search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • வேலை வாய்ப்பு முகாம் நாளை (15-ந் தேதி) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது.
    • 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள். வயது வரம்பு 18 முதல் 20 க்குள் இருக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-ஒசூரில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பட்டப்படிப்புடன் கூடிய நிரந்தர பணி வாய்ப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதர இயக்கம் இணைந்து பெண்க ளுக்கான சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.

    இந்த முகாம் நாளை (15-ந் தேதி) டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்நிறுவனத்தில் பணிபுரிய கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். 2020, 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள். வயது வரம்பு 18 முதல் 20 க்குள் இருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகுதி உடைய பெண்கள் நாளை (15-ந் தேதி) விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு தனியார் நிறுவனத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும், மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வ தற்கான வாய்ப்புகளுடன் கூடிய நிரந்தர பணி நியம னமும் வழங்கப்படும்.

    எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 2020. 2021 -2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்கள்.

    • பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சோழ சிராமணி அருகே உள்ள சுள்ளி பாளையத்தில் மண் மாதிரி சேகரிப்பு ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • விவசாயிக ளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சோழ சிராமணி அருகே உள்ள சுள்ளி பாளையத்தில் மண் மாதிரி சேகரிப்பு ஆய்வு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

    முகாமில் விவசாயிக ளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோ தனை செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது. ஆய்வறிக்கையில் பயிர் சாகுபடி செய்ய உள்ள நிலத்தின் கார அமிலதன்மை, தொழுஉரம், பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்துக்கள் உள்ளிட்ட விவரங்கள் விவசாயிகளிடம் தெரி விக்கப்பட்டு அவற்றினை பயன்படுத்தும் அளவு ஆகிய விவரங்களையும் விவசா யிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

    விழிப்புணர்வு முகாமில் மூத்த வேளாண்மை அலுவலர் சவுந்தரராஜன், நடமாடும் மண் பரிசோ தனை நிலைய வேளாண் அலுவலர்கள் அருள்ராணி, அன்புச்செல்வி, உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • யோகா பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • பெண்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், நொய்யல், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், ஹோமியோபதி டாக்டர் சாந்தி தலைமையில், சுகாதார செவிலியர் சரஸ்வதி, தன்னார்வலர் ஈஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர், பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு, யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நொய்யல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

    • மன்ற செயலாளர் வெற்றிவேல் வரவேற்று பேசினார்.
    • ஏ.எம்.பொன்னுசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காங்கயம்:

    காங்கயம் மனவளக்கலை மன்ற அறிவு திருக்கோவில் அரங்கில் ஈரோடு எஸ்.கே.எம். சிகிச்சாலயா சித்த ஆயுர்வேத மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இலவச சித்த ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.

    முகாமை காங்கயம் மனவளக்கலை மன்ற பொறுப்பாசிரியர் மேகநாதன் தொடங்கி வைத்து பேசினார். மன்ற செயலாளர் வெற்றிவேல் வரவேற்று பேசினார். மன்ற தலைவர் பழனிசாமி, பொருளாளர் நடராஜன் மற்றும் மன்ற நிர்வாகிகளான கமலஹாசன், கே.எஸ்.முருகசாமி,, ஏ.எம்.பொன்னுசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    300 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். முடிவில்ய மன்ற பேராசிரியர் கொங்குராஜ் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை எஸ்.கே.எம். சித்த ஆயுர்வேத மருத்துவமனையின் இலவச முகாம் பொறுப்பாளர் உத்திரசாமி செய்திருந்தார். 

    • திருப்புவனம் அருகே, நாளை மக்கள் தொடா்பு முகாம் நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்..

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை உள்வட்டம், பொட்டபாளையம் கிராம பஞ்சாயத்து அலுவலக அருகில் நாளை (12-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் அரசுத்துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே நோக்கம் ஆகும்.

    பொட்டபாளையம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
    • உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அரசுமருத்து–வமனையில் உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு ஆலங்குடி பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

    முகாமை ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் துவக்கி வைத்தார். மருத்துவர் டாக்டர் ஜோதிராஜன், சித்த மருத்துவர்டாக்டர் மணிவண்ணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை யில் முகாம் நடைபெற்றது.

    முகாமில் வீடற்றோர் மற்றும் முதியோர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் சூரணம் மற்றும் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும் பொடி மற்றும் பூஸ்டர் ஊசி இலவசமாக வழங்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புத்தாஸ் வீரகலைகள் கழகம் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியில் பங்கேற்ற 140 மாணவர்களுக்கு பேரூராட்சி சேர்மன் சான்றிதழ்களை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் புத்தாஸ் வீரகலைகள் கழகம் சார்பில் இலவச சிலம்ப பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது. வீர கலைகள் கழக நிறுவனர் சேது கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பயிற்சியில் பங்கேற்ற 140 மாணவர்களுக்கு பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக துணை சேர்மன் கான் முகமது, நகர காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி திட்ட அலுவலர்கள் மரியா, வெள்ளபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார்.

    ஊரகவளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி திட்ட அலுவலர்கள் மரியா, வெள்ளபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களான கல்வி அறக்கட்டளை, பெட்கிராட், ரூட்செட் உள்பட 12 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

    இதில் அலங்காநல்லூர் வட்டாரத்தை சேர்ந்த 270-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திறன்பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழும், பயிற்சிக்கான உபகரணங்களும் பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேலாளர் மகாலட்சுமி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். உதவிதிட்ட அலுவலர் சின்னத்துரை நன்றி கூறினார்.

    • சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
    • வருகிற 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழ குநர் இடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, வருகிற 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் ஒன்றிய அரசால் வழங்கப்படுகின்றது.

    எனவே, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மைச் சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகா மில் கலந்துகொண்டு பயன்பெ றாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது
    • புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பில்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பாக 1-வது வார்டு நரிமேடு பகுதியில் இல்லம் தேடி இளைஞரணி சேர் க்கை முகாம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நகரச் செயலாளர் செந்தில் முன்னிலையில் நடைப்பெற்றது. தி.மு.க. இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் முதற்கட்டமாக 42 நகராட்சி வார்டுகளில் இளைஞரணியில் இளைஞர்களை அதிகபடியாக சேர்க்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை எம்.எல்.ஏ.முத்துராஜா, நகரச் செயலாளர் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், கீரை.தமிழ்ராஜா, சுப.சரவணன், மாவட்ட பொருளாளர் லியாகத்அலி, மாவட்ட அவைதலைவர் அரு.வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், துணை அமைப்பாளர் நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் செல்லத்துரை, எட்வர்ட் சந்தோசநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பழனிவேலு, பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி புதுநகர் குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தனர்.

    • பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல் பரிசோதனை மருத்துவ முகாம், மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல் பரிசோதனை மருத்துவ முகாம், மரக்கன்று வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் பொதுமக்களுக்கு பல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. மரக்கன்றுகளும் வழங்கப்ப ட்டன. 702 பேருக்கு வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு நெசவாளர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் யு.என்.உமாபதி தலைமை தாங்கி னார். நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கோபி, நெசவாள பிரிவு மாவட்ட பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், நெசவாளர் பிரிவு மாநில பார்வையாளர் சண்முகராஜ், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் வழங்கும் துறையின் சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சங்கர் தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் குடிமை பொருள் வழங்கும் துறையின் சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சங்கர் தலைமை தாங்கினார். பறக்கும் படை தனி தாசில்தார் மாயகிருஷ்ணன், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய எடை மற்றும் முத்திரைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    கூட்டத்தில் ரேஷன் அட்டையில் பொருள் வாங்குபவர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் வரவேற்றார். முடிவில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் உமா நன்றி கூறினார்.

    ×