search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • கரூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார்.

    கரூர்:

    கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட் வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, 40 வயதிற்கு மேற்பட்ட இளம் வக்கீல்கள் தங்கள் உடலை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உணவு, தூக்கம் எடுத்துக்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணை சேர்மன் வேலு கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வழக்கறிஞர் காமராஜ், கரூர் வக்கீல் சங்க செயலாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் சம்பத், கோபாலகிருஷ்ணன், சக்திவேல், பார்த்திபன், பாலாஜி காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தி லும் வேலைநாடும் இளை ஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ள லாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப் படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறலாம்.

    முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற

    21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலி க்கப்படும். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "Tamil Nadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழ ங்கப்ப டுகிறது. இந்த இணைய தளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவன ங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21-ந் தேதி நடக்கிறது.
    • 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவ னங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளை ஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவ னங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள த்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப் படத்துடன் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை)காலை 10 மணிக்கு மதுரை, புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது. மேற்கண்ட தகவல் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
    • உயர்தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது

    அரியலூர், ஏப்.18-

    அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழைய கட்டிட வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.இந்த கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வயிற்றுப் புண், தோல்நோய்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரக கற்கள், மாதவிடாய் கோளாறுகள், பொடுகு, சைனஸ், மூலம், ஆஸ்த்துமா, பௌத்திரம், வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சனை, கருப்பை சினைப்பைக்கட்டிகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயர்தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.முன்னதாக சித்த மருந்துகள் மற்றும் அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் சித்த மருந்தாக பயன்படுத்தப்படும் தாவர வகைகள் கண்காட்சியை பார்வையிட்டு அதன் சிறப்புகளை மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் விளக்கம் அளித்தார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் குழந்தைவேலு, உதவி சித்தமருத்துவ அலுவலர் குமரேசன், உட்பட சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மஹால் நூலக காட்சியரை, உலோக கற்சிற்ப காட்சியரை உள்பட 12 காட்சியரைகள் ஏற்படுத்தபட்டு உள்ளது.

    இது தவிர 7டி திரையரங்கம், பறவைகள் பூங்கா, குழந்தைகளை கவரும் ரயில், இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கூடத்தில் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மாணவர்களுக்கான ஒரு நாள் கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

    தஞ்சையில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.

    இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் 9842455765 மற்றும் 9443267422 என்ற எண்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதுதான் இந்த பயிற்சியை நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.
    • சொட்டு மருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கருப்பு கண்ணாடி ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

     காங்கயம்:

    திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், முத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட அரசு கண் மருத்துவர் குழுவினர் மூலம் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

    மேலும் முகாமில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக நாளையே அழைத்து செல்லப்பட்டு அங்கு உள்வி லென்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சொட்டு மருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கருப்பு கண்ணாடி ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே முகாமில் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி மற்றும் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • எஸ்.என்.கல்லூரியில் என்.எஸ்.எஸ்.முகாம் நடந்தது.
    • விஜயகுமார் வரவேற்று பேசினார்.

    மதுரை,

    மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் வலையங்குளம், குசவன்குண்டு மற்றும் சோளங்குருணி கிராமங்களில் நடைபெற்றது.

    முகாமின் தொடக்க விழாவில் திட்ட அலுவலர் விஜயகுமார் வரவேற்று பேசினார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார்.

    வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனசேகரன், சித்த மருத்துவர் லதா ராணி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, ரூட்செட் மைய இயக்குநர் சுந்தராச்சாரி, ஒருங்கிணைப்பாளர் கோகிலா, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கோபிநாத் பேசினர்.

    நிறைவு விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் கிராமங்களில் உள்ள ஊரணிகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன் முகாமிற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.

    • சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது
    • 34 மனுக்கள் பெறப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.
    • கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் குறித்து சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரோட்டரி சங்கம் மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கம் சார்பில் நகராட்சி துப்புரவு பணி, தூய்மை பணி ஊழியர்களுக்கு இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார்.

    செயலாளர் நவநீதகண்ணன், பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.பி. எப். தொழிற்சங்க நகராட்சி பிரிவு தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமை நகர மன்ற தலைவர் செல்வராஜ் துவைக்கி வைத்தார்.

    முகாமில் புதிய நவீன கருவிகள் கொண்டு நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

    இதில் புரை கண், கண் மறைவு, கண் பார்வை குறைவு உள்ளிட்டவைகள் சோதனை செய்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுகிறது. அந்த முகாமிலேயே மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

    இதில் ஏரானவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் தேர்வு முருகேசன் சாசன தலைவர் ராமன் மற்றும் ஆர்.கே.சேகர், தனபால், குஷிமாதவன், தங்கதுரை ராஜ், இளங்கோ, உள்ளிட்ட உறுப்பினர்கள், திமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.
    • 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், கோவில்பத்து ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரதிவிராஜ், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், துணை மேலாளர் தியாகராஜன், தர கட்டுப்பாடு மேலாளர் ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சிறப்பு, தனி தாசில்தார்கள் பங்கேற்பு
    • மாற்று திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது

    கரூர்,

    குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி தலைமை வகித்தார். சிறப்பு தாசில்தார் அருள், குளித்தலை, கிருஷ்ணரா யபுரம் தாசில்தார்கள் கலியமூர்த்தி, மோகன்ராஜ், தனி தாசில்தார்கள் வெங்கடேஷ், இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மறுவாழ்வு துறை அலுவலர் காமாட்சி, துறை சார்ந்த அரசு திட்டங்கள் குறித்து பேசினார். முகாமில் காது மிஷின், மூன்று சக்கர வாகனம், மொபைல்போன், பேட்டரி பைக், மூன்று சக்கர வீல், தையல் இயந்திரம், வங்கி கடன் உட்பட பல்வேறு உதவிகள் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.முகாமில் கண், காது, மூக்கு மருத்துவர், மன நல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். முன்பு பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிக ளுக்கு புதிய மருத்துவ அடையாள அட்டையை, ஆர்.டி.ஓ., புஷ்பதேவி வழங்கினார்.குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது
    • இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்குகிறார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்குகிறார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம் என்று கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×