search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி,

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டாரம், சூரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருதிப்பட்டியில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த இந்த முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், துணைத் தலைவர் கமலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமை தாங்கினார். சூரக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆதித்யா, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சரவணன், சிங்கம்புணரி மருத்துவமனை சித்த மருத்துவர் ரஹீமா பானு ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 225 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் சோலைசாமி, சுகாதார ஆய்வாளர் எழில் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.

    • காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தினர். இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, கிராம செயலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் ஆஷ்மின், ஒன்றிய கவுன்சிலர் சுமதி செல்வகுமார், வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த வள்ளி, விஜயா, தலையாரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஊராட்சி மன்ற வளாக பகுதி, அங்கன்வாடி மைய பகுதி, ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகப்பகுதி, துணை சுகாதார நிலையம், அம்மன் கோவில் மற்றும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • ஒன்றியக்குழு தலைவர் தலைமைவகித்தார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி வலையபட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி தலைமைவகித்தார். முகாமினை பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியர் கே.பிரகாஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முகாமில் 172 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 22 பேர் அறுவைசிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் பேரூராட்சி உறுப்பினர்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நூற்றுக்கும் மேலான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
    • மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறையும், மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து லூயிஸ் பாய்ச்சர் என்ற விஞ்ஞானி பிறந்த தினத்தில் (தடுப்பூசியை கண்டுபிடித்தவர்) வெறி நோய் தடுப்பூசி முகாமை நடத்தினர்.

    இதில் 2981 ரோட்டரி மாவட்ட கால்நடை முகாம்களுக்கான மாவட்ட தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்.

    மொத்தம் 113-க்கும் மேலான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் டாக்டர் டி. ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில் உதவி இயக்குனர் டாக்டர் சி. மும்மூர்த்தி, மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி. ரெங்கையன், செயலர் வி. கோபாலகிருஷ்ணன், பொருளர் டி. அன்பழகன், டாக்டர்கள் கார்த்திக், ராகவி, ஆய்வாளர் சின்னக்காளை, உதவியாளர்கள் இ. நடராஜன், வி. பாரதி மோகன், ஆர். கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களைத் தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் நடந்தது
    • மேயர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்

     திருச்சி:

    திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 -ல் மக்களைத் தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் காட்டூர் கைலாஷ்நகரில் உள்ள சந்தோஷ் மஹாலில் நடைபெற்றது. இந்த முகாமில். மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, மண்டல குழுத் தலைவர் மதிவாணன், நகரப் பொறியாளர் சிவபாதம், துணை ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம், உதவி வருவாய் அலுவலர் தாமோதரன், பாதுகாப்பு திட்ட தனி ஆட்சியர் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், பாலமுருகன், சமூக கவுன்சிலர்கள் கோவிந்தராஜன், ரெக்ஸ், கே.கே.கே.கார்த்திக், கொட்டப்பட்டு ரமேஷ், தாஜுதீன், செந்தில், சிவக்குமார், சுரேஷ், சீத்தாலட்சுமி முருகானந்தம், பியூலா ராஜமாணிக்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    முகாமில் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி, சொத்துவரி , பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்களையும் உள்ளிட்ட ஆணைகளை இன்று வழங்கினார்.

    • 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

    கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் காலை துவங்கிய தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பலர் உடன் இருந்தனர். பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொண்டு பயனடையலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

    • சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது.
    • இலவச மருத்துவ முகாமில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3300 கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    ராசிபுரம்:

    சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடந்தது. முகாமை எம்.பி. சின்ராஜ் தொழிலதிபர் ராமசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர்.

    தி.மு.க. அயலக அணி மாநில துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முகாமை ராமச்சந்திரா கல்வி நிறுவன இணை வேந்தர் செங்குட்டுவன் பார்வையிட்டார்.

    முகாமில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், நுரையீரல், குழந்தைகள் மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண், பல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. பெண்க ளுக்கான மார்பக புற்று நோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவச மாக மேற்கொள்ளப்பட்டன.

    இசிசி, ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது.காது கேளா தோர் கருவி வழங்கப்பட்டது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 2 நாட்கள் நடந்த இலவச மருத்துவ முகாமில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3300 கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் வில்லிபாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் நீர் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் வில்லிபாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது.

    இதில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, வேளாண்மை உதவி இயக்குநர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறுதானிய விவசாயத்தில் கிடைக்கும் கூடுதல் வருமானம், பயிர் சாகுபடி முறைகள், நீர் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

    மேலும் மானிய விலையில் இடுபொருட்கள்-விதைகள், மருந்து மற்றும் நுண்ணூட்ட உரக்கலவைகள், சிறுதானிய விற்பனை, லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரகுபதி மற்றும் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

    • 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை

    தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை கட்டுபடுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி

    38-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (25-ந் தேதி) காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

    மதுரை மானவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஒட்டுமொத்தமாக 1,459 மையங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களிலும், நகர பகுதிகளில் 550 மையங்களிலும் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2 லட்சத்து 7 ஆயிரத்து 806 பேர் தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் 1லட்சத்து 4 ஆயிரத்து 803 பேர் ஊரக பகுதிகளிலும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 3 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

    அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசி போட 11 லட்சத்து 54 ஆயிரத்து 113 பேர் தகுதி பெற்று உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 630 பேர் கிராமப்புற பகுதிகளிலும், 5 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் மாநகர பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

    மேற்கண்ட அனைவரும் சிறப்பு முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கேட்டு கொண்டுள்ளார்.

    மேலும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ, தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி- கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தேவண்ணக்கவுண்டனுாரில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கிடையூர்மேட்டூர் கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ சவும்யா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயன ளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, சாக்கடைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 74 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி

    வைத்து நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார். முகாமில், சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர் சாரதாபழனியப்பன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–டுகிறது. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுப்படுகின்றனர்.

    70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொது–மக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார். 

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 350 விண்ணப்பங்கள் பெறப்பட்டது

    அரியலூர்

    மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 350 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் 295 பேருக்கு வழங்கப்பட்டது. உபகரணங்கள் பெறுவதற்கு 10 பேரும், 102 பேர் புதிய விண்ணப்பமும் முகாமில் அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் தலைமையிலான எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் முட நீக்க வல்லுனர் ‌ராமன், செயல் திறன் உதவியாளர் பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×