என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வசூல்"
- மாதாமாதம் மின்சாரத்தை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்.
- மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரெயில் கட்டண சலுகை திரும்ப வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் 11-வது அமைப்பு தின விழா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார்.
வட்ட துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். வட்ட செயலாளர் செல்லத்துரை விளக்கி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமூக நீதியின் அடிப்டையில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மின் கட்டணம் மாதம் என்பதை தவிர்த்து மாதாமாதம் மின்சாரத்தை கணக்கீட்டு வசூல் செய்ய வேண்டும்,
இறந்துபோன ஓய்வூதியருக்கு ரூபாய் 1,50,000 குடும்பநல நதி வழங்க வேண்டும்,மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரயில் கட்டண சலுகை திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜமோகன், ஜெகஜோதி, நடராஜன், அன்பழகன், கருணாநிதி உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் அண்ணா துரை நன்றி கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுகளும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவீன கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், குற்ற செயல்களை குறைக்கவும் மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்போது வாகன ஓட்டிகள் தங்கள் அபராதத்தை செலுத்தும் போது, போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூலிக்க அரசு திட்டமிட்டது.
இதன்படி போக்குவரத்து போலீசாருக்கு ‘ஸ்வைப்’ மெஷின் மூலம் அபராத தொகையை வசூலிக்கும் முறை தமிழக அரசு மூலம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்வைப் மெஷின்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் தலைமை தாங்கி, போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களை வழங்கியதுடன், கண்காணிப்பு கேமராக்களின் நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் வாகன விதி மீறல் அபராத தொகையை பணமில்லா பரிவர்த்தனை மூலம் வசூல் செய்யும் வகையில் முதல் கட்டமாக 14 ஸ்வைப் மெஷின்களை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியுள்ளது. இந்த மெஷின்கள் திருப்பூர் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மெஷின் மூலம், விதிமீறலுக்கு உள்ளாகும் வாகன ஓட்டுனர்கள், அபராத தொகையை தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம். இதன் மூலம் ரொக்க பரிவர்த்தனை தவிர்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குற்ற தடுப்பு நடவடிக்கைக்காகவும், போக்குவரத்து மேலாண்மைக்காகவும், முதல் கட்டமாக தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான 38 நவீன கண்காணிப்பு கேமராக்களும், தனியார் பங்களிப்புடன் 9 கேமராக்கள் என மொத்தம் 47 கேமராக்கள் மாநகருக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டு நவீன கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மேலும் ரூ.12 லட்சம் மதிப்பில் 46 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக் கப்பட உள்ளது. இந்த அனைத்து கேமராக்களும் ஆன்-லைன் மூலம் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஒரு மாதம் வரை சேமிப்பில் இருக்கும் வகையில் தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு குற்றங்களை தடுக்கவும், நடைபெற்ற குற்றங்களை புலன்விசாரணை செய்து கண்டுபிடிக்க பயனுள்ள வகையில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உதவி மேலாளர் செல்வராஜ், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்