search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 217364"

    • மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20, 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் மூன்று ஊராட்சி மக்களும் சாலைமறியலில் ஈடுபட முயற்சித்தனர்.

    தகவல் அறிந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சரிவர தண்ணீர் கிடைக்காததால் மூன்று ஊராட்சி பகுதி மக்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் அறிந்து குடிநீர் வடிகால் அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மூன்று ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி மூன்று கிராமங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்றது.

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.

    கோவை

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. சோமையன்பாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், சோமையன்பாளையம்-கவுண்டர்மில் ரோடு அருகே தனியார் பார் ஒன்று உள்ளது.இந்த பாரால் மக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். பள்ளிக்கூட குழந்தைகள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். பாரில் குடித்துவிட்டு குடிபோதையில் வரும் வாகன ஓட்டுகளால் அதிக விபத்து நடக்கிறது.

    எனவே போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனியார் பாரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சூலூர் பகுதி ஊர் மக்கள் அளித்துள்ள மனுவில், சூலூர் கண்ணம்பாளையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு விடுமுறைகளை கடைபிடிக்காமல் டாஸ்மார்க் கடை ஒன்று திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்கனவே மக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் இப்பகுதியில் டாஸ்மார்க் கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உடனடியாக மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என்றனர்.

    • ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    • குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் நடந்தது

    கன்னியாகுமரி:

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நடைபெற்றது.

    விழாவையொட்டி நேற்று மதியம் புனித தேவசகாயம் ஆளுமையும் பண்புகளும், நமக்கு விடுக்கும் சவால்களும் என்னும் தலைப்பில் இறையியல் பேராசிரியர் அல்போன்ஸ் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் மலங்கரை கலை தொடர்பகம் வழங்கிய புனித தேவசகாயமே என்னும் திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில், திருத்தல அதிபர் றசல்ராஜ் முன்னி லையில் ஆடம்பர திருப்பலி நடை பெற்றது. ஜார்ஜ் பொன்னையா மறையுரை நிகழ்த்தினார்.

    கில்பர்ட் லிங்சன், மரிய அற்புதம், ரொமரிக் ததேயுஸ், இயேசுமரியான், தோமஸ், ஷிஜின், தானியேல் ஆசீர்வாதம், றீகன் மோரீஸ், ஜியோ கிளிட்டஸ், ஜஸ்டின் பிரபு, ஜோவின் ஸ்டீபன் மற்றும் பலர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

    மாத்திரவிளை மறைவட் டத்தைச் சேர்ந்த 23 பங்கு களிலிருந்தும் ஆயிரக் கணக்கான இறைமக்களும், புனித தேவசகாயம் பக்தர் களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில் அருட்பணி யாளர்கள் கில்பர்ட் லிங்சன், ஷிஜின், வட்டார மேய்ப்பு பணி பேரவை துணைத்தலைவர் ஜான் கென்னடி, செயலாளர் வக்கீல் மரிய அருள்தாஸ், விழாக்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஜஸ்டஸ், போஸ், ஜெனோ ரெனிட்டஸ், மரியரெத்தினம் மற்றும் அனைத்து பக்தசபைகள், இயக்கங்கள், அன்பியங்கள், வட்டார அருட்சகோதரிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்
    • பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அணில் காடு பழங்குடியின கிராமத்தில் 8க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பழங்குடி கிராமத்தில் பல ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.


    இந்த கிராமத்தில் சமீபத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். அப்போது மின் இணைப்பு கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த குக்கிராமத்திற்கு மின்சாரம் இணைப்பு வழங்க மின்வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 8 பழங்குடியின குடும்பங்களுக்கு மின்சாரம் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தற்போது கம்பம் நடப்பட்டு, மின்கம்பிகள் பொருத்தி வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • நட்டாலத்தில் நாளை நடக்கிறது
    • மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திர விளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நாளை (21-ந் தேதி) நடக்கி றது. இதுசம்பந்தமாக மாத்திர விளை மறைவட்ட குருகுல முதல்வர் மரிய வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கி றது. விழாவை யொட்டி நாளை மதியம் 2 மணிக்கு புனிதரின் பிறந்த பூமியில், புனித தேவசகாயம் ஆளு மையும், பண்புகளும், நமக்கு விடுக்கும் சவால்க ளும் என்னும் தலைப்பில் இறையியல் பேராசிரியர் தே. அல்போன்ஸ் கருத்து ரை வழங்குகிறார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் மலங்கரை கலை தொடர்ப கம் வழங்கும் புனித தேவ சகாயமே என்னும் திரைப்படம் வெளியீடு நடைபெறுகிறது.

    பின்னர் வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை யில், திருத்தல அதிபர் றசல்ராஜ் முன்னி லையில் மாபெரும் ஆடம்பர திருப்பலி நடை பெறுகிறது. ஜார்ஜ் பொன்னையா மறையுரை நிகழ்த்துகிறார். கில்பர்ட் லிங்சன், மரிய அற்புதம், ரொமரிக் ததேயுஸ், இயேசு மரியான், தோமஸ், ஷிஜின், தானி யேல் ஆசீர்வாதம், றீகன் மோரீஸ், ஜியோ கிளிட்டஸ், ஜஸ்டின் பிரபு, ஜோவின் ஸ்டீபன் மற்றும் பலர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர். மாத்திரவிளை மறை வட்டத்தை சேர்ந்த 23 பங்குகளிலிருந்தும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைமக்களும், புனித தேவசகாயம் பக்தர்களும் இத்திருப்பலியில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில் அருட்பணியாளர்கள் கில்பர்ட் லிங்சன், ஷிஜின், வட்டார மேய்ப்பு பணி பேரவை துணைத்தலைவர் ஜான் கென்னடி, செயலா ளர் வழக்கறிஞர் மரிய அருள்தாஸ், விழாக்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஜஸ்டஸ், போஸ்,ஜெனிட் டஸ், மரிய ரெத்தி னம் மற்றும் அனைத்து பக்த சபைகள், இயக்கங்கள், அன்பியங்கள், வட்டார அருட்சகோதரிகள் இணைந்து செய்து வரு கின்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் கிராம மக்கள், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

    எனவே, இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது. இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பாலம் அமைக்கக்கோரி போராடிய அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும்.
    • போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெரு சேர்ந்த பொதுமக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிறைவேற்றாவிட்டால் ரேசன் கார்டுகள் ஒப்படைக்கப்படும் என ஒப்படைப்பதற்கு வந்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 288 அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் அரிய கோஷ்டி கிராமத்தில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு பயனாளி தேர்வில் முறைகேடு நடந்துள்ள நிலையில் தற்போது கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுதியற்ற சில பயனாளிகளை நீக்கினர். இதன் காரணமாக பல வீடுகள் நிலுவையில் உள்ள நிலையில் சொந்த வீடு இல்லாத எங்களுக்கு பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பாக காணப்பட்டது.

    • உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.
    • வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன

    அரவேணு:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது.

    அதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் நாளை வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மக்களும் ஆர்வமுடன் கொடி ஏற்றி வருகின்றனர்.

    நீலகிரியில், 4 நகராட்சி, 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.

    பா.ஜ., சார்பிலும் வீடுதோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது. தவிர, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் நேற்று ஏற்றப்பட்டன

    கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கோத்தகிரி அருகே உள்ள பூர்வக்குடி மக்களான கோத்தர் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு சென்று தேசிய கொடி வினியோகித்து, வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களும் தங்கள் வீடுகளில் தேசியை கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கோத்தர் பழங்குடியின கிராமத்தில் உள்ள ஊர்தலைவர், பொது மக்கள் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.
    • தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குறிச்சி, கருங்கரடு, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டுள்ளனர்.

    குருவரெட்டியூர் அடுத்து ள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் வயலில் அழுகும் நிலையில் பொதுமக்கள் பறித்து சென்றனர்.

    தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் தனது வயலில் 1½ ஏக்கர் முலாம்பழம் பயிரிட்டுள்ளார். 50 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும் முலாம்பழம் கடந்த ஒரு வாரமாக விலை கேட்க ஆள் இல்லாததால் வயலில் அழுகி வருகிறது.

    இது குறித்து விவசாயி சுதாகர் கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாதம் எனது வயலில் முலாம்பழம் பயிரிடத் தொடங்கினேன். 50 நாட்களுக்கு பிறகு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் யாரும் விலை கேட்க வரவில்லை. வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.

    ஆனால் தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை. இப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் உள்ளூர் வியாபாரிகளும் விலை கேட்க முன்வருவதில்லை.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றால் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் ஒரு டன் 4 ஆயிரம் வரை விலை போகிறது. இது போக்குவரத்து செலவுக்கு மட்டுமே சரி ஆகி விடுகிறது.

    இதனால் ஒரு வாரமாக அறுவடை செய்யாமல் செடியிலேயே முலாம்பழம் அழுகி வருகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முலாம்பழத்தை இலவசமாகவே பறித்துச் செல்ல விட்டுவிட்டேன்.

    இதற்காக ரூ80 ஆயிரம் வரை உரம், ஆள் கூலி என முதலீடு செய்துள்ளேன். ஏக்கருக்கு 12 டன் வரை முலாம்பழத்தை அறுவடை செய்யலாம். முறையாக விற்பனை ஆகி இருந்தால் 50 நாளில் கூடுதலாக 70 ஆயிரம் வரை கிடைத்திருக்கும். விலை வீழ்ச்சியின் காரணமாக வியாபாரிகள் வராததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கலையரங்கில் காணி இன மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மலைகள், காடுகளில் பிறந்து ஆற்றுப் படுகைகளில் வளர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட வனத்துறையின் சார்பில் உலக பழங்குடியினர் தினத்தையொட்டி பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கலையரங்கில் காணி இன மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் வரவேற்றார். பழங்குடி யினர் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுரேஷ் சுவாமியார் காணி, காணிக்காரர் வரலாற்று விளக்கவுரையாற்றினார். மாவட்ட வன அலுவலர் இளையராஜா விழா விளக்க உரையாற்றினார். கடையல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உலகம் முழுவதும் ஆகஸ்டு 9-ந்தேதி உலக பழங்குடியினர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 48 காணி பழங்குடி யின மலைவாழ் மக்கள் காட்டு விலங்குகளோடு கூட்டு சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையினை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் மூத்த குடிமக்கள் காணி இன மக்கள். சங்க இலக்கியங்களில் காணி மலைவாழ் மக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மக்கள் அனைவரையும் உபசரிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். மலைகள், காடுகளில் பிறந்து ஆற்றுப் படுகைகளில் வளர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறையில் இருந்துதான் 1989-வது வருடம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக என்னு டைய போராட்டத்தை முன்னெடுத்தேன் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். சாதி என்ற விலங்கை அறுத்து எறிந்திட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கடினமான பேச்சாக இருந்தாலும் வெறுப்பாக பேசக்கூடாது. வெறுப்பு அரசியல் செய்வது நாகரீகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் எதிரான தாக அமைந்திவிடக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நாம் அனை வரும் வனத்தினையும், இயற்கையினையும், நமது நாட்டினையும் பாதுகாத்திட இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, வன பாதுகாவலர் சிவகுமார், பயிற்சி உதவி வன பாதுகாவலர் மனாசிர் ஹலிமா, திருவட்டார் தாசில்தார் சதீஷ் சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோலப்பன், தோட்டக் கலைத்துறை அலுவர் ஷீலா ஜாண், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், தி.மு.க. திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பெர்ஜின், ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
    • 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. இதில் 29 ஆயிரத்து 600 பூஸ்டர் தடுப்பூசி உட்பட 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    இதற்கான பணியில் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், முந்தைய முகாமை ஒப்பிடுகையில் 33-வது முகாமில் கூடுதலாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்ட மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்றனர்.

    • அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோர கிராமமான நாதல்படுகை, முதலை மேடுத்திட்டு பகுதியில் வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆறுதல் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மகளிர் அணி மாவட்ட செயலாளருமான ம.சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×