search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222245"

    • சுப்புராயலு, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை பற்றி விளக்கங்கள் அளித்தார்.
    • மாணவர்களின் அறிவியல் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மணிசங்கர் விளக்கி பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிரி வேதியியல் தலைவர் சுப்புராயலு, தமிழ் துறை பேராசிரியர் மணிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    விழாவில் சுப்புராயலு, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள், நம் இளைஞர்கள் பயன் படுத்தும் உணவு, மருந்து, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவற்றால் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தும் நன்மை, தீமைகளை பற்றி உரிய அறிவியல் விளக்கங்கள் அளித்தார்.

    மாணவர்களிடம் அறிவியலை நல் முறையில் பயன்படுத்தி அமைதி மற்றும் மேம்பாடு அடைதல் பற்றியும், இன்றைய உலகில் மக்களை வதைக்கும் சக்கரை நோய் மற்றும் மன அழுத்தம் ஏற்படுதல், அதிலிருந்து விடுபடுதல், இதற்கு நமக்கு அறிவியல் எவ்வாறு பயன்படுகிறது என்றும் விளக்கினார்.

    மேலும் மணிசங்கர் நம் இலக்கியத்தில் காணப்படும் அறிவியல் கருத்துகளையும், அக்கருத்துக்களை சொல்ல கையாண்ட சொற்கள் நம்மிடையே மொழியால் ஏற்படும் அறிவியல் சிந்தனை களையும், திருக்குறள், பழமொழி மற்றும் பழம் பாடல்கள் ஆகியவை கூறும் நம் உணர்வு அறிவுக்கான இைணப்பை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது பற்றியும், மாணவர்களின் அறிவியல் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கி பேசினார்.

    ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராஜேஸ்வரன் வழிகாட்டுதலின்படி முதலாம் ஆண்டு துறைத்தலைவர்கள் பேராசிரியர் ஆறுமுகம், கணேசன், அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் அம்புஜராஜன் மற்றும் முதலாமாண்டு பேராசிரியர்கள் செய்திருந்தனர். 

    • அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.
    • பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 6.45 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் கும்ப பூஜையும், 7.45மணிக்கு சுயம்வர கலா பார்வதி கல்யாண சந்தான சவுபாக்கிய ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.45 மணிக்கு அம்பாள் பூமாதேவி குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், அன்னாபிஷேகம், சந்தனம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் சங்கரன் குருக்கள் பூஜைகளை செய்தார்.

    இதில் ஜோதிடர்கள் சண்முகக்குமார், திருமேனி, பாக்கியராஜ், சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், ஜெயராம்குமார், மகேந்திரன், மாரிஸ்வரன் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தனர்.

    • கழுகுமலை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே உமா மகேஷ்வரன்இறந்த நிலையில் கிடந்தார்.
    • உமா மகேஷ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் உமா மகேஷ்வரன் ( வயது 44). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கழுகுமலை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்த நிலையில் கிடந்தார். அவரது தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமா மகேஷ்வரனின் உடலில் காயங்கள் இருந்த தால் அவர் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உமா மகேஷ்வரன் கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு 18 வகையான அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மகா சனி பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் அதாவது சனி பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வெங்கடேஷ் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
    • கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி:

    இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதியில் பூங்காவாக பயன்படுத்தி வரும் இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதையறி்ந்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர், வாறுகால், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர போதுமான நிதி இல்லை எனக்கூறி வரும் ஊராட்சி நிர்வாகம், பூங்காவாக பயன்படுத்தி வந்த இடத்தில் அதிக நிதியை பயன்படுத்தி அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் எவ்வாறு நிதி வந்தது? அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும், புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்தவுடன் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் அன்னதான பூஜை நடந்தது.
    • மதியம் 12.35 மணிக்கு அன்னதான பூஜையும் சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத முதல் அன்னதான பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி காலை 7 மணிக்கு மகா கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 9மணிக்கு மூலவர் உற்சவர் அம்பாள் குருவுக்கும் 21 வகையான மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் பூர்ன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12.35 மணிக்கு அன்னதான பூஜையும் சிறப்பு அலங்கார சோடனை தீபாராதனையும் நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில், ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், சங்கரன், ஓதுவார் பூஜைகளை செய்தார்கள். இவ்விழாவில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரிஸ் வரன், ஆறுமுகம் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பழனியம்மாள், பூமாலட்சுமி, லட்சுமி, மாரித்தாய், மற்றும் ஊர் பொதுமக்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.

    • சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு மண்டபம் கட்டும் விழா கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது.
    • ம.தி.மு.க. பொதுச் செயலார் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டபம் கட்டும் விழா அவரது பிறந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலார் வைகோ எம்.பி. பங்கேற்றுநினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி ரமேஷ், ம.தி.மு.க. நகரச் செயலாளர் பால்ராஜ், மத்திய பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், கேசவன், மாரிச்சாமி, செயற்குழு உறுப்பினர் கணேசன், இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், செண்பகராஜ், முத்துப்பாண்டியன், வனராஜன், முத்துச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் பவுன் மாரியப்பன் மாநில விவசாய அணி சிவகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பீக்லிபட்டி முருகேசன், சிவராமகிருஷ்ணன், குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி, ராம்குமார், மகாராஜா, தெய்வேந்திரன், எழுத்தாளர்கள் ஜெயபிரகாசம், உதயசங்கர், பிரபு, மற்றும் கி.ரா குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜகுரு வரவேற்று பேசினார்.

    • புற்றுக்கோவிலில் கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
    • ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பிடித்தது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி ஆகியவை இணைந்து, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புறச்சூழலை பாது காப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செய லாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் துணைத் தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவங்கி வைத்தார்.

    இதில், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடமும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற அணியினருக்கு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டி யன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.

    • பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    கோவில்பட்டி:

    முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.

    விழாவில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாமன்னர் பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் தொழிலதிபர் அங்கமுத்து, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், இன்னர்வீல் கிளப் பட்டயத் தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலர் முத்துச்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தாவீதுராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை கட்டும் பணி தொடங்கியது.
    • அமைச்சர் எ.வ.வேலு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவில்பட்டி, ஆக.31-

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் கட்டும் பணி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நினைவரங்க பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், நெல்லை கண்காணிப்பு பொறியாளர் மாதவன், தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளர் தேவி, உதவி செயற்பொறியாளர் பரமசிவன், உதவி பொறியாளர்கள் சரத்குமார், சந்திரசேகர், கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசிலா, தி.மு.க. நிர்வாகிகள் பீக்கிலிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், ரமேஷ், பீட்டர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.
    • விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    கோவில்பட்டி:

    அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொ) சிவாஜிகணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களில் மிக குறைந்த பிரிமியம் தொகையில் விபத்து காப்பீடு செயல்படுத்தப்படுகிறது. இதில் சேர 18 வயது முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் உள்ளிட்ட எவ்வித காகிதங்கள் பயன்பாடின்றி வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்து உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

    விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரமும், புறநோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக ரூ.ஆயிரம் வீதம் 9 நாள்களுக்கு கிடைக்கும்.

    விபத்தில் பாதிக்கப்பட்ட வரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரமும், இறுதிச் சடங்கு செய்ய ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமியம் செலுத்தினால் போதும், விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    எனவே, அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×