என் மலர்
நீங்கள் தேடியது "slug 220791"
- நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்லடம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்
பல்லடம்:
பல்லடம் நகராட்சி 14 வது வார்டு மேற்கு பல்லடம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு முறையாக தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்றும், அங்குள்ள சுகாதார வளாகத்திற்கு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வருவதில்லை என்றும் கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார்10க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரிடம் பேசிய நகராட்சி அதிகாரிகள் குழாய் இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால், தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை சரி செய்ய லாரி மூலம் தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
- குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொடுப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக ஏற்காடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்து வந்தது.
- முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொடுப்பதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக ஏற்காடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடந்து வந்தது. தற்போது அனைத்து கிராமங்களிலும் அந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் ஏற்காடு ஊராட்சியில் உள்ள கோவில் மேடு பகுதியில் இந்தப் பணிகள் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஏற்காடு ஊராட்சி மற்ற தலைவர் சிவசக்தி ரவிச்சந்திரன் முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
அதே போல் ஏற்காடு வேலூர் ஊராட்சியில் உள்ள 2-வது வார்டில் வேலூர் ஊராட்சி கவுன்சிலர் சின்ன வெள்ளை, வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி சின்னசாமி மற்றும் ஏற்காடு தி.மு.க ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் சின்னவெள்ளை ஆகியோர் குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவை கூடத்தில் நடந்தது.
கன்னியாகுமரி:
கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு அடிப்படை மானிய திட்டத்தின் கீழ்ரூ.30 லட்சம் செலவில் குடிநீர் மற்றும் சாலை பணிகள் மேற்கொள்வது என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொட்டாரம் முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் பேரூராட்சி துணைத் தலைவி விமலா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பொன்முடி, கணேசன், கிறிஸ்டோபர் சந்திரமோகன், சரோஜா, செல்வன், நாகம்மாள், ரெத்தினம், வனிதா வசந்தகுமாரி இந்திரா அனிதா தங்க குமார் மற்றும் இளநிலை உதவியாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15- வது நிதிக்குழு அடிப்படை மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 லட்சத்து15 ஆயிரம் செலவில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்வது, கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் சாலை முதல் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் வரை ரூ.8 லட்சம் செலவில் வண்ணத் தரைத்தளம் அமைப்பது, கொட்டாரம் பேரூராட்சிக்குஉட்பட்ட லட்சுமிபுரம் கோட்டக்கரை சாலையில் தடுப்புச் சுவர் அமைத்து வண்ண தரைத்தளம் அமைப்பது, கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் திட்டபராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- வேலவன் நகர் குடியிருப்பு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே குடிநீர் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கதிராமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலவன் நகர் குடியிருப்பு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி சாலைகள் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து கிடக்கிறது. சாலையோரம் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே குடிநீர் குழாயும் பதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கால்வாய் உடைந்து கழிவு நீர் தண்ணீரும் மழை நீரும் சேர்ந்து சாலை சேரும் சகதியும் ஆக மாறி உள்ளது.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்ததால் குடிநீரும் கழிவுநீராக மாறி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சாலையை சீரமைத்து, கழிவு நீர் கால்வாயும் சீரமைக்கவும் குடிநீர் குழாயை முறையாக பராமரிக்கவும் வலியுறுத்தி சாலையில் நடவு செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
- அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சியில் 190 மீள்குடியிருப்புகள் உள்ளது.
இந்த குடியிருப்பில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு தலைஞாயிறு- ஆலங்குடி சாலையில் காடந்தேத்தி பஸ் நிலையத்தில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்ததை நடத்தி விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- காலை, மாலை நேரங்களில் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.
- நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-
தேவகோட்டை நகரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசின் துணையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறுகள் நகரில் 3 இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு விரைவில் தினமும் காலை, மாலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
நகரில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக தரம் உயர்த்தி மண் சாலை இல்லாத நகராக தேவகோட்டை மாற்றப்படும்.
மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் 6 வார்டு வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மாநகரங்களுக்கு இணையாக இளைஞர்கள் தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தவாறு கல்வி கற்பதற்கு வசதியாக இலவச வை-பை வசதி செய்யப்படும். நவீன விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். தினச்சந்தை, வாரச்சந்தைக்கான புதிய கட்டிடத்திற்கு மதிப்பீடும் பணி நடக்கிறது.
நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கால்வாய்களை மராமத்து செய்து சீர்படுத்தி குளங்கள் தூர்வாரப்படும். நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் பணியாள–ர்களுக்கு சீருடை வழங்குவது, உள்ளிட்ட 40 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
திருச்சி
துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காவிரி குடிநீர் மற்றும் சுற்றுசுவர் ரூபாய் 10 லட்சம் செலவில் அமைப்பது, சாமிநாதன் காய்கறி மார்க்கெட்டில் ரூபாய் 3 லட்சம் செலவில் கழிவறைகள் மராமத்து செய்வது, நகராட்சி மருத்துவமனைக்கு ரூபாய் 5 லட்சம் செலவில் குடிநீர் வசதி செய்து தருவது, காமராஜ் நகரில் பழுதடைந்துள்ள தார் சாலைகளை ரூபாய் 6 லட்சத்திற்கு புதுப்பிப்பது,
பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது, உள்ளிட்ட 40 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளையராஜா, அம்மன் பாபு, சுமதி மதியழகன், முத்து மாங்கனி பிரபு, பாலமுருகவேல், கௌதமி கருணாகரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தாராசுரம் பகுதியில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.
- சாலை மறியலால் கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுவாமிமலை:
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக குடி தண்ணீர் சரி வர வழங்கப்படவில்லை
இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் முறையாக குடிநீர் வழங்க வேண்டி பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பத்ம குமரேசன் தலைமையில் கும்பகோணம்- தஞ்சை சாலையில் மறியலில் இன்று ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலில் மாநகராட்சி கவுன்சிலர் கௌசல்யா வாசு, அதிமுக நிர்வாகிகள் லெனின். கோவி. கேசவன், பொன்னையன், கோவி.ரமணன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்
கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இந்த சாலை மறியலால் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் பொங்கலூர் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
பழனிசாமி (மாவட்ட கவுன்சிலர்): அலகுமலையில் 4 ஊராட்சிகளுக்கு மேல் உள்ள ஆதிதிராவிட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சமுதாய நலக்கூடம் கடந்த 2 வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோதிபாசு (இந்திய கம்யூனிஸ்டு): குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அத்திக்கடவு குடிநீர் முறையாக வருவதில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இதுகுறித்து பேசப்படுகிறது. ஆனால் ஒரு தீர்வு என்பது கிடைப்பதில்லை. வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வக்கீல் எஸ்.குமார் (ஒன்றிய குழு தலைவர்): வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு பகுதியை எடுப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 2 முறை கடிதம் கொடுத்தாகிவிட்டது. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்திக்கடவு குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. நமது பொங்கலூர் பகுதிக்கு வழங்க வேண்டிய குடிநீரை முழுமையாக வழங்கினாலே அதற்கு ஒரு தீர்வு ஏற்படும். விரைவில் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி ஒரு நல்ல தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய நிர்வாகமும், கிராம ஊராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மக்களுக்கு நாம் நல்லதை செய்ய முடியும். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மக்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்த பாகுபாடும் பார்ப்பதே கிடையாது.
ஒன்றிய குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து தரப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்படவுள்ள ஒன்றிய அலுவலகத்திற்கான பூமி பூஜை விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் வட்டார வளர்ச்சி அதிகாரி மகேஸ்வரன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பாலுசாமி, லோகு பிரசாந்த், சுப்பிரமணி, பிரியா புருஷோத்தமன், மலர்விழி ராமசாமி, மோகனப்பிரியா, குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கன்னியாகுமரி:
திருவட்டார் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பெனிலா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் மகாராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், கவுன்சிலர்கள் சுவாமிதாஸ், றாபி, ஸ்டாலின் ஜோஸ், ராஜம்மாள், புஷ்பம், ஜெஸ்டின் ராஜ், ராஜேந்திரன், பரமேஷ்வரி, உஷாகுமாரி, ராஜிலா, சுரேஷ், மணிகண்டன், செல்வி, சிந்து, லில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பது என்றும், திருவட்டார் காவல் நிலையம் அருகில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி புதியதாக அமைப்பது என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், விவசாய நிலங்கள் வளம் பெற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளம், ஏரிகளை உடனே தூர் வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அந்தியோதியா ரெயிலை சீர்காழியில் நின்று செல்ல ேகாரிக்கை விடுக்கப்பட்டது.
- சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி ரெயில் நிலையத்திற்கு பயணிகள் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சீர்காழி ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
ஆய்வு குழுவிடம் சீர்காழியில் ஒரு வழியில் தற்போது நின்று செல்லும் அனைத்து ரெயில்களும் இரண்டு வழித்தடத்திலும் நின்று செல்லவும், அந்தியோதையா ரயிலை சீர்காழியில் நின்று செல்லவும், பெட்டிகள் அடையாளம் காண வழிவகை செய்யவும், நிரந்தரமாக இரண்டாம் நடைமேடையில் மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும், சுகாதாரமான குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டது.
முதல் நடைமேடையில் புதிய நிழல் குடை அமைக்கவும் பயணிகள் நல குழு உறுப்பினர்களிடம் விழுதுகள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஷரவணன் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
இதேபோல் ரயில்வே துறை சேர்மேனிடம், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் சீர்காழியில் நின்று செல்லாத ரயில்கள் குறித்து சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் ஞானமணி, செயலாளர் வெங்கட்ராஜ், பொருளாளர் சத்யநாராயணன், எக்ஸ்ரே ராஜா, சேதுராமன் ஆகியோர் கோரிக்கை மனு அரித்தனர். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவ சங்கர், நகரத் தலைவர் சங்கர், பொறுப்பாளர் வெற்றிலை முருகன், சீர்காழி நகர வர்த்தக சங்கத்தை சேர்ந்த தில்லை நடராஜன் உள்ளிட்ட பலர்உடன் இருந்தனர்.
- திருமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியல் செய்தனர்.
- மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் மேற்குதெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.
அந்த பகுதிக்கு பஞ்சாயத்து சார்பில் விநியோகம் செய்யப்படும் போர்வெல் தண்ணீர் சரிவர வருவதில்லை. மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீரை வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டமும் இந்த கிராமத்தில் தோல்வியடைந்தது.
இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது.
இதே போல் தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனை தொடர்ந்து மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் கிராம பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சேடபட்டி யிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த ஒரு டவுன்பஸ்சை சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருமங்கலம் யூனியன் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.