search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது.
    • சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாளை (சனிக்கிழமை) சிறப்பு அஞ்சல் சேமிப்பு கணக்கு சேகரிப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற உள்ளது. ஒருவர் தனது சராசரி தேவைகளுக்கு பிறகு சேமிக்கும் சிறிய பணமும் சேமிப்பாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் சேமிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும்.

    அஞ்சலகத்தில் எல்லா பிரிவினர், வயதினருக்கும் ஏற்ற சேமிப்பு திட்டங்கள் ரூ.100 முதல் ஆரம்பமாகின்றது. உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதுவரை அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறாத பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிய முறையில் கணக்கு தொடங்கலாம். எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வேறு திட்டத்தில் சேர்ந்து கூடுதல் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய தபால் அலுவலகங்களிலும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு கவுன்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் உருக்காலை நிர்வா கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான உதவி உபகர ணங்கள் வழங்க அளவீடு செய்யும் முகாம் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தாரமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 96 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கான அளவு எடுத்துகொண்டனர்.

    இதில் கலந்துகொண்ட வர்களுக்கு ஊன்றுகோள், செவிதிரன் கருவி, செயற்கை கால், பேட்டரி சைக்கிள், கையுரை, வீல்சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தனர்.

    இதற்கான கருவிகள் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கலகத்தில் தயார் செய்து வருகிற டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த முகாமில் சேலம் உருக்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் உலகநாதன், வெங்கடாசலபதி, ஆகியோறும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கண்ணன், பேச்சு பயிற்சி நிபுணர் ஸ்ரீ தேவி மற்றும் எக்காம்வெல் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த கல்வி திட்ட சிறப்பு பயிற்று னர்கள், முட நீக்கு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.
    • வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அக்டோபர் 28-இல் கல்விக் கடன் முகாம் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஷா நவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தல்!

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அக்டோபர் 28-ஆம் தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.

    இது தொடர்பான முழு விபரங்களை ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சித்த லைவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி வங்கிக் கடன் முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையை உருவாக்குவதே இந்த கல்விக் கடன் முகாமின் நோக்கம் என்று எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    கல்விக் கடன் தொடர்பாக இதுவரை தம்மிடம் மனு அளித்த அனைவருக்கும், இந்த முகாம் பற்றிய தகவலை எம்.எல்.ஏ அலுவலகம் மூலம் தெரிவித்துள்ளதாகவும் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பரமத்தி சமுதாய கூடத்தில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேற்று முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா விற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்குள்ள இடும்பன் குளம் நிரம்பி அதன் உபரிநரீ, பரமத்தி பேரூராட்சி காந்திநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

    இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பரமத்தி சமுதாய கூடத்தில் உள்ள தற்காலிக நிவா ரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேற்று முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து காந்தி நகரில் பாதிக்கப்பட்ட வீடுகளையும், மழையால் நிரம்பிய இடும்பன் குளத்தையும் பார்வையிட்டனர்.

    இதில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் கௌசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், பரமத்தி பேரூ ராட்சி தலைவர் மணி, பரமத்தி பேரூர் செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான ரமேஷ்பாபு, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, அலுவலக உதவியாளர் நல்லுசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மெகா சிறப்பு தூய்மைப்பணி முகாம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நடந்தது.
    • நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி இணைந்து, மெகா சிறப்பு தூய்மைப்பணி முகாம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நடந்தது. நிகழ்ச்சியில், மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில், மாணவிகள் கே.ஆர்.பி. அணையில் உள்ள பூங்கா, நீர் நிலைகள், புல்வெளி மற்றும் சாலைகள் உள்பட அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தினார்கள். முடிவில் ஊராட்சிகள் பிரிவு கண்காணிப்பாளர் சுபராணி, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர்கள் கஸ்தூரி, கலைவாணி, நவீன், ரோஜா, பாலாஜி, திவ்யபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேளாண்மை உதவி இயக்குனர் தங்க ராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான விவசா யிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் ஏற்காடு முண்டகாபாடி கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தங்க ராஜ் தலைமையில் மாவட்ட அளவிலான விவசா யிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தியத்தின் செந்தில்குமார் கலந்து கொண்டு உழவன் செயலி பயன்பாடு குறித்து எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் பிரபுதேவா நடைமுறையில் உள்ள திட்டங்கள் பற்றி கூறினார்.

    இதேபோல் ஏற்காடு மஞ்சகுட்டை கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ் தலை மையில் விவசாயிகளுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் தங்க ராஜ் தலைமையில் 50 விவசாயிகள்‌ ஒரு நாள் கண்டு உணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அறுவ டைக்குப் பின் மதிப்பு கூட்டுதல் பற்றியும், ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும் ‌எடுத்துக் கூறப்பட்டது. 

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார விவ சாயிகள் அட்மா திட்டத்தின் கீழ் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு பட்டயறிவு பயணம் அழைத்து செல்லப்பட்ட னர்.
    • விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம், பயிற்சி அளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார விவ சாயிகள் அட்மா திட்டத்தின் கீழ் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு பட்டயறிவு பயணம் அழைத்து செல்லப்பட்ட னர். வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) ஆத்தூர் ஜானகி முன்னிலை வகித்து விவசாயிகளை அனுப்பி வைத்தார். அட்மா திட்ட தலைவர் செழியன் தலைமை வகித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் ஜெகதாம்பாள் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம், பயிற்சி அளித்தார். இறுதியாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா கலந்து கொண்டு அட்மா திட்டம் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளார் தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
    • நிலப்பிரச்சினை தொடர்பான

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீசார் மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை வருவாய் தாசில்தார் சரவணன், மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலம் தொடர்பான 11 கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு உடனடியாக தீர்வு கண்டனர்.

    • நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மனநலம் பற்றிய கருத்துக்களும் மற்றும் சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
    • உடுமலை கிளைச்சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    உடுமலை:

    உடுமலை கிளைச்சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், எண் -2 நீதிபதி மீனாட்சி, அரசு வக்கீல் சிவஞானம், வக்கீல் ஜூடுபிரபு மற்றும் கிளைச்சிறை கண்காணிப்பாளர் பாலச்சந்திரன உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மனநலம் பற்றிய கருத்துக்களும் மற்றும் சட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    • போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்ததான கழகத்தின் 30 -ம் ஆண்டு விழா, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு விழா, செய்தோருக்கு பாராட்டு விழா வேலூர் பில்டர் பெட்ரோடு அனிகர் ஆஸ்ரம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது.

    விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் திலிபன் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் நாராயணன் வரவேற்று பேசினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கார்த்திகேயன் எம். எல். ஏ, மேயர் சுஜாதா, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள்பாஸ்கரன், மேனாள், வரவேற்புக்குழு செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏழு குளம் என்று அழைக்கப்படும் குளங்களின் நீர் மட்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் செங்குளத்தில் பறவைகள் முகாமிட்டுள்ளன. செங்குளம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    பாசன பகுதிகளுக்கு உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர், கால்வாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை அடுத்தடுத்துள்ள ஏழு குளம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் தினைக்குளம், செட்டிகுளம், செங்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம் மற்றும் வளையபாளையம் குளம் ஆகிய 8குளங்களுக்கு விடப்படும் தண்ணீர் மூலம் அந்த பகுதியில் உள்ள பகுதிகளும் பாசன வசதி பெறுகிறது.

    திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இந்த குளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 10 மாதங்களுக்குள் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசாணை வருகிறதோ? அந்த அளவு தண்ணீர் அந்த காலத்திற்குள், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் தேவையைப்பொறுத்து விடப்படும்.

    அதன்படி ஒட்டுக்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது தண்ணீர் கேட்காத நிலையில் அவர்கள் கேட்கும்போது விட அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதனால் அந்த குளம் தவிர மற்ற 7குளங்களுக்கும் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.அதனால் இந்த குளங்களின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் பள்ளபாளையம் அருகில் உள்ள செங்குளத்திற்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. கொக்குகள், நாரைகள் மற்றும் நீர்க்கோழிகள் அதிகமாக வந்துள்ளன.நீர்க்கோழிகள் கூட்டமாக குளத்துதண்ணீரில் நீந்தி செல்கின்றன.கரையோரங்களில் கொக்குகள் மற்றும் நாரைகள் தண்ணீரில் மீன்களை தேடுகின்றன.மீன்கள் தென்பட்டதும் அதை கொக்குகளும், நாரைகளும் கொத்தி தின்கின்றன.இடையிடையே அவை குளத்திற்குள் உள்ள மரங்களில் கூட்டமாக உட்கார்ந்து இளைப்பாறுகின்றன.

    ×