search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • பாக்கியவதி,கிஷோர் குமார் ஆகியோர் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர்.

    ஆலங்குளம்:

    தேசிய அளவில் கேரளா மாநிலம் கொச்சி ராஜுவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.

    இதில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி பாக்கியவதி மற்றும் 7-ம் வகுப்பு மாணவன் கிஷோர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முதல் இடத்தில் வெற்றி பெற்றனர். மேலும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய அளவில் பெற்ற முதல் பதக்கம் இது ஆகும்.

    • கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது.
    • கடலூர் உள்ளிட்ட 32 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளை யாடினார்கள்

    கடலூர்:

    கோவையில் மாநில அளவிலான ஊசூ விளை யாட்டு போட்டி நடை பெற்றது. இதில்   கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராமிடம் சாதனை படைத்த மாணவர்கள் நேரில் சென்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கத்தை காண்பித்தனர்.

    அப்போது அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் தேவதாஸ், வெற்றிச் செல்வன், பாரதிராஜா மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.

    • மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது.
    • இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் கடந்த 18 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியா ளர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது,    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை படைக்க பல்வேறு திட்டங்களை வழிவகுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஆகையால் நீங்கள் உரிய முறையில் பயிற்சி பெற்று தற்போது செய்துள்ள சாதனைகளை தாண்டி பல்வேறு சாதனைகளை பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.  மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ, நிர்வாக அலு வலர் ஞானவேல், பயிற்சி அலுவலர் வேணுகோபால், ராமலிங்கம், விஜயகுமார், முருகன், அஷ்ரப் அலி, சதிஷ், செந்தில், சிலம்பு மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்பயிற்சி அலுவலர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.

    • தேசிய திறனறி தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
    • வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தேசிய திறனறி தகுதி தேர்வு எழுதினர். இதில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதே போல் புதுக்கோட்டைவிடுதி, பாப்பாபட்டி, நைன் கொள்ளை, இலைகடிவிடுதி, முதலிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் 18 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவி சிவனேகா மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வட்டார கல்வி அலுவலர், வள மைய மேற்பார்வையாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.

    • கரூர் ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது
    • பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுடன் சான்றிதழ்

    கரூர், 

    கரூர் கிச்சாஸ் சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் வெங்கமேடு அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 சிலம்பம் ஆடுவது போல் வரையப்பட்ட ஓவியத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர். இதில் தொடர்ந்து 20 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழக தலைவர் புலியூர் வீர திருப்பதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளியின் முதல்வர் பகலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
    • தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி(108). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். குடும்ப வறுமை காரணமாக 2-ம் வகுப்புவரை மட்டுமே படித்த கமலக்கன்னி அதன்பிறகு வேலைக்கு சென்றுவிட்டதால் தன்னால் படிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.

    தானும் படித்திருந்தால் நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி இருக்க முடியும் என தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இருந்தபோதும் மீண்டும் தான் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரிடம் விடவில்லை. கேரள அரசு சம்பூர்ணாசாக்சாத் வகுப்பு என்னும் முழுஎழுத்தறிவுவகுப்பில் கமலக்கன்னி சேர்ந்தார். அங்கு தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.

    எழுத்து தேர்வு முடிவில் கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. அப்போது அவர் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் கல்வி கற்க அனைத்து வசதிகளும் உள்ளது. இருந்தபோதும் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தயங்குகின்றனர். எங்கள் காலத்தில் பள்ளிக்கு செல்லவே நீண்டதூரம் செல்ல வேண்டும். இதனால் எங்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைக்கு வைத்து கொண்டனர். எனவே மாணவர்கள் கற்கும் காலத்தில் கல்வியை உணர்ந்து படிக்க வேண்டும் என்றார்.

    • சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள்உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
    • மாணவன் ஜெகத் பிரபு 1204 புள்ளிகளை பெற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் இடம் பிடித்தார்.

    தென்காசி:

    உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள், சதுரங்க விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த சர்வதேச கூட்டமைப்பு வீரர்களின் புள்ளி பட்டியலை அறிவித்த நிலையில் அதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு 1204 புள்ளிகளை பெற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் இடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி. திட்டம்,
    • புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள் நகரில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி. திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை முதல்வர் தேரில் பார்வையிட்டது. இன்னுயிர் காப்போம் நம் மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் திட்டம். புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது. காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் திங்கள்நகரில் காட்சிப்படுத் தப்பட்டது.

    பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண் காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
    • 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சேலம்:

    மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.

    இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெற்றோர், ஆசிரியர்கள் வாழ்த்து
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் நடந்த மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், பொதுப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கபடி போட்டியில் 2-ம் இடமும், கைப்பந்து போட்டியில் 3 ம் இடமும் பிடித்து வெற்றி பெற்றனர்.

    மேலும் ஓட்டப்பந்தயத்தில் 11 ம் வகுப்பு மாணவன் கௌதம் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடமும் பிடித்து வெற்றி பெற்றார். மேலும் சிலம்பம் போட்டியில் 8 ம் வகுப்பு மாணவி ருத்ரா என்பவர் (அலங்கார வீச்சு) மூன்றாம் இடம் பிடித்தார்.

    மேலும் இப்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11ம் வகுப்பு மாணவன் தினேஷ் கார்த்திக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும் 50 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2 ம் இடமும் பிடித்தார்.

    மேலும் 7 ம் வகுப்பு மாணவி திவ்ய பிரபா 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

    கபடி போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவர்களுக்கு தல 2 ஆயிரம் வீதம் 24 ஆயிரமும், கைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் 26 ஆயிரம் என மொத்தம் 50 ஆயிரம் பணப்பரிசு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    மேலும் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி. ஆறுமுகம் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் உடற்கல்வி ஆசிரியர் மதன்குமார் உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கல்வி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

    • மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • கல்லூரி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் மாதரே டி- 23 என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். அண்ணாமலை ரகுபதி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் டாக்டர். மீனாட்சி அண்ணாமலை முன்னிலை வகித்தார். முதல்வர் காசிநாத பாண்டியன், டீன் சுப்பாராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மது சரண்வேல் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் நடிகை லிஜோ மோல், புத்தக உரையாசிரியர் ஆனந்தி, பின்னணிப் பாடகி மாளவிகா சுந்தர், துணை நடிகை வினோதினி சின்னத்திரை நகைச்சுவை நடிகை சுனிதா கோகை, கார் பந்தய வீராங்கனை ஸ்ரேயா லோகியா, வியாபாரத் துறை வல்லுநர் மினுஅகர்வால், சிலம்பத்தில் உலக சாதனை புரிந்த சுகிதா, உணவு வல்லுனர் ஷர்மிளா , நடிகை கார்த்திகா, சமூக சேவகி சித்ரா தேவி மற்றும் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவியும் தொழில திபருமான பார்வதி ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவில் கல்லூரி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
    • கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    கேரள விளையாட்டு ஆணையம் சார்பில், கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை நீச்சல் வீரா் மற்றும் வீராங்கனைகள் 10 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைப் பெற்றனா்.

    விருதுநகா் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில், கலசலிங்கம் மாணவா்கள் 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை பெற்று ஆண்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றனா்.

    தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த, மாநில ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

    மதுரை, புளு ஒசன் ஸ்போர்ட்ஸ் ஏரியா சார்பில், நடந்த ஐவா் கால் பந்தாட்ட போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா். ஸ்ரீவில்லிபுத்துா் ஏகலைவன் கபடி குழுவினா் சார்பில், நடந்த மாநில கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் கால்பந்து அணியினா் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

    சிவகாசி சுப்ரீம் ரோட்டரி கிளப் சார்பில் நடந்த கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலை ஆடவா் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா். கலசலிங்கம் பல்கலை பெண்கள் அணியினா் முதல் பரிசு ரூ.7 ஆயிரம், சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனா்.

    ஆலங்குளம் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் கலசலிங்கம் பல்கலை அணியினா் முதல் பரிசு ரூ. 21ஆயிரம் மற்றும் கோப்பையைப் பெற்றனா். சாத்தூர் இண்டியன் ஸ்டார் கைப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில வாலிபால் போட்டியில் 2-ம் பரிசு ரூ.8ஆயிரம் பெற்று கோப்பையைப் பெற்றனா்.

    வெற்றி பெற்ற அணியினரை பல்கலைகழக வேந்தா் கே.ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுதேவன், மாணவா் நலத்துறை இயக்குநா் முத்துக்கண்ணன், உடற்கல்வி இயக்குநா்கள் எஸ்.விஜயலட்சுமி, சிதம்பரம், நீச்சல் பயிற்சியாளா் உதயகுமார் ஆகியோர் பாராட்டினா்.

    ×