search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 213161"

    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார்.
    • வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார்.

    மேட்டுப்பாளையம் 

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை சாலை சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (32). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார். கடந்த மே மாதம் 27-ந் தேதி இவரது மாடு காணாமல் போனது.

    இந்த நிலையில் நேற்று பத்ரகாளியம்மன் சாலை வேல் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மாட்டு கொட்டகையில் மாடு கட்டியிருந்ததை பார்த்த அவர் அங்கு சென்று விசாரித்தார். அதற்கு கோவிந்தன் இது உங்களின் எருமைமாடு என்பது எனக்கு தெரியாது. நான் இதனை கல்லாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரிடம் விலைக்கு வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து வெள்ளியங்கிரி கல்லாறு சென்று ராஜ்குமாரிடம் விசாரித்தார். அப்போது ராஜ்குமார் இந்த எருமை மாடு உன்னுடையது தான், நான் தான் எடுத்து வந்து விற்றேன். உன்னால் என்ன செய்ய முடியும் என்று வெள்ளியங்கிரியை மிரட்டினார்.

    இது தொடர்பாக வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 5 ஆண்டுகளாக முறையான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தூய்மை பணியாளர்கள் புகார் கூறி வந்தனர்.
    • தனியார் தூய்மை பணியாளர்கள் கோவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜியிடம்‌ புகார் மனு அளித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 210 தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 60 பேர் நிரந்தர பணியாளர்கள். ஒப்பந்த பணியாளர்கள் 150 பேர்.

    100 பேருக்கான தூய்மை பணியாளர்களின் பணிகளுக்கு கருப்புசாமி என்பவர் நகராட்சியிடம் ஒப்பந்தம் எடுத்துள்ளார். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி ஊதியமாக ரூ.600 வழங்க தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    இதில் தனியார் ஒப்பந்ததாரர் கருப்புசாமி என்பவர் இவரது தரப்பில் பணியாற்றி வரும் 100 பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளாக முறையான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக தூய்மை பணியாளர்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் நகராட்சியின் சார்பில் இவர்களுக்கு ரூ.355 முதல் ரூ.510 வரை ஊதியம் வழங்கப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் தெரிந்து கொண்டனர்.

    இதனிடையே தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.300 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டும், நிலுவையில் உள்ள ஊதிய தொகையை திரும்ப வழங்க கோரியும் கடந்த இரு வாரமாக தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே நகராட்சி அதிகாரிகள் தனியார் ஒப்பந்த பணியாளர்களிடம் பேசி இந்த மாதம் 5-ந் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் ஊதியத்தை வழங்குவதாக கூறியிருந்தனர். ஆனால் இதுவரை ஊதியத்தொகை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தனியார் தூய்மை பணியாளர்கள் கோவை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பா லாஜியிடம்‌ புகார் மனு அளித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து காவல் துணை ஆய்வாளர்கள் செல்வநாயகம், முருகநாதன் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வா ர்த்தை நடத்தினர். இவர்க ளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினர் உடன் இருந்து இவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடத்தப்பட்டதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.
    • செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    காரமடை

    கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் மூலமாக காரை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் சொகுசு காரை வாடகைக்கு கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பியது. காரை பெற்று ெகாண்ட அஜித் 2 மாதங்கள் வாடகையாக சரியாக ரூ.80 ஆயிரத்தை கொடுத்தார்.

    அதன் பின்னர் அவர் வாடகை தரவில்லை. காரையும் திருப்பி ஒப்படைக்காமல் இருந்து வந்தார். மேலாளர் சரண்சக்திவேல், அஜித்தை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நேரில் சென்று விசாரித்தபோது அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

    அப்போது தான் அஜித் காரை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த அஜித்தை தேடி வந்தனர். சம்பவத்தன்று போலீசாருக்கு அஜித் அவர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று அஜித்தை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மொபைல் ஆப் மூலம் சரண்சக்திவேலிடம் வாடகைக்கு பெற்ற காரை அவர் முத்தையா என்பவருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. ேமலும் இதேபோன்று பல்வேறு மொபைல் ஆப்களின் மூலமாக அவர் கார்களை வாடகைக்கு எடுத்து அதனை அடமானம் வைத்து ஜாலியாக இருந்து வந்ததும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் கார் வாங்கி விற்பதில் முத்தையாவிற்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் கடத்தப்பட்டதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார்.

    அதன்படி அவர் உண்மையாக கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேட்டை சேர்ந்தவர் ராம்கி (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்தநிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் கட்டிட தொழிலாளியுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுமியை ராம்கி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசீயன் விஜய் (20) என்பவருடன் சேர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தஞ்சாவூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கட்டிட தொழிலாளியுடன் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் அவரை திருமண ஆசை காட்டி கடத்தி சென்ற ராம்கி மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராம்கி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த ராம்கி, அவருக்கு உடந்தையாக இருந்த விஜய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
    • ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன் ரித்தீஸ்.

    இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது.

    லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் பின் நகராமல் இருக்க சக்கரங்களுக்கு கற்களை எதுவும் வைக்காமல் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் கருணாகரன் என்பவர் சென்றார். அப்போது அங்கு ரோட்டோரத்தில் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.லாரி தண்ணீர் மூலம் கோவிலில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் லாரி திடீரென எதிர்பாராத விதமாக தானாகவே நகர்ந்து முன்னோக்கி சென்றது. அப்போது ரோட்டோ ரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ரித்தீஸ் மீது லாரி மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ரித்தீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த தீபாஸ்ரீ (15) என்ற சிறுமி காயம் அடைந்தார். மற்ற சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதைகண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவன் ரித்திசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவலை அறிந்ததும் லாரி டிரைவர் கருணாகரன் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த கருணாகரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

    • நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
    • அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி மேலாளராக வேலை செய்து வருபவர் லட்சுமணராஜ் (வயது 56).

    இவர் வேலை செய்யும் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் நிறுவனத்தின் எதிரே உள்ள கட்டிடத்தில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் யாரோ அடையாளம் தெரியாத நபர் உள்ளே புகுந்து செல்போன்களை திருடி செல்வதாக புகார் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிக்க முடிவு செய்தனர். அதன்படி சுப்பிரமணி மற்றும் யுவராஜ் என்பவர்களை காவல் பணியில் ஈடுபடுத்தினர்.

    அவர்கள் இரவு ரோந்து சென்றபோது வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் ஒருவர் செல்வதை பார்த்தனர். உடனே காவலர்கள் 2 பேரும் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த மர்ம நபர் அறையில் இருந்த 3 செல்போன்களை எடுத்து அங்கிருந்து தப்பி சென்றார்.

    பின்னர் அவர்கள் அந்த மர்ம நபரை தேடி சென்றனர். அப்போது அந்த மர்ம நபர் அதே பகுதியை சேர்ந்த அபூகுரைரா (21) என்பது தெரியவந்தது. காவல் பணியில் ஈடுபட்டவர்கள் மர்ம நபர் குறித்து மேலாளர் லட்சுமணராஜிடம் கூறினர். இவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பதுங்கி இருந்த அபூகுரைராவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிறுமி வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.
    • சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் புளியன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 25). இவரது மனைவி அபிராமி (20). இவர்களது ஒரு வயது மகள் தர்ஷா.

    இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிறுமி தர்ஷா வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தார்.பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்று விளையாடினார். அப்போது அவர் அங்கு இருந்த யு.பி.எஸ் வயரை திடீரென எதிர்பாராதவிதமாக தொட்டார். இதில் மின்சாரம் தாக்கி சிறுமி தூக்கி வீசப்பட்டார்.அவரின் சத்தத்தை கேட்டு சிறுமியின் தாயார் அபிராமி அங்கு ஓடி வந்தார். மகள் தர்ஷா மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மகளை மீட்டு மேட்டுப் பாளையம் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச் சைக்கு சேர்த்தார்.

    ஆனால் அங்கு சிறுமி தர்ஷாவை பரிசோ தனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட் டதாக தெரிவித்தார். இதைகேட்டு அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரு வயது சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.

    • 2 வாலிபர்கள் கைது

    கோவை:

    மேட்டுப்பாளையம் ஆணைக்கார வீதியை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது23). லாரி டிரைவர்.

    இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி பின்புறம் அவர் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த சங்கர் நகர் பகுதியை சேர்ந்த அபாபில் (30) மற்றும் கரிமேடு ஆனந்தன் (30) என்பவர்கள் செய்யது அன்வரிடம் கஞ்சா இருந்தால் கொடு என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் தன்னிடம் கஞ்சா இல்லை என்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் செய்யது அன்வரின் கன்னத்திலும் வயிற்றிலும் மாறி மாறி குத்தினார்.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அபாபில் மற்றும் கரிமேடு ஆனந்தன் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் செய்யது அன்வர் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிகளிடம் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
    • பள்ளி இடத்தில் புதிய அறிவு சார் மையம் கட்டுதல் குறித்து விவாதம் நடைபெற்றது

    சிறுமுகை:

    மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. நகர் மன்ற தலைவர் மஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 25 வது தீர்மானமாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022- 2023 ன் கீழ் ஒரு கோடியே 87 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வார்டு எண் 29 மணிநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் எதிர்புறம் உபயோகமற்ற நிலையில் இருந்த பள்ளி இடத்தில் புதிய அறிவு சார் மையம் கட்டுதல் குறித்து விவாதம் நடைபெற்றது.

    இதற்கு அதிமுக வார்டு கவுன்சிலர் 9 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு செயல்படும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் இடப்பற்றாக் குறை ஏற்படும், எனவே பள்ளி வளாகத்தில் அறிவு சார் மையம் அமைக்கக் கூடாது என கூறினர்.

    ஆனால் இதற்கு நகராட்சி ஆணையர் வினோத், இந்த திட்டம் அரசு கொண்டு வந்த திட்டம். திட்டத்தை நிறுத்த முடியாது என்று விளக்கமளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் கூட்டம் முடிந்த பின்னரும் வெளியே செல்லாமல் நகர மன்ற கூட்ட அரங்கில் உட்கார்ந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பூமா, நகராட்சி கமிஷனர் வினோத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்படி அறிவு சார் மையம் அமைக்க ஏற்ற வேறு இடம் தேர்வு செய்யப்படும் எனவும், அதுவரை தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 9 கவுன்சிலர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.  

    • இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பில்லூர் அணை. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டதாகும். நீலகிரி மற்றும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அதன்பின்னர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரப்பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாசில்தார் மாலதி,மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்ட திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 2-ந் தேதி நடக்கிறது.
    • போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திருவிழாவுக்கு வந்து செல்லும் வகையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

    சிறுமுகை :

    கோவை மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்ட திருவிழா வருகிற 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஆகஸ்ட் 2-ந் தேதி நடக்கிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனபத்ர காளியம்மன் கோவிலில் வடக்கு மாவட்ட ஆர்.டி.ஓ.பூமா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு வந்த அனைவரையும் கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் வரவேற்றார். இதில் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் குண்டம் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக வந்து செல்லும் விதத்தில் போக்குவரத்து மாற்றம், குண்டம் இறங்கும் பக்தர்கள் பவானி ஆற்றுக்கு செல்லும் போது உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோவில் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். ஒருவழிப்பாதையாக உள்ள இந்த சாலையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும். திருவிழா முடியும் வரை மின்வாரிய துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், கோவிலை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திருவிழாவுக்கு வந்து செல்லும் வகையில் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் விழாவையொட்டி பவானி ஆற்றில் நீராட செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தீயணைப்புத்துறை சார்பில் நீச்சல் வீரர்கள், தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சுகாதாரத்துறை சார்பில் கோவில் பகுதியில் மருத்துவர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை ஏற்படுத்தி தர தேவையான மருத்துவ வசதிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    இதேபோல கோவில் விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் சில இடங்கள் வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் வர வேண்டி உள்ளது. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    • மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று பொருட்களை மினி வேனில் எடுத்து கொண்டு அங்கு வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இலியாஸ் அஹமத்(19) என்பவரும் அவருடன் ஜிபன் நோமோசுத்ரா (19)என்பவரும் விற்பனைக்காக சென்றனர்.

    விற்பனை முடித்துவிட்டு பணத்தை வசூல் செய்து மீண்டும் 2 பேரும் புஜங்கனூர் உள்ள தொழிற்சாலைக்கு மினி வேனில் வந்தனர். அப்போது கட்டாஞ்சி மலை, தண்டி பெருமாள் கோவில் அருகே வந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.

    மர்ம நபர்கள் அவர்களிடம் இருந்த வசூல் பணம் ரூ.30 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட ெதாழிலாளர்கள் 2 பேரும் அவர்களிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை வாகனத்திற்குள் பதுக்கினர்.

    அவர் கள் கையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மட்டும் மர்ம நபர்கள் பறித்து கொண்டு அவர்களை தாக்கி விட்டு அங்கி ருந்து தப்பி சென்றனர். பயந்துபோன இலியாஸ் அஹ மத் மற்றும் ஜிபன் நோமோ சுத்ரா புஜங் கனூர் தொழிற் சாலை வந்து உரிமை யாளரிடம் சம் பவம் குறித்து கூறினர்.

    இதையடுத்து இலியாஸ் அஹமத் காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.  

    ×