search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    • போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .
    • போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    குழித்துறை, அக்.27-

    தக்கலை பனவிளை புல்லாணி விளையை சேர்ந்த வர் ஆகாஷ் செல்வன் (வயது 21). பெயிண்டர். இவர் வழக்கு ஒன்றில் கைதாகி கடந்த ஜூலை மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    வழக்கு

    இந்நிலையில் இவர் குலசேகரத்தை அடுத்த நாககோடு அருகே குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட ஆகாஷ் செல்வனையும் தேடி வருகின்றனர்.

    • 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
    • படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட  வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

    • சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை வெட்டியதில் படுகாயமடைந்தார்
    • சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகேமுன்வி ரோதம் காரணமாக ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு; படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவம னையில் அனுமதி

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அகிலா.

    இவரவது கணவர் சரவணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்றத் தலைவாரன இவருக்கும் அதே பகுதி திமுகவைச் சேர்ந்த ராமாயி, மணிக்கண்டன், சிவானந்தம், கரிகாலன் ஆகியோருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதலில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சூர்யா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மணிக்கண்டன் என்பவர் அரிவாளால் அவர்களை வெட்ட வந்துள்ளார். அவர்கள் தெருவுக்குள் ஓடிய நிலையில் அவர்களை ராமாயி, அவரது மகன் சிவானந்தம், உறவினர்களான மணிக்கண்டன், கரிகலாலன் ஆகியோர் வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர்.

    அப்போது சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை பிளேடு, கத்தி, அரிவாள் கொண்டு வெட்டியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வலிவலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வலிவலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    • அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தியூர் வனப் பகுதியில் சிலர் சூதாட்ட த்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்ட தும் சூதாட்டத்தில் ஈடுப ட்டவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். போலீசார் அங்கிருந்த ரூ.1300 பணம் மற்றும் 4 மொபட், 3 மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 7 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் தியாகதுருகம் சந்தை மேட்டு பகுதியை சேர்ந்த சரவணன், நரிக்குறவர் தெருவை சேர்ந்த காமராஜ், கஸ்தூரிபாய் நகர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், சிக்காடு கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை, பிரதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், அந்தியூர் கிராம த்தைச் சார்ந்த ஆலன் மற்றும் சிலர் தப்பி ஓடியது தெரியவந்தது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கபிலன் என்பவர் பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார்.
    • ஆத்திரமடைந்த கபிலன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளார்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றுபவர் வீரமாங்குடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 50).

    இவரிடம் சம்பவத்தன்று இலுப்பக்கோரையை சேர்ந்த ஜோதி மகன் கபிலன் (25) என்பவர் பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார்.

    அதற்கு கிருஷ்ணமூர்த்தி மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில், ஆத்திரமடைந்த கபிலன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலனை கைது ெசய்தனர்.

    • வேம்பரசி என்பவர் இரவில் வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.
    • மர்ம நபர்களால் இருவர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    நீடாமங்கலம்:-

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்திற்குட்பட்ட தேப்பெருமாநல்லுரில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மனைவி வேம்பரசி (வயது 49) என்பவர் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்ெதாடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் முத்து (வயது 38). சம்பவத்தன்று இவர் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த அவர்கள் பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் பலாதாரம் செய்த முத்துவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் முத்துவை சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டி அருகே காதலியின் போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேல்பாதி, மாரியம்மன் கோவில் தெருசேர்ந்தவர் சிவனேசன். இவரது மகள்சிம்னி துஷிதா (22) இவர் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் முத்தமிழன் என்பவரை காதலித்து வந்தார். இவரது நடத்தை சரியில்லாமல் தற்போது பிரிந்து விட்டார். இந்தநிலையில் முத்த மிழன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதி வேற்றம்செய்துள்ளார் இது பற்றி பண்ருட்டிமகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்துமுத்தமிழனைகைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.
    • பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் கீழையூர் பகுதி மேலப்பிடாகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 37) பெயிண்டர்.இவர் கடந்த 10ந்தேதி வாழக்க ரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியு ள்ளார். அப்போதுதிருக்கு வளையிலிருந்து மேலப்பி டாகை செல்லக்கூ டிய சாலையில் மீனம்பநல்லூர் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதியது.இதல் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மணிமாறன் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை செய்து வருகின்றனர். இறந்த மணிமாறனுக்கு மாதவி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    • காருக்குள் பார்த்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்‌.
    • போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி மணிகண்டன் காருக்குள்ளே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

     தஞ்சாவூர்:

    மதுரை மாவட்டம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 36 ). இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு கோவைக்கு சென்றார். நேற்று இரவு தஞ்சைக்கு வந்த அவர் தனது காரை எடுக்க முயன்றார்.

    அப்போது கார் கதவு திறந்திருந்தது. காருக்குள் பார்த்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்‌.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டபோது இறந்து கிடந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகி இருந்தது.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசார ணையில் காருக்குள் பிணமாகக் கிடந்தவர் தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பது தெரிய வந்தது.

    அவர் பாப்பாநாட்டில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் சரியாக பூட்டப்படாத அருண்குமாரின் காரின் கதவை திறந்து உள்ளே சென்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அப்போது கார் உள் பக்கமாக பூட்டப்பட்டு விட்டது.

    இதனை அறியாத மணிகண்டன் காரு க்குள்ளே இருந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி மணிகண்டன் காருக்குள்ளே இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

    அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகியது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இருந்தாலும் மணிகண்டன் மூச்சு திணறி தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகும், முழுமையான விசாரணைக்கு பிறகும் மணிகண்டன் மரணத்தின் உண்மை தன்மை தெரிய வரும்.

    • ஸ்ரீராம் என்பவர் வழிமறித்து நிறுத்தி ரவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோ ட்டை கீழையூர் முக்கரைத் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55) எலக்ட்ரீசியன்.

    சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து கடைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கட்டுமானம் அருகே சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் ( 22) என்பவர் வழிமறித்து நிறுத்தி ரவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினார்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த ரவி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×