என் மலர்
நீங்கள் தேடியது "சாதனை"
- சதுரங்க போட்டி–யில் இந்த பள்ளியின் 9-ம்வகுப்பு மாணவர் ஏ.அஜய் ஜோலூயிஸ் 2-வது இடம் பிடித்தார்.
- அகாடமி இயக்குனர் பி.சாவித்திரி மற்றும் முதல்வர்பி.சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி, பரிசளித்தனர்.
காங்கயம்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலையில் நடந்தது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 64 மாணவர்கள் வட்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டனர். சிவன்மலை ஜேசீஸ் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் கே.லிங்கேஷ் 14-வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் 4-வது இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார். மேலும் நாமக்கல் பிரைம் செஸ் அகாடமி நடத்திய சதுரங்க போட்டியில் இந்த பள்ளியின் 9-ம்வகுப்பு மாணவர் ஏ.அஜய் ஜோலூயிஸ் 2-வது இடம் பிடித்தார்.
மேலும் மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பி.சிவகாந்தஸ்ரூபன் 3-வது இடமும், 19 -வயதுக்கு உட்பட்ட டேக்வாண்டா போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர் எஸ்.கேசவன் 3-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சி.பழனிச்சாமி, பொருளாளர் பி.மோகனசுந்தரம், அகாடமி இயக்குனர் பி.சாவித்திரி மற்றும் முதல்வர்பி.சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி, பரிசளித்தனர்.
- தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
- மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.
இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.
சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .
இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தேசிய கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டிகள் நடந்தன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோகாய் கராத்தே தோ பள்ளியை சேர்ந்த ராமநாதபுரம் மாணவர்கள் கட்டா மற்றும் ஷாய் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
சென்சாய் விமல சண்முகவேல் மேற்பார்வையில் பயிலும் ராமநாதபுரம் ஷ்ரமல் அகாடமி மாணவர்கள் மற்றும் உச்சிப்புளியை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்றனர். குமிதே பிரிவில் பிரசன்னா, கருனேஷ் கார்த்திகேயன், மிர்திக்கா, ஜெயஜீத், அக்ஷிதா, கட்டா பிரிவில் பிரசன்னா, மிர்திக்கா தங்க பதக்கமும், ஷ்ரவன், பிரிதம், யோகேஷ் மகிபாலன், ஸ்ரீஹரன், நுதர்ஷன், முவிஸ் குமார், ஹரி பிரனவ், பிரஜீத், கருனேஸ் கார்த்திகேயன் ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.
- சேரன்மகாதேவி பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேடிங் போட்டியில் 1000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் பாவூர்சத்திரத்தை சேர்ந்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 42 பேர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
சேரன்மகாதேவி ஸ்கேடு காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜியில் தமிழன் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேடிங் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரத்தை சேர்ந்த வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி சார்பில் 42 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 பேர் முதல் பரிசும், 11 பேர் 2-ம் பரிசும், 8 பேர் 3-ம் பரிசும் பெற்றனர். பரிசு பெற்ற அனைவரையும் சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாராட்டினர்.
- இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
- பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் குறுமையம், கல்வி மாவட்டம் என அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெறும் அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடுவார்கள். அந்த வகையில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான எறிபந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம், கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காலிறுதியில் தென்காசி மாவட்ட அணிக்கு எதிராகவும், அரையறுதியில் கரூர் மாவட்ட அணிக்கு எதிராகவும் விளையாடி வெற்றி பெற்றனர். நிறைவாக நாமக்கல்லில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அணியுடன் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தனர். பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப் பள்ளி அணியினர் தொடர்ந்து 2-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் நிரேஷ் , சுகுணா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபால், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
- தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.
மதுரை
தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.
- மாணவியின் சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
- சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியரின் மகள் பி.ரிதன்யா (வயது 7). அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், 42 விநாடிகளில், 35 ஆங்கில நா பிறழ் வாக்கியங்களை (டங் டிவிஸ்டர்) கூறி உலக சாதனை படைத்தார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை' ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருஞானம், தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பங்கேற்று, மாணவி ரிதன்யா மற்றும் அவர்களது பெற்றோர்களை வெகுவாக பாராட்டி கவுரவித்தனர்.
- பரணி வித்யாலயா மாணவி 2 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார்
- தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ்
கரூர்:
17-வது தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா மாணவி சுஷ்மிதா முருகேஷ் , தமிழக அணியின் சார்பாக பங்கு பெற்று தனி இரட்டையர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம், தமிழக அணியின் குழுப்பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் என மொத்தமாக 2 தங்கப்பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து லக்னோவில் நடந்த பாராட்டு விழாவில் சாதனை மாணவி கரூர் பரணி வித்யாலயா சுஷ்மிதா முருகேஷ்க்கு உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா வெற்றிக் கோப்பையை வழங்கி பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கு திரும்பிய சுஷ்மிதா முருகேஷ் மற்றும் அவருக்கு டென்னிஸ் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள் மோகன் வினோத்குமார் ஆகியோருக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றுகையில், மாணவர்கள் சிறு வயது முதல் படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார்கள். மாணவி சுஷ்மிதா போன்று அனைத்து மாணவர்களும் அவரவர்க்கு விருப்பமான துறையில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்' என்று கூறினார். பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர் மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.
- விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.
- தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 9-ம் வகுப்பு மாணவன் இன்பத்தமிழன் 75-80 எடை பிரிவில் தங்க பதங்கமும், விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆசைத்தம்பி, அருண்ராஜ் மற்றும் வழிகாட்டியாய் இருந்த உதவி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர்களை தலைமை ஆசிரியை பிரேமாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மற்றும் கோவையில் மாநில அளவிலான கலைப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைப்போட்டிகளை பள்ளி கல்வித்துறை நடத்தியது. 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.
ஓவியப்போட்டி (நுண்கலை), இசைப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, நாடகப்போட்டி, மொழித்திறனுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி என்று 6 வகையான கலைப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் புழல் அருகே உள்ள கண்ணப்பசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை நடந்த தனிநபர் நடிப்பு பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் அப்துல் பாரிஸ், குழுப்பாடல் போட்டியில் மனிதநேய பாடல் தலைப்பில் சனுஷ்டிக்கா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். இதேபோல் 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் மேற்கத்திய நடனப் போட்டியில் வர்ஷினி குழுவினர் முதல் பரிசை வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இவர்கள் மதுரை மற்றும் கோவையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
- யோகாவில் 2-ம் வகுப்பு மாணவன் புதிய சாதனை படைத்துள்ளார்
- 8 நிமிடங்கள் தலைகீழாக நின்று
திருச்சி:
திருச்சியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவன் அக்ஷய்ராஜ் கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட கலைகளை கற்றுள்ளார். உலக யோகா தினத்தை முன்னிட்டு 8 நிமிடங்கள் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நேஷனல் ரெகார்ட்ஸ், ஆசிய பசிபிக் சாதனை உள்ளிட்ட 3 உலக சாதனைகள் படைத்துள்ளார். அந்த சிறுவன் புதிய முயற்சியாக சின் ஸ்டாண்ட் போஸ் யோகாவை 4 நிமிடம் 3 வினாடி செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டெல்லியில் உள்ள சில்ட்ரன்ஸ் ரெக்கார்ட்ஸ் குளோபல் ரெகார்ட்ஸ் ஆசிய பசிபிக் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகத்தில் இடம் பெற அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி கின்னஸ் சாதனையாளர் சாய்னா ஜெட்லி மற்றும் மாணவரின் பெற்றோர் அன்புராஜ், செல்வி மற்றும் கராத்தே யோகா சிலம்ப வீரர்களும் பாராட்டியுள்ளனர்.
- இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம்.
- இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.
கும்பகோணம்:
அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள பல்தொழில்நுட்ப கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா அன்னை கல்வி குழும தலைவர் அன்வர்கபீர் தலைமையில் நடைபெற்றது.
தாளாளர் அப்துல்கபூர் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் கலந்து கொண்டு 881-க்கும் பட்டயங்களை வழங்கி பேசியதாவது:-
உலகம் முழுவதும் இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப படிப்புகளை அரசு செய்து தருகின்றது.
பட்டயங்கள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும். இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சாமிநாதன், துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி கௌதம் மற்றும் பேராசிரியர்கள். மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.