search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • ராமநாதபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிற 5-வது முகவை சங்கமம் புத்தக திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் 114 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இங்கு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அரங்கு மற்றும் பல்வேறு துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட சாதனை விளக்க அரங்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ- மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வந்தனர்.

    நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்ப ட்டது. இதனை பொதுமக்கள் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் தொடர்ந்து 12 நாட்கள் இடம் பெற்றது.

    அரங்கில் நாள்தோறும் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு 12 நாட்களில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெற இந்த கண்காட்சி அரங்குகள் பயனுள்ளதாக அமைந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழக அரசின் சாதனைகள் குறித்த கையேடு மற்றும் மடிப்பு கையேட்டினை வெளியிட்டு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியில் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

    இதுகுறித்து மாணவி கூறியதாவது:-

    வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் ரேஸ் போட்டிகளில் சாதனை படைத்தனர்.
    • மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு ரோலர் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் மற்றும் நவோதயா அகாடமி இணைந்து நாமக்கல் நவோதயா அகடாமி மைதானத்தில் தேசிய அளவிலான போட்டிக்கான தேர்வு செய்வதற்கான ஸ்கேட்டிங் ரேஸ் போட்டி நடந்தது.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து ஸ்கேட்டிங் ரேஸ் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசாக தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழக்கரையில் இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி உள்பட 3 பள்ளி மாணவர்களில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து ராமநாதபுரம் மெனு ஸ்போர்ட்ஸ் அகாடமி நாமக்கலுக்கு அழைத்துச் சென்று போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இஸ்லாமியா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் முஹம்மது பஹத் (9-ம் வகுப்பு), முஹம்மது முஆத் (5-ம் வகுப்பு) ஆகியோர் 2-வது இடமும், முஹம்மது அஹ்ஷன் (9-ம் வகுப்பு) 3-வது மற்றும் 5-வது இடமும், மோஹித் ராஜ் (2-ம் வகுப்பு) முதல் மற்றும் 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    அவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், கல்விக்குழு நிர்வாகிகள், முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அரிமா சங்கம் சார்பில் சாதனை செய்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கேரிகிப்ட்சன்சாம் (வயது10). இவர் சிங்கப்பூரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பெற்றார்.

    அவருக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன், பட்டய தலைவர் அனிதா பால்ராஜ், செயலாளர் வைரமுத்து, பொருளாளர் சுந்தரம், முன்னாள் தலைவர் சிவராஜன் ஆகியோர் மாணவனை பாராட்டி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினர்.

    இதேபோல ஆசாதி சாட் 2 செயற்கைகோளுக்கு மென்பொருள் தயாரித்து இஸ்ரோ சென்று திரும்பிய திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் திருமங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளுக்கும் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

    இதில் நிர்வாகிகள் சுரேஷ்குமார், சுந்தரபாண்டி, விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதே பிரிவில் வட்டு எறிதலில் லாராஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
    • மேசைப் பந்து இரட்டையர் பிரிவில் சஞ்சனா மற்றும் தேவிஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு பல்வேறு சாதனை களை படைத்துள்ளனர்.

    அதில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவியர்கள் தடைத்தாண்டும் ஓட்டப்பிரிவில் மோனிஷா 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

    அதே பிரிவில் வட்டு எறிதலில் லாராஸ்ரீ இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேசைப் பந்து இரட்டையர் பிரிவில் சஞ்சனா மற்றும் தேவிஸ்ரீ மூன்றாம் இடம் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற மாணவி மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், புவனேஷ்வரி, திருப்பதி, தினேஷ்குமார் ஆகியோரை ஸ்ரீராம் கல்வி நிறுவனர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணை ப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
    • இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இன்பன்ட் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தில் உள்ள மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் இளையோர் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • தொடர்ந்து, 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்ப சாதனை.
    • 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை.

    பட்டுக்கோட்டை:

    அணைக்காடு சிலம்பக்கூடம் மற்றும் மனோரா ரோட்டரி சங்கம் இணைந்து 74 வது குடியரசு தினம் மற்றும் சிறார் மீள் உணர் தற்காப்பு விழிப்புணர்வை முன்னிறுத்தி 24 மணி நேர உலக சாதனை. நிகழ்ச்சி ஜனவரி 26 முதல் 27ம் தேதி வரை ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் கலை அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பால்கஸ்மி மற்றும் செயலனார்-தஞ்சை மாவட்ட சைக்கில் அசோரியேசன் செயலாளர் நெப்போலியன் வரவேற்புரையாற்றினார்.

    லாரல் கல்வி நிறுவனங்–களின் தாளாளர் பாலசுப்ர மணியன், ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    தஞ்சை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சதாசிவம், இந்திய சிலம்ப சம்மேளனம் துணைச் செயலாளர் ஜலேந்திரன், மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் சிவச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிர்வாகத்தின் சிஇஓ டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் வினோத், அதன் மாநில தீர்ப்பாளர் பரணிதரன் மற்றும் ஹேமந்த் குமார் உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர்.

    இந்த உலக சாதனையின் போது மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையினை டாக்டர் ரவி பொறுப்பேற்று செய்திருந்தார். மேலும் விழாவில் மனோரா ரோட்டரி சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, அதன் பொருளாளர் சங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் தொடர்ந்து 6 மணி நேரம் உலக சாதனை செய்த பிரிவில் சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி சாதனை புரிந்தவர்கள் 4 நபர்களும், அதே பிரிவில் இரண்டு நபர்கள் 12 மணி நேர சாதனையும் புரிந்தனர்.

    அடுத்து 12 மணி நேரம் தொடர்ந்து ஒற்றை சிலம்பம் சுழற்றி 12 நபர்கள் சாதனை புரிந்தனர். இறுதியாக 24 மணி நேரம் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் ஒற்றை சிலம்பம் சுழற்றி எட்டு நபர்கள் சாதனை புரிந்தனர்.

    நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முடிவில் தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளரும் சிலம்பகலை பயிற்சியாளருமான ஷீலாதாஸ் நன்றி கூறினார்.

    • ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற போட்டியில் கமலாவதி பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • மாணவி அனன்யா,மாணவர்கள் கார்த்தி, அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.

    ஆறுமுகநேரி:

    இந்திய தொழில் நுட்பக் கழகம் சார்பில் தேசிய அளவிலான தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டி ஐதராபாத் ஐ.ஐ.டி.யில் 2 நாட்கள் நடைபெற்றது. தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் மற்றும் ரோபாட்டிக்ஸ் என இரு பிரிவுகளாக இந்த போட்டி நடந்தது.இதில் சாகுபுரம் கமலாவதி பள்ளியின் சார்பில் 7 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    தொழில் முனைவோர் சாம்பியன்ஷிப் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனிஷ் சங்கர், குஷ்வந்த், 8-ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக், சிவ சந்தோஷ் ஆகியோர் சிறந்த வடிவமைப்பாளர்க்கான விருதை பெற்றனர். 7-ம் வகுப்பு மாணவி அனன்யா, 5-ம் வகுப்பு மாணவர் கார்த்தி, 4-ம் வகுப்பு மாணவர் அஜெய்கார்த்திக் ஆகியோர் ரோபாட்டிக்ஸ் போட்டியில் சான்றிதழ்களை பெற்றனர்.

    தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த அடல் டிங்கரிங்க் ஆய்வக ஆசிரியை சேர்மசத்தியசிலி ஆகியோரை பள்ளியின் அறங்காவலர்களான டி.சி.டபிள்யூ.நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் சீனிவாசன், மூத்த பொது மேலாளர் ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ். தலைமை ஆசிரியர்கள் ஸ்டீபன் பாலாசீர், சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

    • ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நாடார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயம் மற்றும் புதிய சோழன் அமைப்பு சார்பில் உடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் யோகா பயிலும் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் ஆனந்த பத்மாசனம் யோகா செய்து சாதனை படைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் தலைவர் ராஜா மகேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவயோகி சிவசண்முகம் குருஜி மற்றும் மேலூர் டாக்டர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மண்டல தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவண பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை படைத்தார்.
    • டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    சேலம்:

    கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐஎம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும் தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் , வருகிற ஜூலை மாதம் சீனா செங்குடுவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    இவருக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
    • 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.

    இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

    குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

    அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • தஞ்சை டாக்டர்கள் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    கோவையில் அவசர சிகிச்சை பிரிவு முதுநிலை பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான மாநில அளவிலான வினாடி- வினா போட்டி இந்திய மருத்துவ சங்கத்தால் நடத்தப்பட்டது.

    போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலிருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையை சேர்ந்த அவசர சிகிச்சை பட்ட மேற்படிப்பு உறைவிட மருத்துவர்கள் டாக்டர்.

    சேகர், டாக்டர். குமரேசன், டாக்டர். மீனா மற்றும் டாக்டர். ரூபிக்கா ஆகியோர் கலந்து கொண்டு 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    அவர்களுக்கு இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க நிர்வாகிகள் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    ×