search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவலைக்கிடம்"

    ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்ட நர்சு, வாலிபர் கவலைக்கிடமாக உள்ளதால் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 79 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைதொடர்ந்து அந்த 22 பேரும் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு நர்சு மற்றும் வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 50 டோஸ் வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்த பிறகுதான் அந்த மருந்தை நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கோழிக்கோடு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே மண்ணாச்சேரியில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து என்று கூறி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டனர்.

    மாத்திரை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக 30 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது டாக்டர்களின் அனுமதி இல்லாமல் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு ஊழியர் இந்த மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுபோன்ற வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகாயம் அடைந்த 14 பேரின் நிலை கவலைகிடமாக இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.#bansterlite #sterliteprotest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய கலெக்டராக பதவி எற்ற சந்தீப் நந்தூரி கவலரம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தின் போது 102 பேர் காயமடைந்தனர்.

    இவர்களில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீஸ் தரப்பில் 10 பெண்கள் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நிலவி வரும் பதட்டமான சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பாக வர்த்தகர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    அவர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பபெற வேண்டும், போலீசார் வீடு வீடாக ரோந்து செல்வதை நிறுத்த வேண்டும், நிறுத்தப்பட்ட இணையதள சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எங்களிடம் வைத்துள்ளனர்.



    அதுதொடர்பாக பரிசீலித்து வருகிறோம். மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு உணவு, பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசின் முடிவும் அதுவே என முதல்வர் அறிவித்து உள்ளார்.

    அதன்படி முதல்கட்டமாக ஆலைக்கு செல்லும் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படும் உரிமம் புதுப்பித்தல் சான்று இதுவரை வழங்கப்படவில்லை. அந்த சான்று இருந்தால்தான் ஸ்டெர்லைட் ஆலை செயல் பட முடியும்.

    ஆலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் டேவிதார், வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூறியதாவது:-

    போராட்டத்தின் போது 19 அரசு வாகனங்கள் உள்பட 24 கார் போன்ற வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. 74 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.



    இதன் சேதமதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதவிர 35 கார்கள் ஓரளவு சேதமாகி உள்ளது. இதில் 19 கார்கள் அரசுக்கு சொந்தமானவை. 13 இருசக்கர வாகனங்கள் பாதியளவு சேதமடைந்துள்ளன. இதன் சேத மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும்.

    கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.#bansterlite #sterliteprotest
    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த வாரம் பாதிப்பு அதிகமாகவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 4 நாட்களாக இயல்பு நிலையில் இருந்த சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.

    உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் இன்று மதியம் வரை அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வின் தீவிர தொண்டரான மேலூர் சாமி, மேலூர் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து பின்னர் அ.தி.மு.க. நகரச் செயலாளராக பணியாற்றியவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், மேலூர் தொகுதியில் 3 முறை அடுத்தடுத்து போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா மறைவிற்கு பின் தற்போது சாமி தினகரன் அணியில் அமைப்பு செயலாளராக உள்ளார். #Tamilnews
    ×