search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டி கண்ட தேவி ஊரணியை சுற்றி சுற்றுப்பந்தயமாக நடந்தது.

    இதில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு ஊரணியை 7 சுற்றுகளும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 சுற்றுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாடு பர்மா காளி, 2-வதாக புதுக்கோட்டை மாவட்டம் பரளி கணேஷ், 3-வதாக சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், 4-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்திகோட்டை கருப்பையா, 5-வதாக தினையாகுடி சிவா மாடுகள் வெற்றி பெற்றன.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 22 ஜோடிகளை 2 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டது. முதல் சுற்றில் முதலாவதாக தேவகோட்டை குறிஞ்சி மளிகை ஸ்டோர், 2-வதாக தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், 3-வதாக மாத்தூர் குமார், 2-வது சுற்றில் முதலாவதாக துறை யனூர், 2-வதாக மேலூர் சூரக்குண்டு, 3-வதாக பீர்க்கலை காடு மாடுகள் வெற்றி பெற்றன.

    வெற்றிபெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு, மாலைகள் அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    • மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது.
    • சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மதுரை மாவட்ட நேரு யுகேந்திரா, போடிநாயக்கன்பட்டி சாஸ்தா மகளிர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    கருப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா தொடங்கி வைத்தார். கபடி, குண்டு, ஈட்டி, வட்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

    இதில் மாணவர் பிரிவில் சர்க்கரை ஆலை பள்ளி கபடி போட்டியிலும், வாடிப்பட்டி தனியார் கல்லூரி மாணவிகள் கைப்பந்து போட்டியிலும் வெற்றி பெற்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜேஷ்குமார் பரிசு வழங்கினார்.

    நேரு யுவகேந்திரா மாநில இயக்குநர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தனியார் கல்வி அறக்கட்டளை சேர்மன் ஆண்டி, தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி முன்னிலை வகித்தனர்.

    சாஸ்தா மகளிர் மன்ற தலைவி நாக பாண்டீஸ்வரி வரவேற்றார். உடற் கல்வி ஆசிரியர்கள் ராஜா, செந்தில்குமார், சந்திரமோகன், வெள்ளைச்சாமி, வசந்தகுமார் ஆகியோர் நடுவராக இருந்தனர். வசந்த் நன்றி கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, பன்னாள் அரசு உயர்நிலைப்–பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரத்திடம் படித்த முன்னாள் மாணவிகளான கருப்பம்புலம் அரசு மருத்துவமனை மருத்துவர் நிலவழகி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா, வேதாரண்யம் இந்தியன் வங்கி அலுவலர் ஜெயந்தி, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள் யூடஸ்சுகிலா, தேன்மொழி ராதிகா, வைதேகி சுப்ரமணியன், தர்மதுரை மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் இளநிலை உதவியாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி உற்சவம் நடந்தது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடுமாடு போட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    இந்த மாட்டு வண்டி போட்டியில் 21 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நடுமாடுகளுக்கான 8 மைல் தூரத்திற்கு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவையின் தமிழ்நாடு தலைவர் டாக்டர்

    பி.ராஜசேகரன் மற்றும் திருவாதவூர் கிராமத்தார்கள் மற்றும் திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    நடுமாட்டு போட்டியில் ரூ. 30 ஆயிரத்து 1-யை திருவாதவூர் அருகே உள்ள கழுங்குபட்டியை சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி வென்றது. 2-வது பரிசாக ரூ.25 ஆயிரத்து1-யை அ.வல்லா ளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 3-வது பரிசு ரூ.20ஆயிரத்து 1-யை கோட்ட நத்தம்பட்டி ரவி மற்றும் திருவாதவூர் எஸ்.எம். பிரதர்ஸ் ஆகியோர் வண்டியும், 4-ம் பரிசு 12 ஆயிரத்து 1-யை திருவாதவூர் தன்வந்த் பிரசாந்த் வண்டியும் வென்றன.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்க ளுக்கு விழா கமிட்டியா ளர்கள் பரிசுகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று காலை பெரிய மாடு, சின்ன மாடு, போட்டி நடந்தது. திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
    • பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன

    மேலூர்

    மதுரை அருகே உள்ள சக்குடியில் முப்புலி சாமி கோவில் உற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவ விழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடந்து வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட வாடிவாசலில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியவுடன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர்.

    சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களின் பிடியில் சிக்காமல் நழுவியது. சிறப்பாக மாடுபிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் 10 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கும் முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், பூமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    • 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, பரிசுகளும் வழங்கப்பட்டன.
    • முடிவில் ஐ.டி. பிரிவு தலைவர் கார்த்திக் பாரத் நன்றி கூறினார்

    சுவாமிமலை:

    கும்பகோணம் கிழக்கு பா.ஜனதா சார்பில் கிழக்கு மாநகர தலைவர் பொன்ராஜ் தேவர் தலைமையில் மகளிர் தினவிழா நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

    மேலும், 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சோழராஜன், மயிலை மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், பட்டுக்கோட்டை மகளிர் நிர்வாகி குயிலி, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி தலைவர் சுனிதா, மாநகர மகளிரணி தலைவர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்பகோணம் மாநகர பொதுச்செயலாளர் பொன்முடி செய்திருந்தார்.

    முடிவில் ஐ.டி. பிரிவு தலைவர் கார்த்திக் பாரத் நன்றி கூறினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் போட்டிகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் பண்பாட்டு பேரவை 31ஆம்ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், சீர்காழி - எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    புலவர் பனசை. மூர்த்தி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பேராசிரியர் வீழிநாதன், சாயிராம் கல்விக்குழுமம் தாளாளர் ராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    திருக்குறள் பண்பாட்டுப் பேரவை செயலர் சிவ.அன்பழகன், தலைவர் வே. சக்கரபாணி, பொருளர். முரு.முத்துக்கருப்பன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். அகோரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராமநாதன், எல். எம். சி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன் தாஸ் அறிவாநந்தம், வைத்தியநாத சாமி, ச.மு.இ மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன், பேரவை கொள்கை பரப்புச் செயலர் க.இளங்கோ, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை செயலர் நந்த.இராசேந்திரன் நன்றிக் கூறினார்.

    • போட்டியில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

    இதில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    இதில் பள்ளி தாளாளர் நித்திய சகாயராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், உதயம் முருகையன், வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வக்கீல் அன்பரசு, புயல் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி தெற்கு வீதி ச.மு.இ நடுநிலைப்பள்ளியில் 127-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலர் எஸ்.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் நாகராஜன், பொன்.பூங்குழலி முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சி.பாலமுருகன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் பங்கேற்று பேசினார். 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஆசிரி–யர்கள் மனோரஞ்சிதம், தையநாயகி, குமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டு, பரிசுகள் வழங்கி கெளர வித்தனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது

    பட்டதாரி ஆசிரியை ஶ்ரீப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

    • மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • மதரசா நிர்வாகி முகம்மது சுஹைல் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை அல் மதரஸத்துர் ராழியாவின் 12-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடற்கரை பள்ளி வளாகத்தில் தாளாளர் அஹமது சுஹைல் தலைமையில் நடந்தது.

    சிறப்பு பேச்சாளராக வாவ் அகாடெமி நிறுவனர் உஸ்தாத் அலி பேசினார். இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான சாலிஹ் ஹுசைன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சம்சுல் சுல்தான் கபீர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து இணையதள முகவரியை தொடங்கி வைத்தார்.

    கீழக்கரை அல் பைய்யினா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த மார்க்க போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், சின்னகடை தெரு அல் மதரஸத்துல் அஸ்ஹரியாவில் மாணவர்களுக்கான சிறப்பு தர்பியா வகுப்பு நடத்தப்பட்டது. யூடியூப் மூலம் நடந்த பொதுமக்களுக்கான கேள்வி பதில் போட்டிக்கான குலுக்களும் நடைபெற்று பரிசு வழங்கினர்.

    இதில் மதரஸாவின் முதல்வர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி, கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கின், அல் பைய்யினா கல்வி குழும தாளாளர் ஜாபிர் சுலைமான், நிர்வாகிகள் அஜ்மல் கான், கல்யாண தம்பி, பாசீல் அக்ரம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை மதரசா நிர்வாகிகள் சைபுல்லாஹ், அசிம் ரஹ்மான், சுகைல், காதர், பர்ஹான், ஸப்வான், அய்மன், ரித்வான் ஆகியோர் செய்திருந்தனர். மதரசா நிர்வாகி முகம்மது சுஹைல் நன்றி கூறினார்.

    • பேராவூரணியில் அரசு பள்ளியில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா நடை பெற்றது.
    • உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி,

    பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    பெரியகக்திகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேரிமேகலா தலைமை வகித்தார்.

    பேராவூரணி வடகிழக்கு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமை வகித்தார். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் சின்னப்ப தமிழர், மருத்துவர் நீலகண்டன், திருக்குறள் பேரவை தலைவர் நீல கண்டன், தமிழ் வழி கல்வி இயக்க இணைச்செயலாளர் வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் பழனிவேல், சிவக்குமார், ஆயர் ஜேம்ஸ், சித.திருவேங்கடம், பாரதி ந.அமரேந்திரன், கல்வியாளர் சீ.கௌதமன், மருத.உதயகுமார், அரிமா சங்க பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் அருண்குமார், காஜா முகைதீன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • குற்றாலம் பராசக்தி கல்லூரியில் பெண்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவிகள் முதல் பாிசை பெற்றனா்.

    சுரண்டை:

    மாவட்ட அளவிலான முதல்-அமைச்சா் கோப்பை பெண்கள் கூடைப்பந்து போட்டியானது குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் குற்றாலம் செய்யது பள்ளி, இலஞ்சி பாரத் மாண்டிசோாி, செங்கோட்டை எஸ்.ஆா்.எம். பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட சுமாா் 10 பள்ளிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல் பாிசை பெற்றனா். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல் வாய் மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவ பபிஸ்ராம், பள்ளியின் செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாாிக்கனி, விளையாட்டு ஆசிாியா்கள் கோபால், மஞ்சுளா ஆகியோர் பாராட்டினர்.

    ×