search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 214555"

    • விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயச்சந்திரன் 9 தங்க மடல்களை பரிசாக வழங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் தங்கப்பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா தொழிலதிபர் ஜெயச்சந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்றது.பள்ளி மேலாண்மை மற்றும் மேம்பாட்டு குழு தலைவர் ஜானகி அம்மாள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வரவேற்று பேசினார்.

    விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயச்சந்திரன் 9 தங்க மடல்களை பரிசாக வழங்கினார்.பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன் ஆகியோரும் பரிசுகள் வழங்கினர்.

    மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போதை விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் தங்கப்பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி னார்.

    விழாவில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம், முனைவர் தவசிமுத்து, வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் ராமஜெயம், தி.மு.க நகர செயலாளர் நவநீத பாண்டியன், அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை தேவமலர் நன்றி கூறினார்.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர்அண்ணா மற்றும் தந்தைபெரியார் ஆகியோரின் பிறந்தநாளை யொட்டி குமரி மாவட்டத்தில் கடந்த 15 மற் றும் 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் டதி பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளிகளின் சார்பில் 40 பேரும், கல்லூரிகள் சார்பில் 15 பேரும் கலந்து கொண்டனர்.இதில் மொத்தம் 16 பேர் பரிசு பெற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முதல் பரிசை கண்டன்விளை அரசு மேல்நிலைப்பள்ளி

    12-ம் வகுப்பு மாணவி வன அஜிஸ்னா, 2-ம் பரிசை மணலிக்கரை கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆன்சிலின் ஷேகா, 3-ம் பரிசை வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி லேகா மற்றும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரத்தை கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி வினயாசுமி சிவா, பூதப்பாண்டி சர்.சி.பி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா ஆகியோர் பெற்றனர்.

    கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டி யில் முதல் பரிசை முளகு மூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி முதுகலை ஆங்கிலம் (இரண்டாமாண்டு) மாணவி விஜித்ரா, 2-ம் பரிசை நாகர் கோவில் மகளிர் கிறிஸ்தவகல்லூரி இளங்கலை தமிழ் (முதலாமாண்டு) மாணவி அகல்யா, 3-ம் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரிமுதுகலை ஆங்கிலம் (முதலாமாண்டு) மாணவி ஷெரின் ஆகியோர் பெற்றனர்.

    தந்தை பெரியார் பிறந்தநாளான கடந்த 17-ந்தேதியன்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி யில் முதல் பரிசை மாடத்தட்டுவிளை புனித லாறன்ஸ் மேல்நி லைப்பள்ளி மாணவி நிபிஷா, 2-ம் பரிசை சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, 3-ம் பரிசை நாகர்கோவில் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிகா, சிறப்பு பரிசுகளை திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாபுல் உசேன் மற்றும் மார்த்தாண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்சயா ஆகியோர் பெற்றனர்.

    இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான முதல் பரிசை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்த வக் கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டா மாண்டு) மாணவி டெபி டேஷி, 2-ம் பரிசை தென்திரு விதாங்கூர் இந்துக் கல்லூரி இளங்கலை வணிகவியல் (முதலாமாண்டு) மாணவி சுவாதி, 3-ம் பரிசை முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி இளங்கலை வேதியியல் (இரண்டாமாண்டு) மாணவி வின்சி ஆகியோர் பெற்றனர். பரிசுத் தொகையும், பாராட்டுச்சான்றும் பின்னர் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பெரிய அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 15-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. அங்கு தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி ச்சாலை ரவுண்டானா வரை சென்றடைந்து மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் வரை நடத்தப்பட உள்ளது.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வந்து விட வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் வரவேண்டும். சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ஆம் இடம் வரை வெற்றி பெறுபவ ர்களுக்கு தலா ரூ.250 வீதமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    எனவே மேற்கண்ட மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிக்கு தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் பங்கு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • குலசேகரப்பட்டினம் பாதுகாப்பு தொண்டு இயக்க தலைவர் சங்கரன்பிள்ளை பரிசுகளை வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடிஅருகேயுள்ள குலசேகரபட்டினம் அரசு கிளை நூலகத்தில் வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. வாசகர் வட்ட தலைவர் சுடலைமணி தலைமையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு குலசேகரப்பட்டினம் பாதுகாப்பு தொண்டு இயக்க தலைவர் சங்கரன்பிள்ளை பரிசுகளை வழங்கினார். வேளாண்மை கட்சி தலைவர் கொற்கை சிவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கலை நூலகர் மாதவன் செய்திருந்தார்.

    • போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாபன் தொடங்கி வைத்தார்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரத்தில், 7 கிங்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 15 - வது ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாபன் தொடங்கி வைத்தார்.

    வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன் தலைமை தாங்கினார். கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் முன்னிலை வகித்தார். போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முதல் பரிசை கருத்த பிள்ளையூர் அணியும், 2-வது பரிசை ஆசீர்வாதபுரம் அணியும், 3-வது பரிசை மடத்தூர் அணியும் , 9-வது பரிசை மேட்டூர் அணியும், 10-வது பரிசை வெய்க்கால்பட்டி அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்.
    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம், ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மையில், குப்பை தரம் பிரித்தல், 'என் குப்பை என் பொறுப்பு' என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்கள் வழியாக விழிப்புணர்வு, கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் நகரங்களிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், மரக்கன்று நடுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் அடிப்படையில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் உடுமலை நகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள், சங்கங்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகராட்சி தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், கமிஷனர் சத்யநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் தலைமையில், மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.

    • சிறந்த செல்போன் செயலிகளை உருவாக்கிய 7 கல்லூரிகளின் மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு பெற்றனர்.
    • முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    சிவகாசி

    மத்திய கல்வித்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ), பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ.டி.சி. இன்னோவேசன் செல் இணைந்து ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2022'' என்ற தலைப்பில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மென்பொருள் தொழில்நுட்ப திறன்களை அறியும் இறுதிப்போட்டி சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மையத்தில் 2 நாட்கள் நடந்தது.

    முதல் நாளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். இரண்டாம் நாள் ஹேக்கத்தான் போட்டியின் நிறைவு விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர்.கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, மத்திய கல்வி அமைச்சரகத்தின் மைய தலைவர் உத்யன் மவுரியா,

    ஐ.சி.டி. அகாடமியின் மாநில தலைவர் பூர்ணபிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    கல்லூரிகளுக்கு இடையேயான 30 குழுக்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 7 குழுக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சிறந்த டிஜிட்டல் கற்றல் செயலியை உருவாக்கிய சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி, கண்டென்ட் கிரியேசன் செயலியை உருவாக்கிய கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, டிஜிட்டல் கல்வி செயலியை உருவாக்கிய சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, விளையாட்டு அடிப்படையில் கற்பிப்பதற்கான செயலியை உருவாக்கிய மும்பை சங்கி பொறியியல் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மாணவர்கள்-பெற்றோர்களுக்கு உதவும் வகையில் செயலியை உருவாக்கிய பஞ்சாப் தாப்பார் என்ஜினீயரிங் கல்லூரி, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கல்வி வழிகாட்டுதல், தகவல் ஆய்வு செய்வதற்கான மென்பொருளை உருவாக்கிய டெல்லி சூரஜ்மால் தொழில்நுட்ப கல்லூரி, வாசிப்பு திறனை மேம்படுத்துவற்கு தேவைப்படும் மென்பொருளை உருவாக்கிய இந்தூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 7 கல்லூரி மாணவர் குழுவுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இேத போன்று ஜூனியர் ஹேக்கத்தான் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி குழு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி குழுக்களின் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மாதவன் மற்றும் பேராசிரியர் இணைந்து செய்திருந்தனர்.

    • திருவாலவாயநல்லூரில் கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • இதில் 85 அணிகள் கலந்து கொண்டன.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் அருண் மற்றும் சாலினி நினைவு கபடி குழு இணைந்து கபடி போட்டியை நடத்தியது. 85 அணிகள் கலந்து கொண்டன. சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    முதல் பரிசை குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணியும், 2-வது பரிசை காடுபட்டி அணியும், 3-வது பரிசை செல்லூர் அணியும், 4-வது பரிசை பேட்டை கிராம அணியும் பெற்றது. பரிசுகளை ஊராட்சி மன்ற செயலாளர் சகுபர்சாதிக், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேகர், முத்தையா, பாசறை மற்றும் ஜே.பி.கிளப் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார். முன்னதாக போட்டிகளை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சித்தாலங்குடி ஒன்றிய கவுன்சிலர் தனபால் முன்னிலை வகித்தனர்.

    • மகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
    • விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை, திருவள்ளுவ சிலை, தினமும் மணிக்கொருமுறை திருக்குறள் சொல்லும் புதிய கடிகாரம் அமைந்த மணிக்கூண்டு ஆகியவற்றை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்துமகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.

    பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பிரேமா, பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுபள்ளி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    தலைமையாசிரியர் முருகானந்தம், ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் தங்கதிருஞானசம்பந்தம் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு சுரண்டை காமராஜர் நற்பணி இயக்க தலைவர் வழக்கறிஞர் சின்னதம்பி தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற 60 பேருக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    சுரண்டை:

    சுரண்டை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    சுரண்டை காமராஜர் நற்பணி இயக்க தலைவர் வழக்கறிஞர் சின்னதம்பி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் இணைச் செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகரத்தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் கனகராஜ் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,ஒவியம், நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 60 பேருக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜெயபால், ஊர் கமிட்டி நிர்வாகி பால்சாமி, வார்டு கவுன்சிலர்கள் ராஜ்குமார், அமுதா சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தபேந்திரன், நாடார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் மாடசாமி, வியாபாரிகள் சங்கம் செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் வினீத், ஊராட்சி தலைவர் சரவணனிடம் ரூ.7½ லட்சம் மற்றும் பரிசுக்கேடயமும் வழங்கினார்.
    • சின்னேரிபாளையம் சிறந்த ஊராட்சியாக தேர்வு பெற்றமைக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த கிராம ஊராட்சியாக அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னேரிபாளையம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.

    அதற்காக மாவட்ட கலெக்டர் வினீத், ஊராட்சி தலைவர் சரவணனிடம் ரூ.7½ லட்சம் மற்றும் பரிசுக்கேடயமும் வழங்கினார். அப்போது ஊராட்சி செயலாளர் ரங்கசாமி உடனிருந்தார்.சின்னேரிபாளையம் சிறந்த ஊராட்சியாக தேர்வு பெற்றமைக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை சார்பில் குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன் கலந்து கொண்டார். கவுரவ விருந்தினராக திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்க பட்டைய தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ரத்ததான முகாம் தலைவர் கணேசமூர்த்தி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், துணை ஆளுனர் கவிதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஓ.எம்.எஸ். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரவிச்சந்திரன், தலைமை கதிரியக்க நிபுணர் டாக்டர் சரோஜா, தலைமை காயம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் அருள்ஜோதி, ேராட்டரி நிர்வாகிகளான தலைவர் ஜெயராமன், செயலாளர் பாலகணேசன், பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

    ×