search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குபதிவு"

    • நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் திடீர்குப்பம் எம்.ஜி.ஆர் நகர் சேர்ந்தவர் சூர்யா (வயது 29). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஸ்வீட் கடையில் செய்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் சூர்யா தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் திடீரென்று சூர்யா கழுத்தில் இருந்த வெள்ளி செயின் மற்றும் கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்தனர். அப்போது சூர்யா மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 3 பேரில் ஒருவரை ஆடை பிடித்து இழுத்த போது 3 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மூன்று வாலிபர்களையும் பிடித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 வாலிபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி யதில் கடலூர் தேவனா ம்பட்டினம் சேர்ந்தவர் கோகுல் (வயது 19), ஆகாஷ் (வயது 21), மணிகண்டன் (வயது 19) என தெரியவந்தது. மேலும் இந்த வாலிபர்கள் வேறு எங்கேனும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? அல்லது வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளதா? என்பதை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

    • 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
    • கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாண்டி யன்குப்பம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்தியுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த கபாடி போட்டி நடத்துவதற்கு காரணமாக இருந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார்.
    • அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    புதுவை மாநிலம் உழவர்கரை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் பலராமன். அவரது மனைவி கவிதா (வயது 45). இவர் மயிலாடுதுறையில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிதம்பரம் பஸ் நிலையம் வந்து இறங்கி னார். அப்போது தனது டிராவல் பேக்கை பஸ்சில் வந்த போது ஒரு பெண்ணிடம் கொடுத்தார். அந்த டிராவல் பேக்கில் 10பவுன் நகை, பட்டுபுடவை ஆகியவை இருந்தது. திடீரென அந்த பெண் டிராவல் பேக்குடன் மாய மானார். அதிர்ச்சியடைந்த கவிதா உடனே சிதம்பரம் பஸ் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தேடி னார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • தன் நண்பர் பிரபாகரணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊரான ஆக்கூர் சென்று கொண்டிருந்தார்.
    • கதிராமங்கலம் அருகே மகாராஜபுரம் பஸ் நிலையம் அருகில் எதிரே வந்த மீன்பாடி வாகனம் மோதி படுகாயம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் வ.ஊ.சி. நகரை சேர்ந்தவர் மாரிஸ் (வயது 20). இவர் செம்பனார்கோவிலில் இருந்து அய்யம்பேட்டைக்கு சென்று விட்டு தன் நண்பர் பிரபாகரணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தன் சொந்த ஊரான ஆக்கூர் சென்று கொண்டிருந்தார்.

    அப் போது கதிராமங்கலம் அருகே மகாராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் எதிரே வந்த மீன்பாடி வாகனம் மோதி படுகாயம் அடைந்தனர். அதில் சம்பவ இடத்திலேயே மாரிஸ்உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் பிரபாகரனை மீட்டுஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்பிசை பலனின்றி இறந்தார். இது குறித்து கண்ணனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
    • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.

    நீடாமங்கலம்:

    ஆடுதுறை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி (வயது 24). இத்தம்பதிகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வசித்து வந்த நிலையில் ராஜகுரு அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இந்துமதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு ராஜகுரு அழைத்து வந்துள்ளார். இதனிடையே இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமு தல் செய்தனர்.

    திருக்கண்ணபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆதலையூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற கீழசன்னாநல்லூர் பாப்பா குளத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது 28) அந்த பகுதியில் சாராயம் விற்றது தெரியவந்தது.

    மேலும் இவர் காரை க்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்துவருவது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • குளச்சல் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு தோட்டியோடு பகுதியில் நடத்திய தீவிர வாகன சோதனையில் நடவடிக்கை.
    • டிரைவர் மீது வழக்குபதிவு

    கன்னியாகுமரி:

    குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு தோட்டியோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மரம் லோடு ஏற்றி வந்த ஒரு டிம்போ சாலையில் நிலை தடுமாறி வந்தது. போலீசார் உடனே டிம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ஓட்டுனர் குமார் (வயது 46) மது அருந்திவிட்டு டிம்போ ஓட்டி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் டிம்போவை போலீஸ் நிலையம் கொண்டு வந்து டிரைவர் மீது வழக்குபதிவுசெய்தனர்.

    ×