search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,680-க்கு விற்பனையாகிறது.
    • தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.4,940 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.4,960 ஆக உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து உள்ளது.

    நேற்று தங்கம் பவுன் ரூ.39,520-க்கு விற்பனை ஆனது. இன்று இது பவுன் ரூ.160 அதிகரித்து ரூ.39,680 ஆக விற்பனை ஆகிறது. ஆனால் வெள்ளி விலை குறைந்து உள்ளது.

    கிராம் ரூ.68.50-ல் இருந்து ரூ.67.50 ஆகவும் கிலோ ரூ.68.500-ல் இருந்து ரூ.67,500 ஆகவும் குறைந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து கூடி வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 அதிகரித்து விற்பனை.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4,940-க்கும், ஒரு சவரன் ரூ.39,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரூ.38 ஆயிரத்துக்கும் கீழே விற்ற தங்கம் கடந்த 11-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.39,208-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.39,520-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4901-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4940-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4,901-க்கும், ஒரு சவரன் ரூ.39,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 1 பவுன் தங்கம் ரூ.39,136-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.39,208-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4,892-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.4,901-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.67.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,700-க்கு விற்பனையாகிறது.

    • தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இந்த மார்க்கெட்டுக்கு தக்காளிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சேலம், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

    இந்தநிலையில் தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிய தொடங்கியது.

    இதனிடையே இன்று காலை பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.5-க்கு விற்பனையானது.

    சில்லறை விற்பனை மற்றும் தருமபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது.
    • கிராம் ரூ.4,758-ல் இருந்து ரூ.4,815 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுன் ரூ.38,064 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.38,520 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் பவுன் ரூ.456 கூடி உள்ளது.

    கிராம் ரூ.4,758-ல் இருந்து ரூ.4,815 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் கிராம் ரூ.57 அதிகரித்து உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.66.70-ல் இருந்து ரூ.67.40 ஆகவும் கிலோ ரூ.66,700ல் இருந்து ரூ.67,400 ஆகவும் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38 ஆயிரத்து 64-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 758 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
    • ஒரு கிராம் ரூ.4,775-க்கும், ஒரு சவரன் ரூ.38,200-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,160-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,200-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,770-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,775-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.66,300-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ந்தேதி ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
    • தற்போது 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்தது. கடந்த 27-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37960-க்கு விற்கப்பட்டது.

    மறுநாள் அது ரூ.37,880 ஆக குறைந்தது. 29-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.37,640க்கு விற்றது. கடந்த 31-ந்தேதி விலை சற்று அதிகரித்து ரூ.37,720-க்கு விற்பனையானது. மறுநாள் பவுன் ரூ.37,840 ஆக உயர்ந்தது. கடந்த 2-ந்தேதி மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.37,923-க்கு விற்றது.

    நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்து பவுன் ரூ.37,720-க்கு விற்பனையானது. நேற்று சற்று அதிகரித்து ரூ.37,736-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது. மேலும் 1 பவுன் தங்கம் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று தங்கம் 1 பவுன் ரூ.38,160-க்கு விற்கப்படுகிறது.

    தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மாதம் 13-ந்தேதி ரூ.38 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. தற்போது 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4717-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ரூ.4770-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.64.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.90 அதிகரித்து ரூ.66.30-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.66,300-க்கு விற்பனையாகிறது.

    • பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 1000 வரை‌ உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 1000 வரை‌ உயர்வு அடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப் படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது.

    அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.8 ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்வடைந்து ரூ.9 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. ‌மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு, சென்னை-530 காசு, ஹைதராபாத்-499 காசு, விஜயவாடா-509, பார்வலா-504, மும்பை-556, மைசூர்-520, பெங்களூரு-520, கொல்கத்த-580, டெல்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ.64.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64, 500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ 4,741-க்கும் பவுன் ரூ 37,928-க்கும் விற்பனை ஆனது. இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்து ரூ.37,720-க்கு விற்கப்படுகிறது. கிராம் ரூ.26 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனை ஆகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராம் ரூ.64.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ.64, 500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
    • ஒரு கிராம் ரூ.4,705-க்கும் ஒரு சவரன் ரூ.37,640-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,640-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4,715-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,705-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்றது. இன்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.63.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.63,700-க்கு விற்கப்படுகிறது.

    ×