search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஸ்பெண்ட்"

    • அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி ஆயுதப்படை உதவி ஆணையர் நடவடிக்கை.
    • தப்பியோடிய கைதியை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

    கோவை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி லெனின் நேற்று முன்தினம் தப்பியோடினார்.

    போக்சோ வழக்கு ஒன்றில், கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்து வந்தபோது தப்பியோடினார்.

    இந்த விவகாரத்தில், கோவை ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், பிரவீன், பவின் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி ஆயுதப்படை உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கோவை ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், பிரவீன், பவின் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் மேபாடி காவல் நிலையத்தில் கோவை ஆயுதப்படை போலீசார் புகார் அளித்ததை அடுத்து, தப்பியோடிய கைதியை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

    • பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
    • தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா. தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு பணிகளில் நேச பிரபா சுணக்கமாக செயல்பட்டதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அருள் ஒளி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரிய வந்தால் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதையும் மீறி நேச பிரபா சரிவர தேர்வு பணிகளில் ஈடுபடாததால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.

    • பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் அருகிலேயே பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணன் கோவிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அப்போது யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்படும். சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகள் தனியாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுகின்றன.

    அதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் சீவேலியில் பங்கேற்கும் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகளை, அதன் பாகங்கள் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும், பாகன்கள் பிரம்பால் தொடர்ந்து தாக்குவது போன்று இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யானைகளை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் கிளை ஜெயில் உள்ளது. பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு பணியாற்றும் சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் பணியில் இருக்கும் போது மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் மது அருந்திவிட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தொந்தரவு செய்வதாகவும், அவர்களை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறை தலைமைக்காவலர் ஜெயக்குமார் மது அருந்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சிறை தலைமைக் காவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

    • கல்லூரிக்கு வந்தால் மாணவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம்.
    • மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்க முடிவு.

    சென்னையில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சினை காரணமாக தொடர் மோதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல், 3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சமீபத்திலும் ரூட் தல பிரச்சினை காரணமாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று மாநிலக்கல்லூரி முதல்வருக்கு ரெயில்வே போலீசார் கடிதம் எழுதினர்.

    இதன் எதிரொலியால், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 25 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராதவர்கள் என்றும், எப்போதோ ஒரு நாள் கல்லூரிக்க வருபவர்கள் தான் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கல்லூரிக்கு வந்தால் அவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம் என்றது.

    இதைத்தவிர, மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்கவும், ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ரெயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • வழக்கு சம்பந்தமாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    திருவட்டார்:

    தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகள் சுகிர்தா (வயது 27). சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த சுகிர்தா, குமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கல்லூரி மாணவி தனது அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அதில், பேராசிரியர் டாக்டர் பரமசிவன் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், பிரித்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும், தன் மரணத்துக்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகள் சுதிர்தா மரணத்துக்கு காரணமான 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று புகார் மனு கொடுத்து இருந்தார். அதன் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    ஆனால் விசாரணையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை தவிர, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பயிற்சி டாக்டர் ஹரிஷ் தலைமறைவாக சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது ஆனால் அவரை இங்கு கொண்டு வந்து விசாரிப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர் விடுமுறையில் வந்தபோது விசாரிக்கலாம் என்று போலீசார் மழுப்பலாக சென்றனர்.

    இதனால் மருத்துவ மாணவி சாவு வழக்கை சி.பி.சி.ஜ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பா.ம.க., நாம் தமிழர்கட்சி, கம்யூனிஸ்ட் லெனிஸ்ட், மாதர் சங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பு, முன்னாள் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் மருத்துவ மாணவி சுகிர்தா மரணத்திக்கு தொடர்புடைய பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் ஹரிஷ், பிரீத்தி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணை முடியும் வரை அவர்களின் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
    • மது போதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளராக சுந்தர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் உள்ள பாரில் மது அருந்தியு ள்ளார்.பின்னர் மது போதையில் அங்கு பணியாற்றும் ஊழி யர்ளுடன் தகராறில் ஈடு பட்டுளளார்.இச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டே வுக்கு புகார் வந்துள்ளது.புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவர், காவல் உதவி ஆய்வா ளர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவனிடம் பரிந்துரை செய்தார்.இதையடுத்து சுந்தர்ரா ஜை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பகலவன் உத்தரவிட்டார்.மது போதையில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனியார் விடுதியில் உள்ள பாரில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    மேரிலேண்ட்:

    அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பிரான்சிஸ்கோ மார்லெட் என்ற போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் போலீஸ் வாகனம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென முத்தம் கொடுத்தார். பின்னர் போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் தோளில் கை போட்டவாறு, கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்று போலீஸ்காரை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டனர்.

    பொது இடத்தில் போலீஸ் உடையில் அவர் செய்த இந்த முத்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    • மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோஷி குற்றச்சாட்டு.
    • அதிர் ரஞ்சன் மீதான குற்றச்சாட்டை உரிமை குழுவுக்கு அனுப்பவும் கோரிக்கை.

    அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோஷி குற்றம் சாட்டினார்.

    இதனால், அதிர் ரஞ்சன் மீதான குற்றச்சாட்டை உரிமை குழுவுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும், "உரிமை குழு அதன் மீது முடிவெடுக்கும் வரை அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்" என்றும் கோரப்பட்டது.

    இந்நிலையில், ஜோஷி குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் டிரைவரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதனையடுத்து தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் வனத்துறையினர் லாரி ஓட்டுனரை தாக்கிய காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு லாரி ஓட்டுனரை வனத்துறையினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

    • ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும், சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 3 ஆண்டுகளாக அரசு பள்ளி மேம்பாட்டு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் என்றும், தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய் வரை கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டாய நிதி வசூல் செய்து மோசடி செய்துள்ளார்.

    இந்த மோசடி குறித்து வந்த புகாரின் பேரில் ஏற்கனவே மாவட்ட கலெக்டர், தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கையும், சுற்றறிக்கையும் அனுப்பிய நிலையில் தொடர்ந்து கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் வந்தது.

    அதன் அடிப்படையில், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கட்டாய நிதி வசூலில் ஈடுபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • பெரம்பலூரில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்
    • மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை, இரூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடைகளை ஆய்வு செய்தபோது, கூடுதலாக ரூ. 10 வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு உரிய அபராதம் விதித்து, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருமாறனுக்கு உத்தரவிட்டார்.

    இதன்பேரில் பெரம்பலூர் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த சூப்பர்வைசர் முருகேசன், இரூர் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ராஜா, மேலும் பாடாலூர் டாஸ்மாக் கடையிலிருந்து நிர்வாக அனுமதியின்றி இரூர் கடையில் பணிபுரிந்த பாடாலூர் சூப்பர்வைசரான மற்றொரு முருகேசன் மற்றும் அரியலூர் பழைய பஸ்டாண்டு இருசக்குட்டை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விலைப் பட்டியல் வைக்காமலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சேல்ஸ்மேன் குறித்து கண்டு கொள்ளாதிருந்த சூப்பர்வைசர் செல்வமணி ஆகிய 4 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    ×