search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி காந்தி மைதானத்தில் பொரங்காடு படுகர் நல சங்க சார்பில் படுகர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் சுண்டட்டி அணியும், உல்லாடா அணியும் விளையாடியது.

    இதில் உல்லாடா அணி 1 கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து சுண்டட்டி அணி 5 கோல் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து அன்ணிகொரை அணியும், அரக்கம்பை அணியும் விளையாடியது. இதில் அன்ணிகொரை அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இளித்தொரை அணியும், கடைகம்பட்டி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்காததால் டைப் பிரேக்கர் முறையில் இளித்தொரை அணி வெற்றி பெற்றது.

    முன்னதாக பொரங்காடு படுகர் நல சங்க நிர்வாகிகள் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் கால்பந்து ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650)
    • கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் காலாண்டு கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தோட்ட நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்கி பணியில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதன்மையான பணியாகும். கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண் (180042 52650) என்ற எண்ணை அதிக அளவு பொதுமக்கள் கூடுமிடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் இருப்பின் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான நலவாரியங்களின் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் விபத்தில் உயிரிழந்ததால் அவருக்கு உதவிதொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

    கூட்டத்தில் தொழிலாளர் உதவி கமிஷனர் அமலாக்கம், சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின், தொழிற்சங்க பிரநிதிகள், அரசு சார்பற்ற உறுப்பினர்கள் (ஆதிதி ராவிடர், பழங்குடியினர் இன உறுப்பினர்கள்) மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் நாவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள கெரடா மற்றும் கோத்தகிரி பஸ் நிலையத்தில் கஞ்சா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முன்னெடுக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.

    கஞ்சா போதை குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இதன் அடிப்படையில் டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி நகர் பகுதி மற்றும் கெரடா கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், யாதவ் கிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி போலீசார்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
    • 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஊட்டி,

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.85 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.31 சதவீதம் அதிகம்.

    தமிழகம் முழுவதும் பிளஸ் -2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்ச்சி விகிதத்தில் நீலகிரி மாவட்டம் 93.85 சதவீதம் பெற்று, மாநில அளவில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 3246 மாணவர்கள், 3743 மாணவியர்கள் என மொத்தம் 6989 பேர் எழுதினர்.

    இதில், 2945 மாணவர்கள், 3614 மாணவிகள் என மொத்தம் 6559 பேர் தேர்ச்சிடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.85 சதவீதம் ஆகும். மாணவர்கள் 90.73 சதவீதமும், மாணவிகள் 96.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட 1.31 சதவீத தேர்ச்சி அதிகம்.

    மாவட்டத்திலுள்ள 85 மேல்நிலைப் பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அரசு மாதிரி பள்ளி, கக்குச்சி, மேலூர் ஒசஹட்டி, சோலூர், தாவணி, எமரால்டு ஆகிய 6 அரசு பள்ளிகள், குஞ்சப்பணை பழங்குடியின நலப்பள்ளியும் அடங்கும். குஞ்சப்பணை பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளியில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள், 19 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் பலர் தங்களின் பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண்களை பார்த்து, ஆசிரியர்களிடம் ஆசி வாங்கி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர்.
    • வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு மசினகுடி சாலையில் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

    மசினகுடி, தெப்பகாடு சாலை, மாயார் சாலை, கூடலூர், மைசூர் சாலைகளில் பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் மசினகுடி, தெப்பகாடு நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் 10 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    மேலும் அந்த சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆவதையொட்டி சாதனை விளக்க பொதுக்கூட்டம் குன்னூரில் நடைபெற்றது.
    • 10 ஏக்கர் பரப்பளவில் இந்த மினி டைட்டடல் பார்க் அமைய உள்ளது.

    குன்னூர்,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆவதையொட்டி சாதனை விளக்க பொதுக்கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறைக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனை யின் படி ரூ.100 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், திட்ட பணிகளையும் நீலகிரி மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்த இருக்கின்றோம்.

    நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் பணியாற்றி வந்த தொழிற்சாலை பயனற்று இருக்கும் நிலையில் அந்தப் பகுதியில் ஒரு டைட்டல் பார்க் அமைக்கப்படும். இது 1000 பேருக்கு வேலைகள் கிடைக்கும். சுமார் ரூ.100 கோடி செலவில் இந்த மினி டைட்டடல் பார்க் அமைந்தால் 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த மினி டைட்டடல் பார்க் அமைய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தலைமை பேச்சாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், நகர மன்ற துணைத் தலைவரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு துறை துணை செயலாளருமான வாசிம்ராஜா, நகரப் பொருளாளர் ஜெகநாத், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, குன்னூர் நகர மன்ற உறுப்பினர்கள், மாணவர் அணியினர், மகளிர் அணியினர். கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும்.

    நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடை மழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், வழக்கத்தை விட கடந்தாண்டு 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

    இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில், மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய், உள்ளாட்சி, காவல், தீய ணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் உள்ளிட்ட துறை களைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளன.

    அனைத்து வட்டங்க ளிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 150 பேரிடர் கால நண்பர்களுக்கு பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்ட ணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    அதன்படி, உதகை கோட்டம் - 0423-2445577, குன்னூர் கோட்டம் - 0423-2206002, கூடலூர் கோட்டம் - 04262-261295, உதகை வட்டம் - 0423-2442433, குன்னூர் வட்டம் - 0423-2206102, கோத்தகிரி வட்டம் - 04266-271718, குந்தா வட்டம் - 0423-2508123, கூடலூர் வட்டம் - 04262-261252, பந்தலூர் வட்டம் - 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.தென்மே ற்கு பருவமழையை எதிர்கொ ள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்- எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தனர்
    • மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறுஅமைப்பினர், அரசு துறையினர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உருவாகி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற நீலகிரி நடைபயணம் 2023-ஐ சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி அருகில் தொடங்கிய நடை பயணம் பிங்கர் போஸ்ட் , ஹில்பங்க்,மாவட்ட கலெக்டர் அலுவலக ம்,சேரி்ங்கிராஸ் வழியாக எச்.ஏ.டி.பி மைதானத்தில் முடிவடைந்தது

    இதில் வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சிணி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகரட்சி தலைவர் வாணிஸ்வரி, துணை தலைவரும், திமுக மாவட்ட துணை செயலாளருமான ரவிக்குமார், தி.மு.க. பொறியாளர் அணி மாநில துணை செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளருமான பரமேஸ்குமார் உள்ளிட்டவரகள் கலந்து கொண்டனர்

    இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறுஅமைப்பினர், அரசு துறையினர் கலந்து கொண்டனர்

    • அணைகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
    • சீரமைப்பு பணிக்காக காவிரி, பரம்பிக்குளம், ஆழியாறு, வைகை உள்பட 17 அணைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    ஊட்டி,

    பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட 2021-ம் ஆண்டு அணை பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அணைகளை பாதுகாப்பது, பராமரிப்பது, கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டது.

    இதன்படி தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள 17 அணைகளை சீரமைக்க மாநில அரசு ரூ.34.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதற்கான அரசாணை வெளியானவுடன், சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காவிரி, பரம்பிக்குளம், ஆழியாறு, வைகை உள்பட 17 அணைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை நீர்வளத்துறை அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் 3 அணைகளை நேரில் பார்வையி ட்டு ஆய்வு செய்தனர். அப்போது அணைகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், தண்ணீர் அதிக அளவில் வீணானது. இதைத்தொடர்ந்து தற்போது அனைத்து பழைய அணைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் முதல்கட்டமாக 3 அணைகளில் ஆய்வு செய்து உள்ளோம். இதன் முடிவுகளை அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும். அதை பொறுத்து அணைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி அடைந்தனர்
    • குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில் இந்த சுகாதார சீர்கேடால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டி எச்.எம்.டி. சாலை மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் சந்திப்பு சாலைக்கு செல்வதற்கு, நகருக்குள் செல்லாமல் இந்த வழியாக சென்றால் சீக்கிரம் போகலாம் என்ற எண்ணத்தில் வரும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதேபோல் ரோஜா பூங்கா செல்லும் பயணிகளும் இந்த வழியாக சென்று அவதியின் உச்சத்தை அடைகின்றனர். ரோஜா பூங்கா சந்திப்பில் சாலையின் நடுவே பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்ததில் அதில் செடியை நட்டு வைத்து உள்ளனர்.

    எச்.எம்.டி சதுக்கத்தில் நொண்டிமேடு செல்லும் முகப்பு பகுதியில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர் கேடு காணப்படுகிறது. மேலும் துர் நாற்றம் வீசுகிறது.

    வாகனங்கள் செல்ல முடியாத அந்த சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர்.

    சிறுது தூரம் சென்றால் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில் இந்த சுகாதார சீர்கேடால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    மாத கணக்கில் இதே நிலை தொடர்கிறது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறிது தூரம் சென்றால் குளம் போல் நீர் தேங்கி வாகன ஓட்டிகளை பயமுறுத்துகிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரிய சாகசமே செய்யும் நிலை ஏற்படுகிறது.

    சிறிது தடுமாறினாலும் ஆபத்தில் முடியும் பயநிலை காணப்படுகிறது. கொஞ்சம் போனால் அங்கிருந்து குன்னூர் சாலை செல்லும் வரை சாலை பள்ள மேடாய் இருக்கிறது. மொத்தத்தில் ஊட்டி எச்.எம்.டி சாலையில் பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவமாய் அமைகிறது.

    • வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.
    • தடை செய்யப்பட்ட வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான கஞ்சா புழக்கம் இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொடர்ந்து புகார் வந்தவண்ணம் இருந்தது. கடந்த வாரம் ஊட்டி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தால் கஞ்சாவை மாவட்டத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்து வலுவான கோரிக்கை எழுந்தது.

    இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையிலான சிறப்பு போலீசார்கள் கஞ்சா வேட்டையில் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி கண்ணெரிமுக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமா ன்காண், முஜாஹிர், சரவ ணன், சிவமணிகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான் ஆகியோர்கள் மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் இருந்து சுமார் 4 அடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை கைப்பற்றினர்.

    பின்பு போலீசார் அவரது வீட்டில் மேலும் கஞ்சா செடிகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தபோது அவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பாறைகளை உடைக்கும் வெடிமருந்துகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவரிடமிருந்து சுமார் 125 கிராம் கொண்ட 5 வெடிமருந்து நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், மருந்துகளை வெடிக்க வைக்கும் ஒயர்கள் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூடலூர்

    கேத்தி, மசினகுடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் ஆதிவாசி மக்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கினர். ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு  தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். கேத்தி, உல்லாடா, அதிகரட்டி, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது:- மத்திய அரசு தமிழகத்துக்கு மண் எண்ணை அளவை குறைத்து வழங்கி உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய மண் என்ணை அளவு குறைந்துள்ளது. 2007-ம்ஆண்டு முன்னாள் முதல் - அமைச்சர் மு. கருணாநிதியால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையிலும் தரமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய அரசு மண்எண்ணை வழங்குகிறது. அதை தமிழக அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்குகிறது. கூடலூர் பகுதியில் மின்சார விநியோகப் பிரச்சினை உள்ளதால் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ திராவிட மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மிர்ஹாசன் முசாபர் இம்தியாஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    ×