search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • மந்திபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவி இயக்குனர் டாக்டர் அருண்பாலாஜி அறிவுரையின்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கொண்டு வந்து பயன் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மணியனூர் ஊராட்சி மந்திபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவி இயக்குனர் டாக்டர் அருண்பாலாஜி அறிவுரையின்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கை முறையில் கருவூட்டல், தாதுஉப்பு கலவை வழங்குதல், மலடு நீக்க சிகிச்சை செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்கள் பற்றிய சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்து வர் டாக்டர் அனிதா, கால்நடை ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர், பன்னீர் செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர்.

    பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கால்நடை முகாமில் கலந்து கொண்டு பல்வேறு உதவிகளை செய்தனர். இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கொண்டு வந்து பயன் பெற்றனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுனர்களும் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 35 வரையிலான ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணையும் அல்லது ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • மக்கள் தொடர்பு முகாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குருவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, பல்வேறு துறைகள் சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.14,22,260 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது, இந்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்பொழுது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

    தங்களது வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    இதன்படி, வீடு, தெரு, கிராமம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்படி பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    முகாமில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    இம்முகாமுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் குமார், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • மதுரையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • வேலை நாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

    வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் நாளை நடைபெறுகிறது.
    • கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் ஓரத்தநாடு வட்ட அலுவலகத்தில் நாளை ( வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 18 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.

    சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது/செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவிகளுக்கு ரத்த சோகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
    • உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ்

    கரூர்

    கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் வளரிளம் மாணவிகளிடையே ரத்தசோகை கண்டறியும் ஆய்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு உதிரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கண்டறியப்படவுள்ளது. வாரம், வாரம் இரும்பு சத்து மாத்திரைகள் மட்டுமே வழங்கக்கூடிய திட்டம் இருக்கிறது. நாட்டிலே முதல் முறையாக நம்முடைய மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளின் ஹீமோகுளோபின் அளவுகளை பரிசோதித்து பின் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளின் ரத்தம் எடுப்பதனால் மொத்தம் 26 ஆயிரம் மாணவிகளின் பெற்றோர்களின் அனுமதியை கேட்டறிந்து விண்ணப்பம் தெரிவித்தோம். அதில் 16,792 குழந்தைகளின் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைகளிடம் ஒப்புதலும் பெறப்படுகிறது. அதாவது 165 பள்ளிகளில் 125 அரசு பள்ளிகள், 40 தனியார் பள்ளிகளில் இந்த ரத்தசோகை கண்டறியும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் தொடர்ந்து 15 நாட்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 9,250 மாணவிகளுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது, என்றார்."

    • முகாமில், 3000-க்கும் மேற்பட்டோர் மின் இணைப்பை ஆதாருடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.
    • வரும் வாரத்தில் விடுபட்டுள்ள கிராமங்களில் முகாம் நடைபெறும்.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி-பூதலூர் சாலையில் புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் மற்றும் கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வழியாக மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் பூதலூர் வட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்கள் 3000-க்கும் மேற்பட்டோர் தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் எவ்வித கட்டணம் இல்லாமல் இணைத்து கொண்டனர்.

    முகாமில் கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர்.ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர்.குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அறிவுமணி, கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் கருப்பையா, பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் ஆகியோர் முகாம் சிறப்புற நடைபெற உதவி புரிந்தனர்.அனைத்து ஊர்களிலும் உள்ள பஞ்சாயத்து தலைவ ர்கள் முன்னிலையில் முகாம் தொடங்கிநடந்தது.

    வரும் வாரத்திலும் விடுபட்டு உள்ள கிராமங்களில்முகாம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

    • குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.
    • ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சி யர் அலுவலகங்களில் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இந்த முகாமில் உடனடியாக செய்து கொள்ளலாம்.

    அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாம் குறித்து, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி கூறியதாவது:வட்ட வழங்கல் துறை சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை பயனாளர்கள் பெயர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடைபெற்ற முகாமில் இது சம்பந்தமாக பல மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    சிறப்பு முகாம் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-இன் கீழ் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கும், தற்போதுள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், அங்காடி மாற்றம் மற்றும் மாவட்ட மாறுதல் போன்ற பணிகளை செய்து கொள்ள பொது மக்கள் வட்ட வழங்கல் அலுவலத்திற்கு செல்லாமலே தாங்கள் வசித்து வரும் இடத்தில் இருந்து இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பொது சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் இணை யதளத்தில் விண்ணப்பம் செய்திடவேண்டும். அவற்றின் மீது தொடர்பு டைய வட்ட வழங்கல் அலுவலரால், ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் ஏற்பளிக்கப்பட்ட உடன் தேவையான சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    புதிய மின்னனு குடும்ப அட்டைகள் சென்னை யில் இருந்து அச்சிட்டு வரப்பெற்ற வுடன், உரிய நியாயவிலை அங்காடிகள் மூலம் விண்ணப்ப தாரர்களுக்கு அந்த அட்டை விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • ரேசன்கடை பொறுப்பாளர் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 9 கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராம ரேசன் கடையில் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் தலைமையில் நடந்தது. தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) தமிம்ராசா முன்னிலை வகித்தார். ரேசன் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 6 மனுக்களும், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் உட்பட 28 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார் ஆதி, ரேசன்கடை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சந்திராகனகராஜ் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர்கள் அபிராமி, மணிகண்டன், ஜெயபிரீத்தி, கால்நடை ஆய்வாளர்கள் முருகானந்தம், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சைபிள்ளை, செல்வராஜ், வசந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 180 பசுக்கள், 300 வெள்ளாடுகள், 60 செம்மறியாடுகள், 200 கோழிகள் மற்றும் நாள்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர். கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறான கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • உதவி இயக்குநர் தலைமையில் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    நொய்யல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமபரிப்புத்துறை உதவி இயக்குநர் சரவணக்குமார் தலைமை வகித்தார். கால்நடைபராமரிப்புத் துறை புளனாய்வு பிரிவு உதவி இயக்குநர் வில்வி அருள்குமாரி முன்னிலை வகித்தார். முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் உஷா தலைமையிலான மருத்துவர்கள் 400க்கும் மேற் ட்ட வென்னாடுகள், செம்மறி ஆடுகளுக்கள், கன்றுக்குட்டிகள், நாய்ளுக்கும் தடுப்பூசி மற்றும் சிகிச்சையளித்தனர். கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியும், நோய்கள் குறித்து விழிப்புணர்வும், கால்ந டைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை விவசாயி களுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதும் வழங்கப்பட்டது.

    • 2 நாட்கள் நடக்கிறது
    • கூடுதல் விவரங்களுக்கு 04652-260008 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தை தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக மாற்றும் பொருட்டு தொழில்களுக்கு தோள் கொடுத்து தொழில் வளம் பெருக்க புதிய தொழில்முனைவோர்களை கண்டறியும் பொருட்டு தொழில் ஊக்குவிப்பு முகாம் 15-ந் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும், 22-ந் தேதி தோவாளை ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

    தமிழக அரசு செயல்ப டுத்தி வரும் வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ( UYEGP ) நமது மாவட்டத்திற்கு 98 நபர்களுக்கு ரூ.78 லட்சம் மானிய திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பலசரக்கு வியாபாரம், மின்சார பொருட்கள் வியா பாரம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை போன்ற அனைத்து வகை யான வியாபாரங்களுக்கும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது . ரூ.5 லட்சம் வரையுள்ள திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

    தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு ரூ .385 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும்.

    இத்திட்டத்தில் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மத்திய அரசால் செயல்ப டுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 189 நபர்களுக்கு ரூ.546 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் சிறப்பு பிரிவினர் தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சம் 35 சதவிகிதம் மானியம் பெற வழிவகை

    உள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற www.kviconline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். மேற்படி கடன் திட்டங்க ளுக்கு விண்ணப்பிக்க கடவுசீட்டு அளவு நிழற்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை , விலைப்புள்ளி, கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் மேற்படி அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ப வர்களுக்கு கூட்ட அரங்கி லேயே விண்ணப்பம் பதிவேற்றம் செய்து வழங்கப்படும் .

    மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் , தொழிற்பேட்டை கோணம் அஞ்சல் , நாகர்கோவில் -4 அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04652-260008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×