search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • ஜெயங்கொண்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை திருமாவளவன் தொடங்கி வைத்தார்
    • முகாமில் கலந்துகொண்ட 2,307 நபர்களில், 527 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் மாடர்ன் கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 143 தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் 11 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட 2,307 நபர்களில், 527 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், ஜெயங்கொண்டம் நகர்மன்றதலைவர் சுமதி சிவக்குமார், மாடர்ன் கல்விக்குழுமத்தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் சுரேஷ் மற்றும் திருச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான பயிற்சி மைய உதவி இயக்குநர் கலைச்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் நகராட்சி முன்பு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.


    • வேலைவாய்ப்பு முகாமினை வரும் 29-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் நடக்கிறது.
    • ஜி.எம்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்).

    தருமபுரி,

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை வரும் 29-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் நடக்கிறது.

    ஓட்டுனருக்கு 10 -ம் வகுப்பில் தேர்ச்சி, நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் இருவரும் கலந்துகொள்ளலாம், உயரம் 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்..

    மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும்.

    தேர்வு முறையாக எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண்பார்வை -மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும்.

    மாத ஊதியம் ரூ.15235- (மொத்த ஊதியம்). தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும்.பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்.

    மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகளாக கல்வித்தகுதியாக பி.எஸ்சி நர்சிங், அல்லது ஜி.எம்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்).

    அல்லது பி.எஸ்.சி.ஜூவாலஜி, பாட்டனி, பயோகெமிஸ்டிரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, வயது வரம்பு 30 வயதிற்க்குள் இருக்கவேண்டும்.

    சம்பளமாக ரூ.15,435- மற்றும் அலவன்ஸ் உண்டு. ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.

    எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவளத் துறையின் நேர்முகம் போன்ற தேர்வுகள் நடைபெறும்.

    தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். (பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி செய்துதரப்படும்).

    மேலும் விவரம் அறிய 044-28888060, 75, 77 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 7397724804, 7338734076, 9150084155 செல்போன் என்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    அம்மாபேட்டை:

    பாபநாசம் அடுத்த ராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடை பெற்றது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு 13-வது முறை நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் அலி தலைமை தாங்கினார்.

    பாபநாசம் தாசில்தார் பூங்கொடி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராஜகிரி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    முகாமில் தஞ்சாவூர் அரசு ராசாமி ராசுதார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ரத்த வங்கியின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ காப்பீடு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது
    • இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    திருச்சி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மற்றும் ஐக்கிய நல கூட்டமைப்பின் வழிகாட்டி மையம் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வழிகாட்டுதல் முகாம் பீமநகர் கீழ கொசத் தெருவில் நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட தலைவர் பைரோஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட பொருளாளர் ஆயிஷா, பீமா நகர் கிளை தலைவர் ஜெயராணி,செயலாளர் சாஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா செய்திருந்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் பாரூக்,மாவட்ட தலைவர் ஹபீபுர் ரஹ்மான்,மாவட்டச் செயலாளர் சையது ஹக்கீம்,துணைத் தலைவர்கள் உமர் பாரூக் ஹஜ்ரத்,அலாவுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் மைதீன்,பொருளாளர் சேக் முகமது கௌஸ்,துணைச் செயலாளர் நியாஸ் அஹமத மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது
    • இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பப்ளிக் பவுண்டேஷன் தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் சகிலன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகிகள் இரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வன் தலைமையிலான அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் செந்தில்ராணி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் ரத்தங்களை சேகரித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.


    • துறையூர் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரில் வட்ட சட்டப் பணிகள் குழுவும், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். துறையூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு மருத்துவர் கலைமணி தலைமையில் பணியாளர்கள் வினோதா, இலக்கியா, சுபிதா, முத்துக்குமாரி, தேவிகா மற்றும் முசிறி எம்.ஐ.டி கல்லூரியில் துணை மருத்துவ படிப்பு பயிலும் மாணவிகள் ஆகியோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர். முகாமில் வழக்கறிஞர் சங்க செயலாளர் கோகிலா, பொருளாளர் முகமது ரஃபீக், அரசு வழக்கறிஞர்கள் சபாபதி, சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்

    • பெருஞ்சேரி கிராமத்திலேயே ஆஸ்பத்திரி அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.
    • மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பெருஞ்சேரி தெற்குத் தெருவை சேர்ந்த சேஷாசலம் என்பவரின் பேரன்கள் கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர்.

    இவர்களில் கண்ணா லண்டனிலும், டாக்டர் ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது சேவை செய்ய எண்ணிய கண்ணா, டாக்டர் ராமகிருஷ்ணனுடன் ஆலோசித்து பெருஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் தற்போது, மருத்துவ அவசர தேவைகளுக்கு 7 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மங்கைநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்தனர்.

    இதையடுத்து பெருஞ்சேரி கிராமத்திலேயே மருத்துவமனை அமைத்து மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டனர்.

    இதற்காக தங்கள் தாத்தா தனசேஷன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்தனர். தாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாக இருப்பதால், இந்தியாவில் வசிக்கும் தனசேஷனின் பேத்தி வனிதா ஜெயராமனை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலராகவும், உறவினர்கள் ராஜதிலக், சுரேகா, தீபக் ஆகியோரை நிர்வாகிகளாகவும் நியமித்து, தங்கள் பூர்வீக வீட்டையே மருத்துவமனையாக மாற்றி உருவாக்கியுள்ளனர்.

    இந்த மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, ரூ.10 மட்டும் கட்டணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளனர்.

    எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவமனை திறப்பு விழாவில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கலந்துகொண்டு, கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்டதுடன், தானும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் வட்டாட்சியர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராமத்தை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்த பின்னரும், சொந்த ஊரை மறக்காத கண்ணா, ராமகிருஷ்ணன் குடும்பத்தினரை கிராமமக்கள் மனமார வாழ்த்தினர்.

    பயிற்சி முகாம் 25.1.2023 (புதன் கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய அறிவியல் பேராசிரியர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கால்நடை உற்பத்திக்கு பசுந்தீவனத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் 25.1.2023 (புதன் கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில், கறவை மாடு மற்றும் ஆடுகளுக்கான பசுந்தீவனம் , அடர் தீவனம், அசோலா தீவனம், ஹைட்ரோபோனிக்ஸ் தீவனம் மற்றும் ஊறுகாய் புல் தீவனம் உற்பத்தி மற்றும் தீவனமளித்தல் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் விரிவான பயிற்சி அளிக்கப்படும்.இந்த பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை. எனவே இந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள திருப்பூர் மாவட்ட விவசாயிகள்,கால்நடை வளர்ப்போர் 99442 87542 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை குறித்த விழிப்புணர்வு மற்றும் சுகாதார ஆலோசனைமுகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் விடுதி பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு வேலா டி பட்டி கால்நடை தலைமை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவர்கள் கவின் குமார், செந்தில் ராஜன், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சிகிச்சை அளித்தன ர் முகாமில் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி குடற்புழு நீக்கம், கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் தாது உப்பு கரைசல் வழங்கப்பட்டது.முகாமில் சிறந்த கிடாரிக்கன்றுகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயல் காளிமுத்து செய்திருந்தார்.


    • பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலை ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக ்களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும்,

    குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்றகுறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் குந்தாரப்பள்ளி அடுத்த சாமந்தமலை கிராமத்தில்

    நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்டவழங்கல் வட்டாட்சியர் ரமேஷ், வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கண்ணன்,

    சத்தீஷ், ஊராட்சி செயலாளர் முருகன், விற்பனையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மக்களின் ரேஷன் கார்டில் புதியதாக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.

    • ஆலங்குளம் ஒன்றியத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 24 -ந்தேதி நடைபெற உள்ளது.
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ. மருதப்பபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் வழிகாட்டுதலின் படி இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 24 -ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. முகாமினை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி, ஆலங்குளம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • முசிறியில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது
    • 30 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது

    முசிறி:

    முசிறி கல்லூரி சாலையில் உள்ள நியாய விலை அங்காடி 1ல் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. முசிறி கோட்டாட்சியர் மாதவன் உத்தரவுபடி நடைபெற்ற முகாமிற்கு முசிறி வட்ட வழங்கல் அலுவலர் லதா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    பெயர் சேர்த்தல், நீக்கல், மொபைல் எண் மாற்றம், அங்கீகரிப்பு சான்று உள்ளிட்ட 30 மனுக்கள் இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் கூட்டுறவு வங்கி செயலாளர் சபாபதி, விற்பனையாளர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    ×