என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதி"
- பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.
- பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.
ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் டாங்க்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன் 'ஜூம்' என்று அழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றது.
அப்போது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.
இதில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.
இதற்கிடையே ஜூம் நாய் உதவியால் அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பின்னர் காயம் அடைந்த ஜூம் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
எனினும் அந்த நாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூம் நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறியதாவது:-
ராணுவ நாய் ஜூம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. காலை 11:45 மணி வரை உடல்நிலை நன்றாக முன்னேறி வந்த நிலையில் நாய், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஜூமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சம்பவத்தன்று பயங்கரவாதிகள் சுட்டதில் 4 குண்டுகள் ஜூம் மீது பாய்ந்தது. இருப்பினும் ஜூம் 2 பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியதோடு பயங்கரவாதிகளை தாக்கி பாதுகாப்பு படையினருக்கு உதவியது.
இதனால் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
காயம் அடைந்த ஜூம் நாய்க்கு 2½ வயதாகும். இந்த நாய் கடந்த 10 மாதங்களாக ராணுவத்தின் 15 கார்ப்பிசின் தாக்குதல் பிரிவில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க படையின் ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது.
- தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டின் மீது வான்வெளித்தாக்குதல் நடத்தியது.
சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளனர். இந்த பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.
இந்தநிலையில் வட கிழக்கு சிரியா ஈராக் எல்லையில் ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் சில ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அமெரிக்க படையின் ஹெலிகாப்டர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியது. தீவிரவாதிகள் தங்கி இருந்த வீட்டின் மீது வான்வெளித்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்கு தங்யிருந்த தீவிரவாதி வாகித் அல் சமாரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இதில் அவரது கூட்டாளி காயம் அடைந்தார். அவருடன் தங்கி இருந்த மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சிரியாவில் மற்றொரு இடத்தில் தங்கி இருந்த அபு ஹசும் அல் உவாமி என்ற ஐ.எஸ் தீவிரவாதி அமெரிக்க படை தாக்குதலில் உயிரிழந்தார். இறந்த 2 பேரும் தீவிரவாத இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் ஆவார்கள். இதில் கொல்லப்பட்ட வாகித் அல் சமாரி கடத்தல் கும்பல்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலின் போது அருகில் வசித்து வந்த பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அமெரிக்க படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
- கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார்.
- பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாஸ்குச்சான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த பயங்கரவாதி நசீர் அகமது பட் என அடையாளம் தெரியவந்தது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பாரமுல்லா பகுதியில் நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடுதல் பணி நடந்து வருகிறது.
- கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதுதொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
- இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இன்று இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது.
- இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள டெக்ரி நாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இன்று இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது.
கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளிடம் இருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குப்வாராவின் மச்சில் பகுதியில் உள்ள எல்ஓசி டெக்ரி நார் அருகே ராணுவம் மற்றும் குப்வாரா போலீசார் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டறியப்படுகிறது. இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. மேலும் விவரங்கள் குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
- சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்தவன் சுப்ரக் உசேன். அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது கூட்டாளிகளுடன் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரக் உசேன் இறந்தான்.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
- இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,
ஸ்ரீநகர்:
கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.
இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.
இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
- துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக பயங்கரவாதி தகவல்.
- கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதியிடம் நடத்தி விசாரணையில் துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
- ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்.
நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் ஜெயில் காவலர் ஒருவர் பலியானார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் போகோஹராம் அமைப்பை சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.
- என்கவுன்டரின்போது இரண்டு பயங்கரவாதிகளும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சரணடைந்துள்ளனர்.
- பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஹதிகம் பகுதியில் நேற்று நள்ளிரவில் என்கவுன்டர் தொடங்கியது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த இரண்டு பயங்கரவாதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், என்கவுன்டரின்போது இரண்டு பேரும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் மூறையீட்டின்பேரில் சரணடைந்துள்ளனர். பின்னர், பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
- காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.
- சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அருகே பாம்பூரில் காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் மீதான தாக்குதல் நேற்று இரவில் பாம்பூர் பகுதியில் உள்ள சம்பூரா என்ற இடத்தில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23-வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், வங்கி மேலாளரைக் குறிவைத்து கொல்லப்பட்ட பயங்கரவாதி நேற்றிரவு ஷோபியானில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் ஒருவன் என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பயங்கரவாத குற்றங்களைத் தவிர குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்