search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும்.
    • கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.

    சிட்னி:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இந்த போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக ஆடிஅணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின். சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை எடுத்துக்காட்டாக சொல்லி கோலியின் இன்னிங்ஸை அஸ்வின் புகழ்ந்துள்ளார். "விராட் கோலி. அவருக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல.

    ஏதோ பூந்துடுச்சு சத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும். கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.

    அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. 'இங்க அடி. அங்க அடின்னு'. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன். அப்படின்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்" என அஸ்வின் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக அவர் பதிவு செய்துள்ளார். இதை அவரது குட்டி ஸ்டோரியில் ஒன்றாக அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

    • பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை.
    • இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும்.

    பெர்த்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 'சூப்பர் 12' சுற்றில் நேரடியாக விளையாடுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந் தேதி மோதுகிறது.

    தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் முதல் சுற்றில் இருந்து நுழையும் 2 அணிகள் ஆகியவற்றுடன் இந்தியா விளையாடுகிறது.

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா (17-ந் தேதி), நியூசிலாந்துடன் (19- ந் தேதி) பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்தநிலையில் ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஆர்.அஸ்வின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பாகிஸ்தானுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதியாகும்.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை ஆட்டத்தின் முடிவு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

    நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அது போலத்தான் அவர்களும் மரியாதை கொடுக்கிறார்கள்.

    ரமீஸ்ராஜா இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எனக்கு தெரியாது.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா பாகிஸ்தானை இந்தியா மதிக்க தொடங்கி விட்டது என்ற கருத்துக்கு அஸ்வின் இந்த பதிலை அளித்துள்ளார்.

    • ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.
    • விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இடம் பெறாத கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த போட்டிக்கு திரும்பியுள்ளனர். இந்த போட்டிக்கு ஆடும் லெவன் எடுப்பதில் கடும் போட்டி நிலவும். விராட் கோலி, பும்ரா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார்கள். இதனால் டாப் ஆர்டரிலும் பந்து வீச்சாளர் பக்கமும் மாற்றம் இருக்கலாம்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வினை நீக்கும் போது டி20 போட்டியில் இருந்து விராட் கோலியையும் நீக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-

    தற்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலி டி20 ஆடும் லெவனில் விளையாடுவதை விட பெஞ்சில்தான் அமர வேண்டும். 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கிறார். அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும் என்றால் விராட் கோலியையும் டி20 அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும்.

    விராட் கோலி பார்மில் இல்லை. அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அவரை உட்கார வைக்கக் கூடாது, ஆனால் பார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக்கூடாது.

    நான் அணியில் ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். இந்த இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றே விவரம் அறிந்த வேறு சிலர் கருதுவார்கள். ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.

    இவ்வாறு கபில் தேவ் காட்டமாக பேசியுள்ளார்.

    விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஸ்வினுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது.

    கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் , பந்து வீச்சு பயிற்சியாளர் மாம்ரே ஆகியோர் மேற்பார்வையில் இந்திய வீரர்கள் லீசெஸ்டரில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்று அடைவார்கள்.

    இந்த நிலையில் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.  அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் வீரர்களுடன் செல்லவில்லை.

    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அஸ்வின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.

    அஸ்வின் முழு குணமடைந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுடன் இருந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆட முடியும். டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் குணமடைந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

    35 வயதான அஸ்வின் 86 டெஸ்டில் விளையாடி 442 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 30 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 23 முறை 4 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். 140 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    ஐ.பி.எல். போட்டியில், மும்பை அணியிடம் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின், மீண்டும் ஒருமுறை தான் சிறந்த பவுலர் என்பதை பும்ரா நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். #IPL2018
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை 3 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

    முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்தது. அடுத்த விளையாடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. இந்த வெற்றி மூலம் மும்பை பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

    7-வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணிக்கு பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த அணி ரன் ரேட்டில் (-0.490) மோசமாக இருக்கிறது.

    தனது கடைசி லீக் ஆட்டத்தில் (சென்னைக்கு எதிராக) நல்ல ரன் ரேட்டுடன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மும்பைக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-


    இலக்கை சேசிங் செய்த போது பேட்டிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி கட்டத்தில் சரியாக செயல்படவில்லை. மும்பை வீரர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். மீண்டும் ஒரு முறை தான் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த போட்டியில் (பெங்களூருக்கு எதிராக) நாங்கள் மிகவும் மோசமாக விளையாடினோம்.

    அது பற்றி எங்கள் பேட்ஸ்மேன்களிடம் ஆலோசித்தோம். லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் ராகுல் அவுட் ஆன விதம் சரியா, தவறா  என்று கூறுவது மிகவும் கடினம். அந்த பந்தை அவர் தவறாக அடித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-


    முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதை எதிர்பார்த்தேனோ அதை வீரர்கள் செய்து முடித்தார்கள். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது என்பதிலும், அதிகமான ஸ்கோர் குவிக்க முடியும் என்பதும் தெரியும்.

    நாங்கள் மிடில் ஓவரில் தடுமாறிவிட்டோம். பொல்லார்ட் எப்போதுமே எங்கள் அணியின் மேட்ச் வின்னர் தான். கடந்த சில ஆட்டங்களில் அவரை நீக்கிவிட்டு விளையாடினோம். அது எப்பேதும் கடினமான முடிவு தான். 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படாததற்காக அவர் வருத்தப்பட்டார்.

    கடைசி கட்ட ஓவர்களில் டுமினி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் பொல்லார்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்போதுமே நன்றாக ஆடக்கூடியவர். அதை அவர் சரியாகவே செய்தார். பும்ரா கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். பொறுப்பை எடுத்துக்கொண்டு அவர் அபாரமாக வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2018 #MIvKXIP #Ashwin
    ×