search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.110 உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சவரன் ரூ.44,480-க்கு விற்கப்படுகிறது. இது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,480-க்கும், கிராம் ரூ.5,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.74.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,400-க்கும் விற்கப்படுகிறது.

    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.12 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
    • முகூர்த்தங்கள்‌ இருப்ப தாலும் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர், வேலூர், அனிச்சம்பா ளையம், குப்புச்சிப்பா ளையம், நன்செய்இடை யாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வெற்றி லைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.12 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.14 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயி ரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    வெற்றிலை வரத்து குறைந்ததாலும், அதிக அள வில் முகூர்த்தங்கள் இருப்ப தாலும் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடந்து ஏறுமுகமாக உள்ளது.
    • கிராம் ரூ 72.70-ல் இருந்து ரூ 73.10 ஆகவும், கிலோ ரூ 72,700-ல் இருந்து 73,100 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று கிராம் ரூ 5,425-க்கும் பவுன் ரூ 43,400க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ 25-ம் பவுன் ரூ 200-ம் அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

    இன்று கிராம் ரூ 5,450-க்கும், பவுன் ரூ. 43,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே வேகத்தில் உயர்ந்தால் இன்னும் ஓரிரு நாளில் தங்கம் பவுன் ரூ 44 ஆயிரத்தை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடந்து ஏறுமுகமாக உள்ளது. கிராம் ரூ 72.70-ல் இருந்து ரூ 73.10 ஆகவும், கிலோ ரூ 72,700-ல் இருந்து 73,100 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    • 28 கிலோ எடை கொண்டு பெரிய ‘டிப்பர்’ 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி திருப்பூர் வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. சீசன் துவங்கி உள்ளதால் விளைவித்த காய்களை கொண்டு வந்து விவசாயிகள் குவிக்கின்றனர்.ஒரே நேரத்தில் உள்ளூர் மற்றும் வெளிமாநில வரத்தும் அதிகரித்துள்ளதால், தக்காளி விலை குறைய துவங்கியுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில் கிலோ 20 முதல் 25 ரூபாய் விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி, நடப்பு வாரம் கிலோ 14 ரூபாயானது. தெற்கு உழவர் சந்தையில் 14 கிலோ எடை கொண்ட சிறிய 'டிப்பர்' 180 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்டு பெரிய 'டிப்பர்' 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்த விலையில் முதல் தர தக்காளி கிலோ 14 முதல் 16 ரூபாய்க்கு விற்றது. சில்லறை விலையில் தக்காளி கிலோ 18 முதல் 20 ரூபாய்க்கு விற்றது.கர்நாடக மாநிலம் மைசூரு தமிழக - கர்நாடக எல்லையான தாளவாடியில் இருந்து தினமும் 10 லாரி தக்காளி (சராசரியாக 30 டன்) திருப்பூர் வருகிறது.இதனால், திடீர் ரோட்டோர தக்காளி கடைகள் முளைத்துள்ளது. மொத்தமாக குறைந்த விலைக்கு அடித்து பேசி வாங்கும் வியாபாரிகள் தக்காளி 7 கிலோ 100 ரூபாய்க்கு ஆட்டோவில் கொட்டி விற்கின்றனர்.

    • கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
    • தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், வானம் பார்த்த மானாவரி புஞ்செய் நிலங்களில் பருவமழையை பயன்படுத்தி, வறட்சியை தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கும் குறுகிய கால மானாவரி பயிரான மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை, ஆண்டு தோறும் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், வேப்பிலைப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் பகுதியில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது மக்காச்சோள கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாரானதால், கதிர்களை அறுவடை செய்து உதிர்த்து, உலர்த்தி பதப்படுத்தி சந்தைப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால், கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், தனியார் நிறுவனங்களின் முகவர்களும் விலையை கட்டுக்குள் வைத்துள்ளனர்.

    தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது. ஓரிரு வாரங்களில் மக்காச்சோள அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் விவசாயிகள் உடனே விற்பனை செய்யாமல், வெய்யிலில் உலர வைத்து பதப்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் மக்காச்சோளம் விலை ரூ.2,500 வரை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொன்னாரம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு, விதை கொள்முதல், ஏர் உழுதல், விதைத்தல், களைப்பறித்தல், உரமிடுதல், புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், கதிரடித்து உலர்த்தி பதப்படுத்தல் ஆகியவவற்றுக்கு ஏறக்குறைய ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. 25 மூட்டையே மகசூல் கிடைக்கிறது.

    வாழப்பாடி பகுதி விவசாயிகள் ஒரே நேரத்தில் மக்காச்சோளத்தை அறுவடை செய்து விற்பனை செய்வதால், வியாபாரிகளும், முகவர்களும் விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், 4 மாத உழைப்பிற்கு ரூ.20 ஆயிரம் கூட வருவாய் கிடைப்பதில்லை.

    எனவே, அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை உடனே விற்பனை செய்யாமல் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் விலை உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
    • வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சவரன் ரூ.43,400-க்கு விற்கப்படுகிறது. இது மக்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,400-க்கும், கிராம் ரூ.5,425-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.72.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700-க்கும் விற்கப்படுகிறது.

    • கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    • வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், ஆனங்கூர், சின்னமருதூர் நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    இந்த பூக்களை உள்ளூர் பகுதி வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதியினை சேர்ந்த பூ வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படி யாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.600-க்கும், முல்லை ரூ.600க்கும், காக்கட்டான், ரூ.500க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.200-க்கும், சாமந்திப்பூ ரூ.150 -க்கும், ரோஜா ரூ.200க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது.

    நேற்று ஒரு கிலோ குண்டுமல்லிகை ரூ.300-க்கும், முல்லை ரூ.300க்கும், காக்கட்டான் ரூ.200க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.80-க்கும், சாமந்திப்பூ ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லிகை பூ மேலும் விலை சரிவடையும்.

    கடந்த ஜனவரி மாதத்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கிலோ 300 ரூபாயாக சரிந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,520 ஆக உயர்ந்தது.
    • நேற்று முன்தினம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற-இறக்கமாக காணப்படுகிறது. சில வாரம் திடீரென்று உயர்வதும், சில வாரம் திடீரென்று குறைவதுமாக மாறி மாறி நிகழ்ந்து வருகிறது.

    கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து வந்தது. கடந்த 6-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்துக்கு விற்ற தங்கம் மறுநாள் ரூ.41,800 ஆக குறைந்தது. 8-ந்தேதி அது ரூ.41,320 ஆகவும், 9-ந்தேதி ரூ.41,240 ஆகவும் குறைந்தது.

    அதன் பிறகு கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,520 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று ரூ.42,160-க்கு விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையே நீடித்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.42,600-க்கு விற்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,270-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,325-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.69.50-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,500-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ரூ.67.30-க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.68.70-க்கும் விற்பனையாகிறது.
    • ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.640 அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.5,270-க்கும் சவரன் ரூ.42,160-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ரூ.67.30-க்கும் விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.68.70-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700-க்கு விற்கப்படுகிறது.

    • ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது.
    • அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி வட்டாரத்தில் பாரப்பட்டி, வாணியம்பாடி, கம்மாளப்பட்டி, திப்பம்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் காய்களை சேலம் உழவர் சந்தையில் விவசாயிகள் விற்கின்றனர். குறிப்பாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது. அப்போது வெளி மார்க்கெட்டுக்கள், மளிகை கடைகள், வணிக வளா கத்தில் உள்ள கடைகளில் 75 ரூபாய்க்கு விற்றது.

    இந்த நிலையில் சில நாட்களாக வெண்டைக் காய்க்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    இது குறித்து பன மரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் குமரவேல் கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தட்டுப்பாட்டால் வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
    • நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.67.40-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்தே குறைந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,320-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5165-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.10 குறைந்து ரூ.5155-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும், இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.67.40-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,400-க்கு விற்பனையாகிறது.

    • வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது.
    • நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 35 என்ற அளவிற்கு மிகாமல் முட்டைகளை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 440 காசுகளாக நீடிக்கிறது. இதனால் முட்டை கோழி பண்ணையாளர்கள் நஷ்டம் ஏற்படுவதாக கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என தேசிய ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இந்த மைனஸ் 35 என்ற அளவிற்கு மிகாமல் முட்டைகளை விற்பனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. எவரேனும் 35 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள், அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×