search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணாசி"

    • ‘காசி-தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • மாணவர்களுக்கான ரெயில் கட்டணத்தை அரசே செலுத்தவும் ஏற்பாடாகி வருகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்துக்கும், வாரணாசிக்கும் (காசி) இடையேயான பழங்கால தொடர்பை மீட்டெடுத்து வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக 'காசி-தமிழ் சங்கமம்' என்ற பெயரில் வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த காசி-தமிழ் சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையிலான பாரதிய பாஷா சமிதி, இந்த நிகழ்ச்சிக்கான பரிந்துரையை வழங்கி ஏற்பாடு செய்துள்ளது.

    இரண்டு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாக கொண்டுவருதல், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை பற்றிய புரிதலை உருவாக்குதல் மற்றும் இரு பிராந்தியங்களை சேர்ந்த மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குதலே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழங்களில் பயின்று வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களை காசிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக ரெயில்களில் சிறப்பு பெட்டிகளை இணைக்க ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. மாணவர்களுக்கான ரெயில் கட்டணத்தை அரசே செலுத்தவும் ஏற்பாடாகி வருகிறது.

    இதைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 பேர் கொண்ட பல்வேறு குழுக்களை காசிக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

    வாரணாசி:

    தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்துக்கும் குறிப்பாக வாரணாசிக்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    இதற்காக வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'காசி-தமிழ் சங்கமம்' என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் வருகிற 16-ந் தேதி தொடங்குகின்றன.

    இந்த சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி-தமிழ் சங்கமத்தின் நோக்கம் ஆகும். இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாக சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்படும். அத்துடன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இந்த நிறுவனங்கள் இயங்கும்.

    இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 2,500 பேர் கலந்து கொள்வார்கள். அவர்கள் காசி விஸ்வநாத் தாம், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.

    பாரதிய பாஷா சமிதி அல்லது இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான உயர் அதிகாரக்குழு, தமிழ் கலாசாரத்துக்கும், வாரணாசிக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டாடுகிறது.

    இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையேயான பரந்த உறவின் நோக்கம் இரு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாக கொண்டு வருவதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியம் பற்றிய புரிதலை உருவாக்குவதும், இரு பகுதி மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குவதும் ஆகும்.

    வாரணாசியில் பல ஆண்டுகளை கழித்த சுப்பிரமணிய பாரதியார் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

    • பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய பாஷா சமிதி (பி.பி.எஸ்.) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி கொண்டாடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கார்த்திகை மாதம் அனைவரும் சிவனை வழிபட்டு விளக்குகளை ஏற்றுவர்.

    அந்த மாதத்தையொட்டி இது நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் உதவும்.

    ஒரு மாத கால நிகழ்ச்சியாக 'காசி தமிழ்ச் சங்கமம்' வாராணசியில் (காசி) நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள காசி தமிழ்ச் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

    பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநர்கள் அறிஞர்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

    இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி தமிழ்ச்சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 12 குழுக்களில் தலா 210 பேர் பங்கேற்கிறார்கள்.

    கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள் என்றனர்.

    இந்தி திணிப்பு குறித்த தமிழக முதல்வரின் கடிதம் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளையும் தேசிய மொழிகள் என்றும், இந்த மொழிகளில் பொறியியல் உள்ள தொழில் நுட்பப் பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது உள்துறை மந்திரி அமித்ஷா தொழில் நுட்பப் படிப்புகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தாய்மொழி தான்இணைப்பு மொழி (பயிற்று மொழி) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் இந்திதான் பயிற்று மொழி. அதேபோன்று, மற்ற பகுதிகளில் அந்தந்த தாய்மொழிகள் தான் பயிற்று மொழியாக இருக்கும் என்றுதான் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்" என்றார்.

    • ரூ.590 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார்.
    • அகில இந்திய கல்வி கூட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி ஜூலை 7-ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி செல்கிறார். பிற்பகல் 2 மணி அளவில், வாரணாசியின் எல்.டி. கல்லூரியில் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திறன் உள்ள அக்சய பாத்திர மதிய உணவு சமையல் கூடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ள அகில இந்திய கல்வி கூட்டத்தைத் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    மாலை 4 மணிக்கு சிக்ராவில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு மைதானத்தில் ரூ. 590 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பார். மேலும் ரூ. 1800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    • பிரதமர் மோடியின் சொந்த தொகுதி உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி.
    • வரும் 7-ம் தேதி பிரதமர் மோடி அங்கு சென்று ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு வரும் 7-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 1 லட்சம் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவை சமைக்க முடியும்.

    இதேபோல், ருத்ராக்சம் பகுதியில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் அகில பாரதீய ஷிக்சா சமகம் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

    இதையடுத்து, சிக்ராவில் உள்ள சம்பூர்னானந்த ஸ்டேடியம் செல்லும் பிரதமர் மோடி, ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவர் கோவிலுக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். #Samajwadi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி இளைஞரணி தலைவராக இருப்பவர் சாஹ்னி. வழக்கமான அங்குள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் இன்று சென்று கொண்டிருந்த சாஹ்னியை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றது.

    இதனை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Samajwadi
    ×