என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்கள்"
- கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சேலம்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.
- வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம்:
பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.
இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.
- டவுண் பஸ்கள் இன்று காலை 1 மணி நேரம் தாமதமாக இயக்கம்
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் காங்கிரசார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப் -டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இரவு 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.முக்கிய சந்திப்புகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி உள்பட தலைவர்கள் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. தேங்காய் பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ் நேற்று இரவு புதுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதுபோல கொல்லங்கோடு அருகே சாத்தான்கோடு பகுதியில் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது. மார்த்தாண்டத்தில் இருந்து குளச்சல் நோக்கி சென்ற அரசு பஸ் நட்டாலம் பகுதியில் கல்வீசி உடைக்கப்பட்டது. இதே போல் குழித்துறை, திருவட்டாறு பகுதிகளிலும் அரசு பஸ்கல் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 5 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பஸ்கள் மீது கல் வீசப்பட்டதையடுத்து வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பஸ் நிலையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு வழக்கமாக கிராமப்புறங்களில் நிறுத்தப்படும் பஸ்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது .பெரும்பாலான பஸ்கள் டெப்போக்களுக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக டெப்போக்களில் இருந்து பஸ்கள் அதிகாலை 4:30 மணிக்கு பஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு 5 மணிக்கு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.ஆனால் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது. ராணி தோட்டம் டெப்போவில் இருந்து வடசேரி பஸ் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக பஸ்கள் கொண்டுவரப்பட்டு காலை 6 மணிக்குபிறகு கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. பஸ்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்ட தால் காலை நேரத்தில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ்நி லையங்களில் பயணிகள் காத்திருந்தனர். சென்னை நெல்லை மதுரை திருவனந்தபுரம் கோவை தஞ்சாவூர் போன்ற வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு சென்றன.மாவட்டத்தில் உள்ள 12 டெப்போகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
- வடரெங்கம் வழிதடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வடரெங்கத்திற்கு 2 நகர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது.இதனிடையே பள்ளி நேரங்களில் பேருந்துகளில் அதிகளவு பயணிகள், மாணவர்கள் பயணம் செய்யும் நிலையால் மாணவர்கள் பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை இருந்தது.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சீர்காழி கிளை மேலாளர் வடிவேல் உத்தரவின்படி வடரெங்கம் கிராமத்திற்கு பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுபேருந்து இயக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் செல்லும் மாற்று பேருந்துகளை வடரெங்கம் வழிதடத்தில் இயக்கி மாணவ -மாணவிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதுள்ளது.
- அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
- சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை நகரில் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
மேலும் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை சாலை குழந்தை இயேசு கோவில் அருகில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் வழிமறித்து நிறுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
இதில் கண்டறியப்பட்ட பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து அகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பஸ்களின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன.
அப்போது டிரைவர், கண்டக்டர்களிடம்
ஏர்ஹாரன்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எடுத்துக் கூறினார்.
மேலும் முதன்முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கிறேன்.
நாளையில் இருந்து ஏர்ஹாரன் உள்ள பஸ்களில் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதேபோல் தஞ்சை நகரில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி கண்டறியப்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.
- காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தஞ்சாவூர்:
அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் எஸ்.எஸ். ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ் புத்தாண்டு முன்னிட்டு இன்று முதல் வருகிற 16-ம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் நாளை வரை சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, புதுக்்கோட்டை, கரூர், ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு 250 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோ ட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மேலும் தொடர் விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல வசதியாக 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு
- 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தலா ரூ.75 கட்டணம்
நாகர்கோவில் :
கோடை விடுமுறையையொட்டி, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நாகா்கோவில் மண்டலம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக கொடைக்கானலுக்கு செல்ல விரும்புவோர் வசதிக்காக, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் அங்குள்ள 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் பஸ் நிலையத்தில் இருந்து அப்பர் லேக், மெயர் பாயிண்டு, பாம்பார் ஆறு, பில்லர் ராக், குணா குகை, பைன் பாரஸ்ட், ஏரி, மியூசியம் என 12 இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதற்கு பெரியவர்களுக்கு தலா ரூ.150 கட்டணமும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு தலா ரூ.75 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா சேவை ஏப்ரல் மற்றும் மே மாதம் மட்டுமே இருக்கும். மேலும் கொடைக்கானலுக்கு 50 பேர் கொண்ட குழுவினர் செல்ல விரும்பும் பட்சத்தில் தங்கள் ஊர்களில் இருந்தே பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக 50 சுற்றுலா பயணிகளின் டிக்கெட் கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 94875 99082 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் தெரிவித்துள்ளார்.
- மேலூர் தற்காலிக பஸ் நிலையத்தை அரசு பஸ்கள் புறக்கணித்தன.
- செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்
தமிழகம் முழுவதும் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள பழைய பஸ் நிலையங்களை இடித்துவிட்டு நவீன முறையில் புதிய பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையத்தை இடித்து ரூ. 7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையொட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.கட்டுமான பணிகள் நடந்து முடியும் வரை மேலூர் பகுதியில் 4 இடங்களில் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 4 இடங்களில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும் சிரமமும் ஏற்படும் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் தலைமையில் பொதுமக்கள், காவல்துறையினர், போக்கு வரத்து அதிகாரிகள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் வரை மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த தற்காலிக பஸ் நிலையம் நேற்று (17-ந் தேதி) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிவன் கோவில் திடலில் முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த ஒரு அரசு பஸ்களும் வந்து செல்லவில்லை. மாறாக மேலூர் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டிலேயே ஆங்காங்கே பயணிகளை ஏற்றி இறக்கி அரசு பஸ்கள் சென்றன.
தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என நம்பி அங்கு வந்த பொதுமக்கள் பஸ்கள் ஏதும் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அரசு பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
நேற்று இரவு வரை எந்த ஒரு அரசு பஸ்சும் தற்காலிக பஸ் நிலையத்திற்குள் வரவில்லை. இதனால் சிவன் கோவில் திடல் வெறிச்சோடி காணப்பட்டது. மாறாக தனியார் வாகனங்கள் சில அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. நகர் மன்ற தலைவர், போலீசார் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பேசி தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசு பஸ்கள் வழக்கம்போல் நகர் பகுதியில் நின்று சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக பஸ் நிலையம் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்குள் நுழையாமல் ஜி.என்.டி. சாலையில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து செல்லும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் உள்ள பணி மனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் இருப்பதை அறிந்தார்.
இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து சுண்ணாம்பு குளம், அண்ணாமலை சேரி, தேர்வாய், கல்லூர், பிளேஸ்பாளையம், சத்தியவேடு, புத்தூர், மையூர், முக்கரம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நாளை (4-ந் தேதி) முதல் கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது.
- தஞ்சை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய ஊா்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று மற்றும் நாளை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் (கும்பகோணம்) மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ந் தேதி திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சாா்பில் இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
வெளியூா் சென்ற பொதுமக்கள் அவரவா் இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கும் 250 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல, திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பஸ்கள் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.
- தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழகத்தின் கும்ப கோணம் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை விடுமுறை முடிந்து வருகிற 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பொதுமக்கள் தங்களது இருப்பி டங்களுக்குத் திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சாா்பில் 300 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்பட்டன.
இதேப்போல் நாளையும் (ஞாயிற்றுக்கி ழமையும்) சிறப்பு பஸ்கள் இயங்கும்.
இதில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னை யிலிருந்து திருச்சி, கும்பகோ ணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறை ப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேப்போல் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகை, வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கும் 100 பஸ்களும் இயக்கப்படு கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தன.
- தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளது.
நாகப்பட்டினம்:
திருவாரூரில் இருந்து நாகைக்கு அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருவாரூர் அருகே உள்ள பெரும்பண்ணையூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்தார்.
சிக்கல் அருகே பொரவச்சேரி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் திருத்துறைப்பூண்டியில் இருந்து கீழ்வேளூர் வழியாக நாகை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், தனியார் பஸ்சின் முன் பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் 6 பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்தின் காரணமாக நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.