search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி முகாம் நடந்தது.
    • இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    மானாமதுரை வட்டார அளவிலான 21 அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த 140 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு இனறு (25-ந்தேதி) நடைபெற்றது.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த 6,695 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 48 ஆயிரம் அந்தந்த மாணவர்கள் வங்கி கணக்கில் மத்திய அரசு சார்பில் கல்வி உத வித்தொகை வழங்கப்பட உள்ளது.

    இதில் மானாமதுரை வட்டார அளவிலான நடுநிலைப்பள்ளி மாணவர்க ளை அதிக அளவில் தேர்ச்சி பெற வைக்கும் நோக்கில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆலோ சனைப்படி மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த வாரம் 3 நாட்களும், இந்த வாரம் 3 நாட்களும் என மொத்தம் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து மாதிரி தேர்வு நடந்தது. இதில் 20 மாணவர்கள் பங்கேற்றனர். 7 வகுப்பறைகளில் கண்கா ணிப்பாளர்களைக் கொண்டு முறையான தேர்வு போன்று மாதிரி தேர்வு நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா பார்வையிட்டனர்.கருத்தாளர்கள் சிவகுருநாதன், ஜெப மாலை வளனரசு, நாகராஜன், எட்வின்பால், கற்பகவள்ளி, மேரிஐரீன், நிர்மலா, ராஜரீக மேரி ஆகியோர் பயிற்சி அளித்து தேர்வுகளை நடத்தினர்.

    தேர்வு முடிந்தவுடன் உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு பிற்பகலில் பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பாக தேர்வு எழுதிய 10 மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் அஸ்மிதா பானு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா, ஒ.வெ.செ. மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
    • இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டல் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) கலைச்செல்வன் கலந்து கொண்டு 52 பேருக்கு பணி நியமனத்துக்கான சான்றிதழை வழங்கி மேலும் பேசியது: வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசின் நோக்கமாகும். அதன்படி மாவட்டத்தில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    சி.என்.சிஆப்ரேட்டர், டெய்லரிங், சூப்பர்வைசர், மென்பொருள் பொறியாளர், மொபைல் அசம்பளர் போன்ற 910க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வுசெய்தனர். முகாமில் 293 பேர் கலந்து கொண்டதில் 52 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்களால் முடியும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என்றார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வினோத் குமார் , மணிமாறன், உதவியாளர் ராஜா, கணபதி மற்றும் அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.


    • முதியோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • முகாம் கிராம நலச் சங்க வளாகத்தில் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மூத்த குடிமக்களுக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    கிராம நலச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான மகாலட்சுமி தலைமை வகித்து பேசினார்.

    முகாமுக்கு அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் அழகேசன் முன்னிலை வகித்தார். வழக்குரைஞரும் , சட்ட ஆலோசகருமான பகுத்தறிவாளன் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேசினர்.முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கிராம நல சங்க வளாக நிர்வாகி ராஜா வரவேற்றார்.

    கோவிந்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகலாட்சுமி தொடக்கி வைத்து, மாணவ மாணவியர்கள் படிக்கும் போது நல்ல பழக்க வழக்கங்களை கையாள வேண்டும்.

    போதை பொருள்கள் மற்றும் போதை தரும் வஸ்த்துக்களை உபயோகப்படுத்தக்கூடாது .போதைப் பொருள்களை விநியோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமை செய்யும் என்றார்.பள்ளி தலைமையாசிரியர் அய்யம்பெருமாள் வரவேற்றார்.




    • சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டம்.
    • மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏ பிளாக் தரைத்தளத்தில் நாளை (வியாழக்கிழமை)

    காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள். மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை முதுகுத் தண்டுவடம் காயமடைந்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முகாமில் 76 பெண் போலீசாரும், 71 போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் என மொத்தம் 147 பேர் பயனடைந்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின் பேரில் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெண் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் உடல் பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையை செய்தனர். முகாமில் 76 பெண் போலீசாரும், 71 போலீசாரின் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் என மொத்தம் 147 பேர் பயனடைந்தனர்.

    • அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கினர்.

    பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    • 125-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முகாமில் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பாபநாசம் வட்டார வளமைய மேலாளர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

    பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி மாணவர்களின் மருத்துவ மதிப்பீட்டு முகாமை தொடங்கி வைத்து 70 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார்.

    முகாமில் மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சாமிநாதன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூராட்சி கவுன்சிலர் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் முகமது ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஹிதாயத்துல்லா, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 75 மாற்றுத்தி றனாளி மாணவர்களும், 125 மாற்றுத்திறனாளி பெரியவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்று னர் சுதாகர் நன்றி கூறினார்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் கோடங்கிபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் புதூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், செம்மிப்பாளையம் ஆரம்பசுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் கோடங்கிபாளையம் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார்.பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 12 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் ஊராட்சி செயலாளர் கண்ணப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒகளூர் ஊராட்சியில் இலவச தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து ஒகளூர் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் குணசேகரன் மற்றும் மருத்துவர் சுரேஷ் கிறிஸ்டோபர் அரசு பள்ளி மாணவர்களிடையே வெறிநோய் நோயின் தன்மை குறித்தும் விழிப்புணர்வு பற்றிய விளக்க உரையும் ஆற்றினர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் அண்ணாதுரை, ஆவின் பால் பண்ணை செக்ரட்டரி சக்திவேல், அரசு பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ஒகளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லபிராணிகளான நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. முன்னதாக ஒகளூர் அரசுப்பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கால்நடை உதவி மருத்துவ கோட்டை செயலாளர் மருத்துவர் இராமகிருஷ்ணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சத்தியசீலன், பரத், கால்நடை ஆய்வாளர் பிரேமா மற்றும் உதவியாளர்கள் சின்னதுரை, ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் கல்பனா ஏற்பாடு செய்திருந்தார்.


    • கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
    • 20 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கடுகூர் அடுத்த கோப்பிலியன் குடிகாடு கிராமத்தில் கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் திடுப்பூசி செல்லுத்தும் முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவர் தர்மலிங்கம் தொடக்கி வைத்தார். அரியலூர் மண்டல இணை இயக்குநர்(பொ)சுரேஷ்கிரிஸ்டோபர், கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், கால்நடை ஆய்வாளர் மாலதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, 4 முதல் முதல் 8 மாதம் வரை உடைய 20 கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு கருச் சிதைவு நோய் தடுப்பூசிகளை செலுத்தினர்.மேலும் இம்முகாமில், மாடுகளில் கருச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.


    • ஜெயங்கொண்டம் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமுருகன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கினார். முகாமில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவ வல்லுநர்கள் குழு கலந்துகொண்டு 150 மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதித்து தேவையான சிகிச்சைகள் மற்றும் உதவி உபகரணங்களை வழங்க பரிசீலினை செய்தனர்.


    • வருகிற 17-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • முகாமில் கலந்து கொள்ளபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ./டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.

    ×