search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • 24 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது
    • திருச்சி மாவட்டத்தில் இன்று நடந்தது

    திருச்சி:

    தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதியில் 14 இடங்களிலும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தேவி பள்ளி, ஸ்ரீரங்கம் நடுநிலைப்பள்ளி, அரங்கநாயகி நடுநிலைப்பள்ளி, மேல சித்திரை வீதி ராஜன் பள்ளி, மேலூர் அய்யனார் பள்ளி, கிழக்கு ரங்கா பள்ளி, உறையூர் பாண்டமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், காந்திபுரம் தேவர் காலனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 12 இடங்களில் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.190 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14.40 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் மானாவாரி பகுதியில் விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற எதுவாக பயிர்க்கடன் வழங்கும் முகாம் வருகிற 23-ந் தேதி அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடைபெறுகிறது. கணினி சிட்டா நகல், பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, மத்திய கூட்டுறவு வங்கி சேமிப்பு கனாக்கு எண், ஆதார் அட்டை நகல், எம்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு கடன் மனு அளித்து பயனடையலாம்.

    மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து உரிய ஆவணங்களுடன் மனுவை அளித்து கடன் பெற்று பயனடையலாம். பயிர்க்கடன் வழங்கலில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் (9489927001) கடன் பிரிவு உதவி பொது மேலாளர் (9489327006), கடன் பிரிவு மேலாளர் (9489927177) என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    • பசு மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை சிறப்பு முகாம் நடந்தது
    • மணிகண்டம் ஒன்றியம் செங்குறிச்சியில் நடந்தது

    திருச்சி

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்டம் பொன்னணியாறு உபவடிநிலப்பகுதி திட்டத்தின்கீழ், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேக்குடி பஞ்சாயத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் மாடுகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமில் பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, தீவனப்புல் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 50 தாதுப்பு கட்டிகள் வழங்கப்பட்டு அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர் ஷீலா வழிகாட்டுதல்படி, ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணபதி பிரசாத் முகாமிற்கு தலைமை தாங்கி நடத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மேக்குடி பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ், துணைத்தலைவர் சேகர் மற்றும் ஊரக மறுவாழ்வுத்திட்ட பணியாளர் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    திருச்சி நோய் புலனாய்வுத்துறையின் சார்பில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சத்யா, சினை பிடிக்காத மாடுகளுக்கான ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றார். பாகனூர் கால்நடை மருந்தகத்தின் சார்பில் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர் இன்பசெல்வி, டாக்டர் சுப்பிரமணியன், கால்நடை ஆய்வாளர்கள் செல்வராணி, அன்னலெட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராணி, ஊர்தி ஓட்டுனர் செல்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.

    • ரத்ததான முகாம் நடைபெற்றது
    • உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப், உதிரம் நண்பர்கள் குழு ஆகியவை இணைந்து ரத்த தான முகாமினை நடத்தியது.

    முகாமிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையில் செவிலியர்கள் கொண்ட குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் 26 யூனிட் ரத்தம் பெறப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

    முகாமில் நகராட்சி கவுன்சிலர்கள் ஷாலினி, மணிவேல் மற்றும் நாரணாயசாமி, லயன்ஸ் கிளப் செயலாளர்கள் தமிழ்மாறன், தமிழ்செல்வன் , பொருளாளர் ராஜேஸ், உதிரம் நண்பர்கள் குழு செயலாளர் நாகராஜ், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நலசங்க செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த 274 மனுக்கள் பெற்றார். மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும்.

    தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனு தாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பாண்டிய ராஜன் வாரிசுதாரரான அவரது மனைவி பாண்டி மீனாவிற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.50 ஆயிரத்துக்கான காசோ லையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • சேலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • இதில் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்தினி நலதிட்டங்கள் வழங்கினார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாரமங்கலம் கிராம ஊராட்சியில் சேலம் ஆர்.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து துறைகளின் மூலம் மாரமங்கலம் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் எஸ்.டி. சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்திருந்த 10 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி சாதி சான்றிதழ் வழங்கினார். பின்னர் கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றார். மேலும் முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் காய்கறி வகைப்பாடு மற்றும் தானியங்களில் உள்ள சத்துக்கள் விளக்கும் வகையில் ஊட்டச்சத்து உணவுகள் கண்காட்சி வைத்திருந்தனர்.

    அதை ஆஎ.டி.ஓ. விஷ்ணுவர்த்தினி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதில் வைக்கப்பட்டிருந்த தானியங்கள் மற்றும் காய்கறிகளின் பயன்கள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

    இந்த முகாமில் மாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.

    திருப்பூர் :

    ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் அகில பாரதிய தெராபந்த் யுவக் பரிஷத் சார்பில் ரத்ததான முகாம் திருப்பூர் சூசையாபுரத்தில் உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தெராபந்த் ஜெயின் பவனில் நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆதார் மருத்துவமனை ரத்த வங்கி, ரேவதி மருத்துவமனை ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களுக்கு கொடுக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் தலைவர் சுமித் பண்டாரி, செயலாளர் அங்கித் போத்ரா, கன்வீனர் ஹேமந்த் ஜெயின், துணை கன்வீனர் அமன் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது.
    • 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகரில் 37-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் நடைபெறுகிறது. திருப்பூா் மாநகரில் 12 வயது முதல் 14 வயது வரையிலான 31,778 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரையிலான 42,300 இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்ட 8,67,420 போ் என மொத்தம் 9,41,498 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 8,14,972 பேருக்கு முதல் தவணையும், 6,28,984 பேருக்கு இரண்டாவது தவணையும், 61,987 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 1,26,526 பேருக்கு முதல் தவணையும், 1,85,988 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. ஆகவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் நிறைவடைந்த நபா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை(பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. ஆகவே, திருப்பூா் மாநகரில் உள்ள அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னாக்க வுண்டனூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது.
    • இதில் 102 கோரிக்கை மனுக்கள் வழங்கல்

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னாக்க வுண்டனூர் ஊராட்சி, ஜெஜெ நகர் காளியம்மன் கோவில் திடலில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு முகாம் நடைபெற்றது. சங்ககிரி ஆர்.டி.ஓ. சவும்யா தலைமை தாங்கினார். பிடிஓ முத்து முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில், வேளாண்மை துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை துறை, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மை துறை, முன்னோடி வங்கிகள் உள்ளிட்ட 16 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு நல திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், பொதுமக்கள் இலவச பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட 102 கோரிக்கை மனுக்களை ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.

    அந்த மனுக்களை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முகாமில் தாசில்தார் பானுமதி, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் தங்கமுத்து, சின்னாக் கவுண்டனுார் ஊராட்சி மன்ற தலைவர்(பொறுப்பு) சங்கீதா தனபால், தனி தாசில்தார் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வட்டார கல்வி அலுவலர் கோகிலா, கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர் அன்னக்கொடி மற்றும் சின்னாக்கவுண்டனுார் ஊராட்சி மன்ற கிளர்க் தமிழ்செல்வன் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார்.

    ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், முன்னிலையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மற்றும் கூடுதல் துணை ஆட்சியர் கீதாபிரியா தலைமை வகித்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது
    • தா.பழூரில் இன்று நடக்கிறது.

    அரியலூர்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தின் தொலை தூரத்தில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 5-ம் கட்டமாக தா.பழூர் குறுவட்டத்திற்கு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றும் (வியாழக்கிழமை), கீழப்பழுவூர் குறுவட்டத்திற்கு கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைப்பெறும். இம்முகாமில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். அந்த சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகன ங்கள் முகாமிற்கு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராள மானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

    இந்த மாதத்துடன் இலவசமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறை வடைகிறது. எனவே இன்று நடந்த சிறப்பு முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்.

    ×