search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதாரண்யம்"

    • தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
    • ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி அகஸ்தியன்பள்ளி உப்புசத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் சாலை ரூ.2 கோடியே 27 லட்சத்தில் போடும் பணி தீவிரவமாக நடைபெற்று 30 நாளில் புதிய தார்சாலை போடபட்டுள்ளது.

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு செல்லும் பாதை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது அதன்பிறகு முற்றிலுமாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

    இதனை சரி செய்ய நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்திரவிட்டார். இதையொட்டி நகராட்சியின் சார்பில் 2 கோடியே 27 லட்சம் செலவில் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது

    நாடு சுதந்திரம் அடைவதற்காக ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1931ஆம் ஆண்டு ராஜாஜி சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் உப்பு சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது அதன் நினைவாக 1949ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளியில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தில் உப்பு சத்யாகிரக நினைவுத்தூபி கட்டப்பட்டது மேலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியதால் ராஜாஜியை அங்கு சிறை வைத்தனர்

    தற்போது ராஜாஜி சிறை வைத்த இடத்தில் சிறைச்சாலையும் உள்ள பகுதியில் உப்புத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனருகில் பூந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்தூபிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இதனால் உப்பு சத்தியாகிரகம் நினைவு ஸ்தூபி, ராஜாஜி சிறை வைத்த இடம் ஆகிய வரலாற்று நினைவு இடங்களை பார்க்க இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்

    இதையடுத்து சாலை யை உடனடியாகசீர் செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர் இந்தநிலையில் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 27லட்சம் செலவில் இரண்டரை கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது பணி துவங்கபட்ட 30 நாளில் பணி முடிக்கபட்டு தற்போது பொதுமக்கள் பயன்பட்டிற்கு சாலை திறக்கபட்டுள்ளது

    புதிதாக அமைக்கபட்ட சாலையினைநகராட்சி நிர்வாக மண்டலசெயற்பொறியாளர் பார்த்திபன்நக ரமன்ற தலைவர் புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி நகராட்சி கமிஷனர் ஹேமலதா பொறியாளர் முகமதுஇ ப்ராகிம் ஆகியோர் சாலை பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

    • வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    • வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
    • இப்பயிற்சியில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வேதாரண்யம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வேதாரண்யம் வட்டார வேளாண்மை அலுவலர் யோகேஷ், வேளாண்மை உதவி அலுவலர்கள் இந்திரா, தமிழன்பன், அனீஷ்தோட்டக்கலைத் துறை சார்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் நிறைமதி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி கலந்துகொணடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் .

    வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இப்பயிற்சியில் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
    • பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் . மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 250 நபர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .பின்னர் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

    கம்யூனிஸ்டு கட்சி கொடி கம்பங்களை சேதப்படுத்திய பா.ம.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு காடந்தெத்தி பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்னியூஸ்டு, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு பாமக ஆகிய அரசியல் கட்சிகளின் கொடி மரங்கள் உள்ளன. நேற்று பா.ம.க. கொடி மரத்தில் இருந்த பழைய கொடியை அகற்றிய அக்கட்சியினர் புதிய கொடியை ஏற்றி காடுவெட்டி குரு இறந்ததையொட்டி அரைக்கம்பத்தில் பறக்க விட்டிருந்தனர். 

    அப்போது அந்த இடத்தில் இருந்த தி.மு.க., அ.தி.மு.க, கம்னியூஸ்டு கட்சிகளின் கொடி கம்பங்களை சேதப்படுத்தி உளளனர்.இதைத் தொடர்ந்து கொடி கம்பங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி இந்திய கம்னியூஸ்டு கட்சி ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., கம்னியூஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    இதுபற்றி தலைஞாயிறு போலீசார் வழக்கு பதிவுசெய்து காடந்தெத்தியைச் சேர்ந்த பா.ம.க. ஒன்றிய விவசாய சங்க ஒன்றியத்தலைவர் காந்தி மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    வேதாரண்யம் கடற்கரையில் அமைக்க இருக்கும் உரக்கிடங்கிற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் ரூ.3 கோடியே 44 லட்சம் செலவில் உரக்கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான விழா சமீபத்தில் நடந்தது. இங்கு உரக்கிடங்கு அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வேதாரண்யம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இப்பணி தொடர்ந்து நடந்ததால் உரக்கிடங்கு அமைக்கும் திட்டத்தை நிறுத்த உடனே கோரி வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகில் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பைபர் படகில் சென்று மீன் பிடித்து வந்தனர். இதனால் மீன்களே கிடைத்து வந்தது. இந்த நிலையில் இன்று பைபர் படகில் சென்றும் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் உரக்கிடங்கு திட்டத்தை நிறுத்தும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
    ×