search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.184 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,600-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.63க்கு விற்றது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று விலை சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.38.416க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.38,600க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4802-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.4825-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.63க்கு விற்றது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.63.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெளளி ரூ.63,200க்கு விற்கப்படுகிறது.

    • தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், தாளவாடி, கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடியாகிறது. ஓராண்டு பயிரான மரவள்ளி கிழங்கில், கடந்த 2 ஆண்டாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக இருப்பதால் மகசூல் குறைந்து காணப்பட்டது.

    ஆனால் தற்போது மகசூலுடன் வரத்து குறைந்து வருவதாலும், தற்போது அறுவடை சீசன் நிறைவடைந்ததாலும் அரவை மில்களுக்கு ஒரு டன், 12,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர்.

    இது குறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டாக மரவள்ளி கிழங்கில் மாவு பூச்சி தாக்குதல், அறுவடை தொடங்கும் காலத்தில் விலை இல்லாததால் தற்போது சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. வரத்து சரிவாலும், தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 8,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 12,500 ரூபாய் என்ற விலையில் அரவை மில் உரிமையாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பு, பிற உணவு பயன்பாட்டுக்காக பிற மாநில வியாபாரிகள், ஒரு டன்னை, 25,000 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்கின்றனர்.

    அதற்கேற்ப, ஜவ்வரிசி, 90 கிலோ மூட்டை, 4,500 ரூபாயில் இருந்து, 5,300 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நவம்பர், மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளி கிழங்கு அறுவடை சீசனாக உள்ளது. தற்போது சாகுபடி பரப்பு குறைந்ததாலும், தேவை அதிகரிப்பாலும் நடப்பு பருவத்தில் மரவள்ளி கிழங்குக்கு இதே விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • நாளை ஆடி- 18 பண்டிகை வருவதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், அண்ணா நகர் ,சின்ன மருதூர் ,பெரிய மருதூர், தண்ணீர் பந்தல், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி, அரளி ,செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை வாங்கி செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை வாங்கி செல்கின்றனர். ஏலம் எடுத்த உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும் ,தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களைபிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளுர் பகுதிகளுக்கு கொண்டு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ குண்டுமல்லிகை பூ

    ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ.40- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.120- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.230-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.900-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைவானதாலும், நாளை ஆடி- 18 பண்டிகை வருவதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
    • ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் ஏலம் போனது.

    தற்போது ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.500-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.600-க்கு விற்பனையானது. ஆடி- 18 பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    அகில இந்திய அளவில் முட்டைக்கோழி வளர்ப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    என் முட்டை, என் விலை என்ற அடிப்படையில், முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 நாட்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நிர்ணயிக்கப்படும் விலையை அனுசரித்தே, தமிழகத்திலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்தது. தொடர்ந்து 9-ம் தேதி ரூ.5.20, 11-ம் தேதி ரூ.4.90, 14-ம் தேதி ரூ. 4.60, 16-ம் தேதி ரூ. 4.40, 25-ம் தேதி ரூ. 4.20, நேற்று (1-ம் தேதி) ரூ.4 என முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு ஒரே மாதத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.50 குறைந்துள்ளது.

    மேலும் நெஸ்பேக் என்ற முட்டை மற்றும் பண்ணையாளர்கள் கூட்டமைப்பு, முட்டை கொள்முதல் செய்யும் மொத்த வியாரிகளுக்கு ஒரு முட்டைக்கு 40 பைசா குறைத்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.60 மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும் பெரிய இடைவெளி உருவாகிறது.

    ஆனால் வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் போது, என்இசிசி விலைக்கும் கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் முட்டை வாங்கும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள், முட்டை கொள்முதல் விலை தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்–பட்டுள்ளனர். கோழிப்பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணை யாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

    மற்ற மண்டலங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், ஆடிப் பண்டிகை காலமாக இருப்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், தேக்கத்தை கட்டுப்படுத்தவும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

    கறிக்கோழி

    பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

    • மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ .சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்த வியாபாரம், சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று ஈரோடு வ .உ. சி. பூங்கா மார்க்கெட்டிற்கு காய்கறி வழக்கத்தை விட காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று மார்க்கெட்டில் காய்கறி விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

    அதே நேரம் தக்காளிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை கிலோ ரூ.8 முதல் 10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய்-70-80, வெண்டைக்காய்-15, கேரட்-60, பீன்ஸ்-90,, முள்ளங்கி- 25, பீட்ரூட்- 50, உருளைக்கிழங்கு-40, சொரக்காய்-15, முட்டைக்கோஸ்-40, மொர க்காய்-30, கொத்தவரங்காய் -40, பட்டாஅவரை-30, கருப்புஅவரை-80, காலிப்ளவர்-40, பீர்க்க ங்காய்-40, பாவக்காய்-40, பொடலங்காய்-45, தக்காளி-8-10, முருங்கைக்காய்-40, பச்சை மிளகாய்-60, இஞ்சி-60.

    பொதுவாக ஈரோடு வ. உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து தக்காளிகள் 4 ஆயிரம் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் 8 ஈயிரம் பெட்டிகள் வரத்தாகி வருகிறது.

    இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ. 12 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தக்காளிகள் வரத்தாகி வருவதால் விற்பனையாகாமல் அழுகி அதனை குப்பையில் வியாபாரிகள் போட்டு வருகின்றனர். 

    • முகூர்த்த மாதமான ஆவணி நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    • வெள்ளி விலையும் உயர தொடங்கி உள்ளது. கிராம் ரூ.62.30-ல் இருந்து ரூ.63.70 ஆகவும் ஒரு கிலோ ரூ.62 ஆயிரத்து 300-ல் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிராம் 4,805 ஆக இருந்த தங்கம் இன்று 4,815-க்கு விற்கப்படுகிறது. பவுன் ரூ.38 ஆயிரத்து 440-ல் இருந்து ரூ.38 ஆயிரத்து 520 ஆக உயர்ந்து உள்ளது.

    ஒரேநாளில் தங்கத்தின் விலை கிராம் ரூ 10-ம் பவுன் ரூ.80-ம் அதிகரித்து இருக்கிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர தொடங்கி உள்ளது. கிராம் ரூ.62.30-ல் இருந்து ரூ.63.70 ஆகவும் ஒரு கிலோ ரூ.62 ஆயிரத்து 300-ல் இருந்து ரூ.63 ஆயிரத்து 700 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    முகூர்த்த மாதமான ஆவணி நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    • திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
    • மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

    திருப்பூர் :

    கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் மாலைகளுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. மாலை கட்ட கோழி கொண்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் கோழி கொண்டை பூக்களுக்கு விற்பனை இல்லாததால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.அதன்பின் நிலைமை சீரடைந்தது. தற்போது ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூவிற்கான தேவைகுறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், கிலோ 60 ரூபாய்க்கு விற்ற கோழி கொண்டை 35 ரூபாயாக சரிந்து விட்டது. தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் போது 3நாட்கள் வரை வாடாமல் இருக்கும். எனவே கோழிகொண்டைக்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,767-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,805-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 6-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. 22 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 8 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 21-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.37,040-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.37,440 ஆக உயர்த்தது. அதன்பிறகு மீண்டும் உயர்ந்து 23, 24-ந்தேதிகளில் ரூ.37,568-க்கு விற்பனையானது. 25-ந்தேதி ரூ.37,760 ஆக உயர்ந்தது. 26-ந்தேதி ரூ.37,824-க்கு விற்றது.

    நேற்று முன்தினம் மீண்டும் உயர்ந்து ரூ.37,880-க்கு விற்பனையானது. நேற்று ரூ.38 ஆயிரத்தை தாண்டிய நிலையில் ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,767-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ரூ.4,805-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.10 அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.62,300-க்கு விற்கப்படுகிறது.

    • கபிலர்மலை சுற்று வட்டார பகுதி உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளான அண்ணா நகர், பொன்மலர்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பாளையம், பாகம் பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குறும்பலமகாதேவி, சிறு நல்லிக்கோவில்,தி. கவுண்டம் பாளையம் ,திடுமல், இருக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ரூ.2,400வீதம் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். பின்னர் வெல்லங்களை நன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர்.

    தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ.1,200 -க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250 விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,400 வரை விற்பனையாகிறது. உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×