search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது.
    • சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    பரமத்தி வேலூர்:

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சு போட்டியில் கலந்து கொண்ட 12-ம் வகுப்பு மாணவிகள் கண்ணகி முதல் பரிசும், பூமதி 2-ம் பரிசும், ஓவிய போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி தனிகா முதல் பரிசு உட்பட 18 பேரும் பரிசு பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    பாராட்டு விழாவில் ஆசிரிய,ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பதக்கம் பெற்ற பெண் போலீஸ் பேட்டி
    • தடகள போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

    நாகர்கோவில்:

    உலக காவலர் மற்றும் தீயணைப்பு துறையின ருக்கான தடகள போட்டி நெதர்லாந்தில் நடை பெற்றது.

    இந்த போட்டியில் குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வரும் கணபதிபுரத்தைச் சேர்ந்த பெண் காவலர் கிருஷ்ண ரேகா பங்கேற்றார். இவர் தடகள போட்டிகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற பெண் காவலர் கிருஷ்ணரேகா இன்று நெதர்லாந்தில் இருந்து நாகர்கோவில் வந்தார்.

    நாகர்கோவில் வந்த அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பூச்செண்டுகள் கொடுத்து அவரை வரவேற்றார். கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார் மற்றும் போலீசார் அவரை வரவேற்றனர்.பின்னர் கிருஷ்ணரேகா நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னுடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்-அமைச்சர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். 77 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் மூன்று தங்கம் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த நான்கு மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

    மேலும் இதேபோல் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கூடுதலாக அதிக பதக்கங்கள் பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். என்னை போல் போலீஸ் துறையில் விளையாட்டு வீரர்கள் ஏராளமானவர் உள்ளனர்.அவர்கள் விளையாட்டு துறையில் இதே போல் சாதித்து பதக்கங்கள் பெற வெளியே வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் ரெயில்  நிலையத்திலிருந்து இசை வாத்தியங்கள் முழங்க கிருஷ்ணரேகாவை அழைத்து வந்தனர். பின்னர் அவர் தனது சொந்த ஊரான கணபதிபுரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    • 3 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா உள்ளனர்.

    மேலும், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களை தவிர, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, சிராஜ், தீபக் சாஹர் அணியில் உள்ளனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
    • போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.

    மயிலாடுதுறை:

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    அதனை விளம்பரப்படு த்தும் வகையில் மயிலாடு துறை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான இலச்சினை மற்றும் சின்னத்தினை அச்சிட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக செல்பி பூத்தில் சுய புகைப்படம் (செல்பி) எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
    • தின்னப்பட்டி செல்லும் சாலையில் தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் காவலர் பயிற்சி பெறவும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்திடவும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் ஊரை ஒட்டி இருப்பதால் பயிற்சி செய்ய சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனால் விளையாட்டுத்திடல் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்து தர வேண்டும் என்று முதலமைச்சர் தனி பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓமலூர் ஒன்றிய அலுவலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கி சுமார் ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் விளையாட்டு மைதானம் அமைத்து தருவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் இது சம்பந்தமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஓமலூரில் இருந்து தின்னப்பட்டி செல்லும் சாலையில் தும்பிப்பாடி கிராமம் ரெட்டியூர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சர்வதேச தடகளம் மற்றும் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • தந்தை இல்லாத நிலையில், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருப்பரங்குன்றம்

    நேபாளம் நாட்டில் நடைபெறும் சர்வதேச தடகளம் மற்றும் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த துர்கா, சினேகா உட்பட 4 பேர் இந்திய அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் துர்கா என்ற மாணவி இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தந்தை இல்லாத நிலையில், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேசே போட்டியில் பங்கேற்க பொருளாதாரம் இல்லாமல் தவித்த த்ரோபால் வீராங்கனை துர்காவிற்கு சமூக ஆர்வலரும் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில் தலைவருமான வ.சண்முகசுந்தரம் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.

    • படிப்பை போல விளையாட்டும் வாழ்க்கைக்கு முக்கியமானது என கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.

    இதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 152 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இடையே சதுரங்க போட்டி நடந்தது. அதனை கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதா வது:-விருதுநகர் மாவட்டத்தில், சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவி லான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    இப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர் மற்றும் மாணவிகளை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், அனைத்து பெற்றோர்களும் ஊக்கப்ப டுத்தக்கூடிய ஒரே விளையாட்டு சதுரங்க விளையாட்டு. ஏனென்றால் இந்த விளையாட்டு விளை யாடுவதால் மூளை திறன் அதிகரிக்கும், மூளை நல்ல வளர்ச்சி அடையும், மாணவர்கள் கணித பாடத்தில் நன்றாக சாதிக்க முடியும், மற்ற பாடத்தில் நல்ல கவனம் செலுத்த முடியும். இந்தியாவில் நிறைய பேர் இந்த விளையாட்டில் சாதித்து உள்ளனர். மாணவர்கள் படிப்பிற்கு இணையாக இது போன்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற விளையாட்டு மூலம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்ல வாழ்க்கைக்கு தேவை யான விஷயங்களை கற்றுக்கொண்டு மாணவர்கள் எளிதில் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார், உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயக்குமார் உள்பட மாணவ, மாணவி கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.
    • பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் - மங்கலம் ரோட்டில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இக்குளத்தில், நொய்யல் ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    இக்குளத்தின் கரையில் பலரும் தூண்டில் போட்டு மீன் பிடிக்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களிலும் சிறுவர்களும், பிற நாட்களில் பொழுது போக்கும் விதமாக பல இளைஞர்களும் இங்கு மீன் பிடிக்கின்றனர்.பெரும்பாலான சிறுவர்கள் சுற்றுப்பகுதியில் வசிக்கும் நிலையில், விடுமுறை நாட்களில் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து நீண்ட நேரம் இங்கு வந்து மீன் பிடிக்கின்றனர். இந்த குளம் தற்போது முழுமையாக நீர் நிரம்பி நிற்கிறது.மீன் பிடிக்கும் ஆர்வத்தில் குளத்தில் உள்ளநிலை குறித்து புரிதல் இன்றியும், கரைகளில் விளையாட்டுத் தனமாக ஓடிப்பிடித்தும் விளையாடுகின்றனர்.இந்த குளத்தில் உள்ள நீரில் ஏற்கனவே சில உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் இங்கு வந்து மீன் பிடித்து விளையாடுவது ஆபத்தை விலை கொடுத்து வரவழைப்பது போல் உள்ளது.

    இதைத் தவிர்க்கும் வகையில் குளத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதோடு சிறுவர்கள் குளத்தின் கரையில் ஒன்று சேர்ந்து இது போல் செயல்படுவது தவிர்க்க வேண்டும். அவ்வகையில் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

    கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    • திருமங்கலம் அருகே அன்னை பாத்திமா கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • கல்லூரி தாளாார் எம்.எஸ்.ஷா,பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோரது வழிகாட்டுதலின்படி நடந்தது.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி தாளாார் எம்.எஸ்.ஷா,பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோரது வழிகாட்டுதலின்படி 29-வது விளையாட்டு விழா நடந்தது. இயக்குநர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் நயாஸ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனியாண்டி வாழ்த்துரை வழங்கினார்.

    முன்னாள் முதல்வர் நவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகள் கல்விக்கு மட்டுமல்ல, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். நூலகத்தை பயன்படுத்தி அதிகமான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரி தாளாளரின் மகள் சகானா பின்ஷா நினைவாக கல்வியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற 3-ம் ஆண்டு தடயவியல் துறை மாணவர் சேவியோன் சாகீருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 3-ம் ஆண்டு தொழில் நுட்பத்துறை மாணவி ஷோஸ்பின் சரோவிற்கு 2கிராம் தங்கநாணயமும் வழங்கப்பட்டது.

    விடுதி அறை தூய்மை, நூலக பயன்பாடு, 100 சதவீத வருகைப்பதிவு பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. சிறந்த பேராசிரியர்களுக்கும், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர் அல்லாதவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை தட்டிச்சென்ற "புளு" குழுவினருக்கு "ஒட்டுமொத்த சாம்பியன்" கோப்பை வழங்கப்பட்டது.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை தலைவர் நிர்மலாதேவி நன்றி கூறினார். ஆங்கிலத்துறை தலைவர் ராஜ்குமார், கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் கார்த்திகா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிகளை உடற்கல்வி இயக்குநர் நாராயணபிரபு ஒருங்கிணைத்தார்.

    கேம்பஸ் மேலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.
    • ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக எனக்கு புகார் அனுப்பலாம்.

    மதுரை

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாடிப்பட்டி, கட்டக்கு ளம் நாராயணன் மகன் மோகனசுந்தரம் என்பவர், 7-ம் வகுப்பு மாணவனிடம் ப்ரீ-பயர் ஆன்லைன் விளை யாட்டு ஆசை வார்த்தை கூறி கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கு மூலம் 17 ஆயிரம் ரூபாயும், நேரடியாக 25 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் ரூ.42,000 ஏமாற்றி பணம் பறித்து உள்ளார். அவரை கைது செய்து உள்ளோம். பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே இணையத்தில் பழகும் சிறுவர்களை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதுபோன்ற மோசடி பேர் வழிகளிடம் ஏமாறுவதை தவிர்க்க உதவியாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்களை ஏமாற்றும் நபர்கள் பற்றிய விவரம் தெரிந்தால், உடனடியாக எனக்கு புகார் அனுப்பலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 34-வது விளையாட்டு விழா நடந்தது.
    • ஆமினா பர்வீன் ஹக்கீம் இறைவணக்கம் பாடினார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா மூன்றாமாண்டு மாணவி பி.ஏ. (ஆங்கிலம்) ஆமினா பர்வீன் ஹக்கீம் இறைவணக்கத்துடன் தொடங்கியது. முதல்வர் சுமையா வரவேற்றார்.

    ராமநாதபுர மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் சேக் மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். ராமநாதபுர மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ஒலிம்பிக் கொடியையும், கல்லூரியின் செயலாளர் காலித் ஏ.கே புஹாரி கல்லூரிக் கொடியையும் ஏற்றினர். பின்னர் மாணவியரின் அணி வகுப்பு நடைபெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், யோகாசனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விளையாட்டு தின விழா அறிக்கையினை உதவி பேராசிரியர் சீனி ரக்பு நிஷா வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும் இவ்விழாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தோ நேபாளம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மாணவியர் பேரவையின் விளையாட்டுச் செயலர் முஜாஹித் ஜசீரா நன்றி கூறினார்.

    இவ்விழாவில் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான், கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநர் இர்பான் அஹமது மற்றும் பல்வேறு துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும், மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

    ×