search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 215693"

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கனிமவளம் ஏற்றி வந்த லாரிமீது பயங்கரமாக மோதியுள்ளது
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை பகுதியை சார்ந்தவர் விஜூ கிருஷ்ணன் இருவருடைய உறவினர் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது.அவரை வழி அனுப்பி வைப்பதற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றுள்ளார். அவரை வழியனுப்பி விட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு திரும்பி உள்ளார் கார் கல்லுக்கட்டி பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கனிமவளம் ஏற்றி வந்த லாரிமீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கார் ஓட்டிவந்த விஜூகிருஷ்ணன் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.
    • கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது.

    கருப்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்டரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 26 ). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் மற்றும் அதே பகுதி சேர்ந்த முத்து மகன் பெரிய நாயகம், (வயது 24) உள்பட மொத்தம் 5 பேர் இன்று காலையில் கிருஷ்ணகிரியில் இருந்து கோவை செல்வ தற்காக சொகுசு காரில் சேலம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.

    கார் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் கரும்பாலை ெரயில்வே மேம்பாலத்தில் 9.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராமல் காரும், லாரி யும் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த கிறிஸ்டோபருக்கு கால், உடல் துண்டானது. மேலும் வயிற்றில் இருந்து குடல் வெளிேய வந்தது. மற்றொரு வாலிபர் பெரியநாயகத்திற்கு தலை, கால், அடிப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த மற்றவர்களும் படுகாயம் அடைந்தனர்.

    கவலைக்கிடம்

    அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், போலீசார் சேர்ந்து 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கிறிஸ்டோபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த விபத்து நடந்த பகுதி சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் பஸ் பயணிகள், அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை வேடிக்கை பார்ப்பதற்காக ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி, ஓமலூர் தீய ணைப்பு நிலைய ஆய்வாளர் ( பொறுப்பு) குப்புசாமி, மற்றும் போலீசார் போக்கு வரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பாஸ்கர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே உள்ள பெரியசாமிநகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் பாஸ்கர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்திருப்பேரையை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாகனங்களில் சில அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.
    • குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படு கின்றன. அதிகபாரம் ஏற்றி செல்லும் இந்த வாகனங்களில் சில அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.

    இப்படி செல்லும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் நடந்து வருகிறது. சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்துவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தே வருகிறது. இந்த நிலையில் அதிகபாரத்துடன் கனிம வளம் ஏற்றிய ஒரு லாரி குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி குழித்துறை பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. சாலையில் சென்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நிலைதடுமாறி ஓடிய லாரி, முன்னால் சென்ற 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 2 கார்களின் பின்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் குழித்துறை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கனிமவள லாரியை பறிமுதல் செய்து, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கனிம வளங்களை லாரிகளில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும், அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுச்சேரியில் இருந்து நேற்று பெங்களூர் நோக்கி திராட்சை பழங்கள் ஏற்றிவர லாரி ஒன்று சென்றது.
    • லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது.

    விழுப்புரம்: 

    புதுச்சேரியில் இருந்து நேற்று பெங்களூர் நோக்கி திராட்சை பழங்கள் ஏற்றிவர லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரங்கநாதன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் செஞ்சிக்கோட்டை அருகே அந்த லாரி வந்தது. அப்போது மழை பெய்ததால் அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அரங்கநாதன் லேசான காயமடைந்தார். அவர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.
    • வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.

    அப்போது சாலையில் உள்ள மின்சார கம்பிகள் மீது மோதியதில் மின்கம்பிகள் அறுந்து சாலையிலேயே விழுந்தது. அப்போது சாலையில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து காரணமாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, செட்டி சாவடி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    • சுமார் 25 பேருடன் வந்த பஸ் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காமல் அதன்மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னிவாடி:

    ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு பாலி அலுமினிய குளோரைடு என்ற ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை டிரைவர் தேவராஜ் என்பவர் ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல்-பழனி சாலை கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி புதுப்பாலம் அருகே வந்தபோது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனையடுத்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் ஏதேனும் பழுது நீக்கும் கடை உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார்.

    அப்போது கோவையில் இருந்து தேனிக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த சுந்தரராஜபெருமாள்(34) என்பவர் ஓட்டிவந்தார். வேல்முருகன் என்பவர் கண்டக்டராக இருந்தார். சுமார் 25 பேருடன் வந்த பஸ் பழுதாகி நின்ற லாரியை கவனிக்காமல் அதன்மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அரசு பஸ்சின் பக்கவாட்டு பகுதி முற்றிலும் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறிஅடித்து கூச்சலிட்டனர்.

    இதனைபார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கன்னிவாடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் கன்னிவாடி இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் விபத்தில் டிரைவர் சீட்டின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோவை மாவட்டம் சோமையனூர் தனுவாய் பகுதியை சேர்ந்த அய்யப்பன்(40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் விஷாலினி(14), ராஜபாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி(23), உத்தமபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்(30), திருப்பூரை சேர்ந்த சுவேதா(25) உள்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் ஸ்பிரிட் ஏற்றி வந்த லாரியில் இருந்து பாலி அலுமினிய குளோரைடு சாலையில் ஆறுபோல் ஓடியது. ஒருவித நெடியுடன் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருந்ததால் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சீரானது.

    இந்த விபத்து குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.
    • 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை ய த்துக்கு எடுத்து வரப்பட்டன.

    பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் அரவைக்காக ராஜபாளை யத்துக்கு அனுப்பி வைக்கப்ப ட்டது.

    • அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.
    • , சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் லோடு ஏற்றி கொண்டு லாரி வந்தது. அப்போது அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.இதில் கீழே விழுந்த நபர் மீது லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
    • சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி ஆம்பூதி பகுதியைச் சோ்ந்த அம்மாசை மகன் ராஜன் (வயது 50). இவா் அன்னூரில் இருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நீலிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, புளியம்பட்டியில் இருந்து அன்னூா் நோக்கி சென்ற லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.
    • பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனத்தினர் எரிவாயு குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முறையாக பணிகளைச் செய்யாமல் பகல் நேரங்களில், குழிகளை தோண்டுவது, தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் விடுவது என அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே உள்ளசின்னக்கரை பகுதியில் சென்ற சரக்கு லாரி ஒன்று எரிவாயு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிக்கொண்டது.ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் குழியில் இருந்து லாரியை எடுக்க முடியவில்லை. இதனால் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் லாரி மீட்கப்ப ட்டது. எரிவாயு குழாய் பதிக்கும் பணியை முறை ப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

    கடலூர்:

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விருத்தாசலம் நகரப் பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதலே சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர். சாலைப்பணிகள் தொடங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

    இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் ஆழமாக தோண்டப்பட்டு அதனை கான்கிரீட் பலகை மூலம் மூடும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் கால்வாயை மூடும் கான்கிரீட் மெலிதாக இருப்பதாகவும் இதனால் அந்த பகுதியில் இருக்கும் கியாஸ்குடோன், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு லோடு வாகனங்கள் செல்லும்போது, விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் ஒப்பந்ததாரர் மற்றும் பொது ப்பணித்து றையினரிடம் தெரிவித்து வந்தனர். அதனால் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மெலிதான கான்கிரீட் பலகை மூலம் கால்வாயை மூடும்பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கான்கிரீட் கற்களை ஏற்றி வந்த லாரி அந்த பகுதியில் சாலையை கடக்கும் போது, பெரும் சப்தத்துடன் திடீரென கான்கிரீட் மூடி உடைந்து லாரி டயர் கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை பள்ளத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் 1 மணி நேரம் போராடியும் லாரியை வெளிய எடுக்க முடியவில்லை. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறையினர் கிரேன் மூலம் லாரியை எடுத்து சாலையில் விட்டனர். இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நள்ளிரவில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .இதுவே காலை நேரத்திலோ அல்லது சிலிண்டர்கள் ஏற்றி ச்செல்லும் லாரி விபத்தில் சிக்கி கொண்டிருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

    இனியாவது தரமான வகையில் சாலை பணிகள் நடக்குமா என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

    ×