்த எங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் புதிய வழியை காட்டியுள்ளது.

    நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். விரைவில் பணியில் இணைகிறேன். இதன் மூலம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் என்னால் உழைத்து எனது மகளை காப்பாற்ற முடியும்.

    இந்த நம்பிக்கை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சர், அமைச்சர், கலெக்டர் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழத்தைகள் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை, அடிப்படையாக கொண்டு ஆண்டு குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இத்தசட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித வேலைக்கு அனுப்புவதும், 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயக ரமான தொழில் களில் ஈடுபடுத் துவதும் தடை செய்யப்பட்ட டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராத மாகவே அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

    இந்த சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கு தண்ட னை வழங்க இந்த சட்டத்தின் வழி வகை செய்யப் பட்டுள்ளது. அதன்படி 2-வது முறை யாக இச்சட்ட விதி களை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கும் அல்லது பாது காவலருக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவ னங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்டட குழந்தைகளை எந்தவித வேலைக்கும் அனுப்புவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான வேலை களில் ஈடுபடுத்தவோ கூடாது.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் அருண்(வயது37).இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை இவருடைய மனைவி வித்யா(34). இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2 வருடங்களாக கணவர் வேலைக்கு செல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அருண் மனைவி வித்யாவை தாக்கியுள்ளார். இதனால் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    • புகழ்ச்சியை விரும்பும் பெண்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள்.
    • கடுமையான உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி மட்டுமே உண்மையானது.

    பெண்கள் தற்போது இரண்டு விஷயங்களில் வெற்றிவாகை சூட விரும்புகிறார்கள். ஒன்று: திருமணமாகி, பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக திகழ்ந்து அதில் வெற்றிபெறுவது. இரண்டு: இளம் பருவத்தில் தன்னிடம் இருந்த திறமையை திருமணத்திற்கு பிறகு மீண்டும் மெருகேற்றி தொழில் துறையில் இறங்கி சாதிப்பது.

    "முந்தைய பெண்கள் குடும்ப வாழ்க்கை வெற்றி மட்டுமே போதும் என்று நினைத்து அதிலே திருப்திபட்டுக்கொண்டார்கள். இன்றைய பெண்கள் அது மட்டும் போதாது, வெளிஉலகுக்கு வந்து தங்கள் திறமைக்கு புத்துயிர்கொடுத்து ஏதாவது ஒரு துறையில் ஈடுபட்டு அதிலும் வெற்றிக்கொடி நாட்டவேண்டும் என்று கருதுகிறார்கள். குடும்ப நிர்வாகத்தின் மூலம் அவர்களுக்கு நல்ல அனுபவமும், பக்குவமும் கிடைப்பதால், அதன் பின்பு அவர்கள் தொழில்துறைகளில் இறங்கி சாதிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகிவிட்டன" என்கிறார், சுமதி ஸ்ரீனிவாஸ். இவர் பெண்களுக்கான தொழில்துறை வழிகாட்டி.

    'மிஸஸ் ஹோம்மேக்கர்' என்ற பிரபலமான டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் பல ஆண்டுகளாக பெண்களின் மத்தியில் செயல்பட்டு, குடும்பத்தலைவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களை தொழில்துறையிலும் ஜொலிக்கவைத்திருக்கும் இவர், 'இந்திய பெண்களின் திறமைகளும், வளர்ச்சியும்' என்ற தலைப்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், சிறப்பு அழைப்பாளராக உரையாற்றியவர். அமெரிக்காவில் நடந்த பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தவர். சிறந்த பெண்மணிக்கான விருதை சிங்கப்பூரில் பெற்றவர்.

    குடும்பத்தலைவிகளின் ஆளுமைத்திறன் மற்றும் தொழில் திறன் வளர்ப்பு ஆலோசகராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் சுமதி ஸ்ரீனிவாசுடன் நமது சந்திப்பு:

    உங்கள் குடும்பம் மற்றும் கல்வி பின்னணி பற்றி கூறுங்கள்?

    நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். எனது பெற்றோர் குணசேகர்- சுகுணாவதி. சர்ச் பார்க் கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்சி. படித்தேன். பின்பு எம்.ஏ. சமூகவியல் கல்வியும் கற்றேன். பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அதன் மூலம் வெற்றித் தோல்விகளை சமமாக பாவிக்கும் பண்பு வளர்ந்தது. பள்ளி நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் அப்போதே என்னிடம் உருவாகிவிட்டது. பள்ளி, கல்லூரி இரண்டிலும் பெண்களுடனே படித்ததால், பெண்களின் மன இயல்புகள், புரிதல்கள், விருப்பங்கள் பற்றி இளம் வயதிலே நன்றாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

    குடும்பத் தலைவியான பின்பு உங்கள் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது?

    கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் நடந்தது. என் கணவர் ஸ்ரீனிவாஸ். எங்களுக்கு இரண்டு மகன்கள். நான் பள்ளியில் படிக்கும்போதே தையல் மற்றும் சமையல் கலை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஐஸ்கிரீம், கேக் தயாரிப்பதெல்லாம் எனக்கு அத்துப்படியான விஷயம். எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் சமையல் தெரிந்திருக்கவேண்டும் என்பது என் கருத்து. குடும்பத்தை நிர்வகிப்பதற்கு தேவையான விஷயங்களையும் என் தாயார் எனக்கு கற்றுத்தந்திருந்தார். கணவர் மூலமும் எனக்கு சிறந்த அனுபவங்கள் நிறைய கிடைத்தன.

    குடும்பத்தலைவியான நீங்கள், பெண்கள் நலன் சார்ந்து செயல்பட எப்படி தயாரானீர்கள்? அதற்கான காரணம் என்ன?

    நான் ஏராளமான கலைப் பயிற்சிகளை பெற்றிருந்தாலும், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த கல்விகளை கற்றிருந்தாலும் குடும்பத்தை மட்டுமே கவனித்துக்கொள்ளும் பொறுப்பே போதும் என்று நினைத் திருந்தேன். ஆனால் திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, நான் வெளிஉலகத்தை நோக்கி காலடி எடுத்துவைக்கும் சூழ் நிலையை உருவாக்கியது. பணத்தேவைக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என்னிடம் இருந்த திறமையை பயன்படுத்தி, நெருக்கமானவர்களுக்கு முதலில் 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுத்தேன். அதில் அதிக வரவேற்பு கிடைத்ததால் அதையே தொழிலாக்கினேன். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறேன். கடமை உணர்வோடு அதை புதுமையான முறைகளில் செய்துகொண்டிருக்கிறேன்.

    எனக்கு ஆயிரக்கணக்கான பெண்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் திறமையுள்ள குடும்பத்தலைவிகளில் பலர் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பதையும், அவர்கள் வெளி உலகிற்கு வந்து சாதிக்க விரும்புவதையும் அறிந்தேன். அவர் களுக்கு வழிகாட்டுவதற்காக 'மிஸஸ் ஹோம் மேக்கர்' என்ற திறமை அறியும் தொடரை பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரபலமான டி.வி.களில் நடத்தி ஏராளமான பெண்களுக்கு வழிகாட்டினேன். அவர்கள் எனது பயிற்சியாலும், தங்கள் முயற்சியாலும் சிறந்த தொழிலதிபர்களானார்கள். இப்போதும் சோல்மேட் பவுண்ட் டேஷன் என்ற அமைப்பு மூலம் குடும்பத்தலைவி களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறேன்.

    நீங்கள் தொழில்துறைக்கு அறிமுகமான காலகட்டத்தில், உங்கள் திறமையை நிரூபிக்க எந்த மாதிரியான சவால்களை எல்லாம் எதிர்கொண்டீர்கள்?

    அது ஒரு கடுமையான காலகட்டம். எனக்கு ஏற்பட்டது போன்ற நெருக்கடியை தொழில்துறைக்கு வர விரும்பும் பெரும்பாலான பெண்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். நான் வெளிஉலகத்தில் காலடி எடுத்துவைத்தபோது, சாதிப்பேனா- சறுக்கிவிழுந்துவிடுவேனா என்ற பயம் என் குடும்பத்தினருக்கு இருந்தது. என் உழைப்பு மூலம் அந்த பயத்தை போக்க வேண்டியதிருந்தது. அடுத்து அவர்களுக்கு எனது திறமையை நிரூபித்துக்காட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காக புதுமையாக சிந்தித்து, கடுமையாக உழைத்தேன். யாரையும் எதிர்பார்க்காமல் என் வேலையை செய்தேன். என்னால் முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் என்னாலும் முடியும் என்ற தெளிவை உருவாக்கினேன்.

    நான் தொடக்க காலத்தில் கடைப்பிடித்த முக்கியமான நடைமுறை ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் அப்போது நிகழ்ச்சிகளுக்காக தினமும் ஐந்து பேரை சந்திக்கிறேன் என்றால், அவர்கள் ஒவ்வொருவர் செயல்பாடுகளையும் நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அவர்கள் அணுகுமுறை, குணாதிசயங்கள் பற்றி அன்றன்று டைரியில் எழுதிவிடுவேன். அது, அவர்களை அடுத்தடுத்து நான் சந்தித்து சிறப்பாக செயல்பட கைகொடுத்தது. அப்படி நான் எடுத்துள்ள குறிப்புகள் மூலம் மனித உணர்வுகளை நன்றாக கற்றுக்கொள்ள முடிந்தது. அப்படி நான் பாடம் போல் கற்றுக்கொண்ட விஷயங்களை எல்லா பெண்களுக்கும் இப்போது கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

    குடும்பத்தலைவிகளை தொழிலதிபர்களாக்குவது எளிதான காரியமா? அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன?

    குடும்பத்தை நன்றாக நிர்வகிக்கத் தெரிந்த ஒவ்வொரு பெண்ணாலும் சிறந்த தொழிலதிபராக முடியும். ஏன்என்றால் ஒரு தொழிலதிபருக்கான அடிப்படை தகுதி அவளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதிலே கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களது திறமையை அவர்களே உணராமல் இருப்பதும், வெளி உலகத்தை அணுக அவர்கள் தயங்குவதும்தான் அவர்களிடம் இருக்கும் குறை. சில குடும்பங்களில் பெண்களை மட்டம்தட்டியே வைத்திருப்பார்கள். அதனால் அவர் களுக்கு சிந்திக்கும் ஆற்றலும் குறைந்திருக்கும்.

    அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவேண்டும். இருக்கிற திறமையை மேம்படுத்துவது, வீட்டில் உள்ளவர்கள் குறைசொன்னாலும் மனதொடிந்து போகாமல் இருப்பது, ஒருபோதும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தை கையாளுவது, அவமானம் ஏற்பட்டாலும் துவண்டுபோகாமல் நிமிர்ந்து நிற்பது, வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி வேறு- வெளியே செயல்படும் பெண் வேறு என்று பகுத்து உணர்வது, யாரையும் காயப்படுத்தாமல் விஷயத்தை புரியவைப்பது, ஈகோ இல்லாமல் நடந்துகொள்வது போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்து வழிகாட்டவேண்டும்.

    35 முதல் 45 வயது வரையிலான பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்களிடம் தொழில் ஆர்வம் மிகுந்திருக்கிறதா?

    இந்த வயது பெண்களிடம் உடல் பலத்தோடு மனபலமும் அதிகமாக இருக்கிறது. நாம் ஒரு நல்ல அம்மா மட்டுமல்ல அதற்கு மேலும் நமது திறமையை வெளிப் படுத்த வேண்டும் என்ற உத்வேகம் வருகிறது. 35 முதல் 45 வயதுதான் பெண்களின் வாழ்க்கையில் சிறந்த வயது. இந்த பருவத்தில் தோற்றம், சிந்தனை, செயல் அனைத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இது அவர்கள் வெளிஉலக தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும், தொழில் தொடங்கவும், கடுமையாக உழைக்கவும் ஏற்ற பருவம்.

    தொழில்துறைக்கு வர விரும்பும் பெண்கள் தவறான வழிகாட்டிகளால் பாதிக்கப்படவும் செய்வார்கள் அல்லவா?

    சரியாக வழிகாட்டுகிறவர்களும், வீழ்ச்சியிலும் உடன் இருந்து நம்பிக்கையூட்டுகிறவர்களும் இப்போது குறைந்துவிட்டார்கள். தயக்கங்களோடு தொழில்துறைக்கு வரும் பெண்களை தடுமாறச்செய்கிறவர்களும் இருக்கிறார்கள். அதிகமாக பாராட்டுகிறவர்களை பெண்கள் முழுமையாக நம்பிவிடக்கூடாது. ஆனால் உண்மையான விமர்சனங்களுக்கு செவிசாய்க்கவேண்டும். பெண்கள் யாரை நம்பியும் தங்கள் குடும்ப விஷயங்களை கூறக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.

    இப்போதும் பெண்கள் புகழ்ச்சிக்கு அடிமையாகிவிடுகிறார்களா? பெண்கள் முன்னேறும்போது மிகவும் கவனிக்கத்தகுந்த விஷயங்கள் என்னென்ன?

    புகழ்ச்சியை விரும்பும் பெண்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். பெண்களை பாராட்டுவதற்காகவே பிறவி எடுத்திருப்பதுபோல் ஒருசிலர் நடந்துகொள்வார்கள். அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். புகழ்ச்சியை எல்லா பெண்களும் ரசிப்பார்கள். ரசிப்பதோடு நிறுத்திவிட்டு, புன்னகையோடு அந்த இடத்தில் இருந்து அகன்றுவிடவேண்டும். கடுமையான உழைப்பின் மூலம் கிடைக்கும் வெற்றி மட்டுமே உண்மையானது.

    பெண்கள் தொழில்துறையில் இறங்கட்டும்! சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழட்டும்!

    சுமதி ஸ்ரீனிவாஸ்

    • கல்வியறிவு இல்லாதவர்களும் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்ட முடியும்.
    • சிறந்த சுயதொழில் திட்டங்கள் சிலவற்றை பார்ப்போம்.

    இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெண்களின் வருமானம் குடும்பத்துக்கு அவசியமானது. கல்வியறிவு இல்லாதவர்களும் சுய தொழில் மூலம் வருமானம் ஈட்ட முடியும். அனைவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். அதை மூலதனமாக வைத்து முயற்சிக்க வேண்டும். அவரவர் நிதி நிலைக்கு ஏற்றவாறு சுயமாக தொழில் செய்தால், வருவாய் ஈட்டுவதுடன், மனநிறைவுடனும் வாழலாம்.

    குடும்பத் தலைவிகள் மற்றும் அலுவலகப் பணியில் இருந்து விலகி இருப்பவர்கள் செய்வதற்கான சிறந்த சுயதொழில் திட்டங்கள் சிலவற்றை பார்ப்போம்.

    வெளியூரில் தங்கி படிப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் ஆரோக்கியமான வீட்டு உணவு கனவுதான். நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்கள், வீட்டு சாப்பாடு தரத்தில் கேட்டரிங் தொழில் செய்யலாம். இது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு பாதுகாப்பான ஆரம்பமாக இருக்கும். சரியான நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து கேட்டரிங் ஆரம்பித்தால், சிறந்த லாபம் தரும் தொழில்களில் இதுவும் ஒன்று.

    கேட்டரிங் போல் பேக்கரியும் லாபம் தரக்கூடிய தொழில் தான். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பண்டங்கள் இல்லாமல், சிறுதானியங்களை பயன்படுத்தி அதே பண்டங்களை தயார் செய்து கொடுத்தால் வாங்குபவர், விற்பவர் இருவருக்கும் லாபம் கிடைக்கும். தனித்தன்மையுடன் யோசித்தால் அனைவரது கவனத்தையும் எளிதில் ஈர்க்கலாம்.

    வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குழந்தைகளை சீராக வளர்க்க வேண்டுமே என்ற வருத்தம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் சேர்த்து மற்ற குழந்தைகளையும் பராமரிக்க மையம் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் வருமானத்துடன், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

    செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் என்றால் அது தொடர்பான ஆலோசனைகள் கொடுப்பது, ஓய்வு நேரத்தில் வாடிக்கையாளர்களின் செல்லப் பிராணியை கவனித்து கொள்வது, நடைப்பயிற்சிக்கு கூட்டி செல்வது போன்ற சேவைகள் செய்து அதற்கு ஏற்ற கட்டணம் வசூலித்து சம்பாதிக்கலாம். மேலே குறிப்பிட்ட வழிகளை செய்வதுடன், சமூக ஊடகங்களில் நீங்கள் செய்வதை ஆலோசனை காணொளியாக பதிவு செய்து பகிர்ந்தால் அதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும்.

    இதற்காக தனியாக பயிற்சி தேவை இல்லை. முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்தினால், பெண்களுக்கான அரசின் சில சலுகைகளையும் பெறலாம். இவை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் விரும்பி செய்யும் வேலைகளின் மூலம் வருவாய் ஈட்ட இருக்கும் வழிகள். இதைப் போலவே ஓவியம் வரைதல், சிறு சிற்பங்கள் வடித்தல், செராமிக் ஆர்ட், தையல், வீட்டை அழகுப்படுத்துதல் போன்ற பல வழிகள் உள்ளன.

    ×