search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,560-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ. 58-க்கும், கிலோ ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஆவணி மாதம் முகூர்த்த காலம் என்பதால் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பது வழக்கம்.

    சென்னை:

    சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கிராம் நேற்று ரூ. 4,710-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,695 ஆக குறைந்துள்ளது.

    பவுன் ரூ.37 ஆயிரத்து 680-ல் இருந்து ரூ. 37,560-ஆக குறைந்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் தங்கம் கிராம் ரூ.15-ம், பவுன் ரூ.120-ம் குறைந்து இருக்கிறது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் ரூ. 58-க்கும், கிலோ ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. ஆவணி மாதம் முகூர்த்த காலம் என்பதால் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது தங்கம் விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழக அரசு 2022-23 ம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஊக்க தொகையாக சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75 ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100 ம் ஊக்க தொகையாக அறிவித்துள்ளது.
    • போதுமான விலை அறிவிக்காததால் தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    திருச்சி,

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    தமிழக அரசு 2022-23 ம் ஆண்டுக்கான நெல்லுக்கான ஊக்க தொகையாக சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75 ம், சன்னரக நெல்லுக்கு ரூ.100 ம் ஊக்க தொகையாக அறிவித்துள்ளது.

    மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 விலை அறிவித்துள்ளது. போதுமான விலை அறிவிக்காததால் தமிழக அரசு மீது விவசாயிகள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 விலை உயர்த்தி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு விவசாயிகளை ஏமாற்றுகின்றனர்.

    ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு மேல் செலவாகிறது. கடைசியில் விவசாயிகளுக்கு சொற்ப தொகை கிடைப்பதே சவாலாக இருக்கிறது. ஆகவே தேர்தல் வாக்குறுதிபடி நெல்லின் விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த 24-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 25-ந்தேதி அது அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. 26-ந்தேதி தங்கம் விலை ரூ.38,560 ஆக குறைந்தது. 27-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்கப்பட்டது.

    29-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.38,320 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று ரூ.38,032 ஆக குறைந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை ஆகிறது.

    கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்றது. அதன் பிறகு இன்று பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,754-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,320-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.10-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 320-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 790 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.10-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 4 நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த வாரம் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருந்தது.

    கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,640-க்கு விற்கப்பட்டது. 22-ந்தேதி அது ரூ.38,520 ஆக குறைந்தது. 23-ந்தேதி மீண்டும் ரூ.38,400 ஆக குறைந்தது. 24-ந்தேதி சற்று அதிகரித்து ரூ.38,440 ஆக விற்கப்பட்டது.

    மறுநாள் 25-ந்தேதி அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. அதன் பிறகு தங்கம் விலை குறையத்தொடங்கியது. 26-ந்தேதி அது ரூ.38,560 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்றது. நேற்று அதேவிலையில் நீடித்தது.

    இந்தநிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,770-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 61.30-ல் இருந்து 60.70 ஆகவும், கிலோ ரூ 61,300-ல் இருந்து ரூ.60, 700 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் ரூ.4,820-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.4,805 ஆக குறைந்து உள்ளது.

    ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 560-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து440 ஆக குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் 15 ரூபாயும், பவுன் 120 ரூபாயும் குறைந்து உள்ளது.

    இதே போல் வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ 61.30-ல் இருந்து 60.70 ஆகவும், கிலோ ரூ 61,300-ல் இருந்து ரூ.60, 700 ஆகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38,720-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 720-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 840 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.30-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 100-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது.ரூ.38 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 830 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 100-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10-க்கு விற்கிறது.

    • செண்டு மல்லி பூக்கள் விலை குறைந்ததால் விற்பனை இல்லை
    • பெரும்பாலான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காருவள்ளி, கொங்கு பட்டி, பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி, கொங்காரப்பட்டி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவ சாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூசாரிப்பட்டி பூ மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் விற்பனைக்கு வருகின்றனர்.

    இதில் சாமந்தி பூ கிலோ வுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரையும், தக்காளி ரோஸ் ரூ.40 முதல் ரூ.50 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும், செண்டுமல்லிரூ.20 மற்றும் பல வகையான பூக்கள் வரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும் நேரங்களில் வியாபாரிகள் போட்டி போட்டு குறைந்து விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதில் செண்டுமல்லி ரூ.20க்கு விற்கப்படுவதாலும், விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருவ தாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் மறுத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பூக்களை சாலையோரம் கொட்டி செல்கின்றனர். பெரும்பா லான விவசாயிகள் பூக்களை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.60 ஆயி ரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38 ஆயிரத்து 400-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 800 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.60 ஆயி ரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 61.10க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் 4 ஆயிரத்து 815 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.61 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 61.10க்கு விற்கிறது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ 15ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி,கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், பெரியமருதூர் சோளி பாளையம், சோழசிராமணி, பெருங்குறிச்சி, சிறு நல்லிக்கோவில், திடுமல், தி. கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, மாரப்பம்பா ளையம் ஜமீன்இளம்பள்ளி குரும்பல மகாதேவி,கொத்தமங்கலம், ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர், சின்னசேலம், கீரனூர், நாமகிரிப்பேட்டை, புதன்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து பல்வேறு ரகமான ஜவ்வரிசிகள் மற்றும்கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

    மேலும் பெரிய ரகமான மரவள்ளி கிழங்குகளை சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் வாங்கி செல்கின்றனர்.

    சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி விலை உயரும்போது மரவள்ளிக்கிழங்குக்கு விலை உயர்த்தியும், சவ்வரிசி விலை வீழ்ச்சி அடையும் போது மரவள்ளி கிழங்கின் விலையை குறைத்தும் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது.தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ 15ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    சிப்ஸ் தயார் செய்யப்படும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×