search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா்.
    • பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

    ஊட்டி,

    நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா். நாடுகாணி பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற ஆ.ராசா, நெல்லியாளம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.

    இதையடுத்து புளியம்பாறை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

    பின்னா் புளியம்பாறை கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த கல்யாணி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினாா்.

    தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மஞ்சமூலா கிராமத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    பின்னா் பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து கம்பாடி கிராமம், ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றாா்.

    நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி, பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலாளா் பரமேஸ் குமாா் உள்பட நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

    • நண்பர்கள் 2 பேரும் மதுகுடித்து விட்டு வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர்கள் லோகேஷ் (வயது 33), பிரசாந்த் (23). இவர்கள் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பீர் பாட்டிaலால் பிரசாந்தை தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பிரசாந்த் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லோகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டின் அருகில் மரத்தின் மீது வலையை போட்டு வைத்திருந்தனர்
    • நீண்ட நேரம் போராடியும், பாம்பால் வலையை விட்டு வெளியே வர முடியவில்லை

    குன்னூர்,

    குன்னூர் டானிக் பகுதியில் ஒரு வீட்டின் அருகில் மரத்தின் மீது வலையை போட்டு வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அந்த வலையில் சாரைப்பாம்பு சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் போராடியும், அந்த பாம்பால் வலையை விட்டு வெளியே வர முடியவில்லை. இதையடுத்து பாம்பு மயங்கிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் யஸ்வந்த் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாம்பை லாவகமாக மீட்டனர். பின்னர் சாரைப் பாம்பை அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். எனவே, தேவையில்லாத பொருட்களை மரங்களில் வைக்க வேண்டாம். அது பறவைகள், சில உயிரினங்களுக்கு ஆபத்தாக அமையும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.
    • தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் மேடநாடு என்ற இடத்தில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது.

    சிவக்குமார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மருமகன் ஆவார்.

    இந்த நிலையில் இவரது தோட்டத்திற்கு சாலை இணைப்ைப ஏற்படுத்தும் வகையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 2 கி.மீ தூர தொலைவுக்கு சாலை பணி நடந்தது.

    இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கடந்த 11-ந்தேதி அங்கு ஆய்வு செய்து பணியை நிறுத்தினர்.

    மேலும் தோட்ட மேலாளர் பாலமுருகன், கனரக வாகன டிரைவர்கள் உமர் பாரூக், பங்கஜ்குமார் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்கிருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து தோட்ட உரிமையாளரான சிவக்குமாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. விதிகளை மீறி காப்புக்காட்டில் சாலை அமைத்ததாக ஏற்கனவே 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தோட்ட உரிமையாளரும், அமைச்சரின் மருமகனுமான சிவக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, மேடநாடு காப்புக்காட்டில் விதிகளை மீறி சாலை அமைத்ததற்காக தோட்ட உரிமையாளரான சிவக்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சிவக்குமாரை முதல் குற்றவாளியாக சேர்த்து ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    • தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.
    • தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கரக்கோடு மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.

    அப்போது எதிர் பாராதவிதமாக குட்டி பாறை இடுக்கில் சிக்கி கொண்டது. இதனை கண்ட தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி குட்டியை மீட்டு தாய் கரடியுடன் சேர்த்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாய்கரடியின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.

    • ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நீலகிரியில் உள்ள காவலர் சிறார் மன்றத்தில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறுவிசாரணை நடத்தப்பட்டது.

    பெட்டிசன் மேளாவில் நிலவையில் இருந்த குடும்ப பிரச்சினை, பண பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக உள்ள மனுக்கள் மீது மறு விசாரணை செய்து தீர்வு காண நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் நடவடிக்கை மேற்கொண்டார்.

    மேலும் பெட்டிசன் மேளாவுக்கு வந்த கணவன், மனைவி 2 பேருக்கும் அறிவுரைகளை வழங்கி, அவர்களுக்கிடையேயோன பிரச்சினையும் தீர்த்து வைக்கப்பட்டது.இந்த பெட்டிசன் மேளாவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

    குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன், தம்பி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், நாம் பிறப்பது ஒரு முறை, இறப்பது ஒரு முறை தான்.

    வாழ்வது ஒரு முறை தான். நாம் இறந்தால் எதையும் கொண்டு போவது இல்லை. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. ஒருவ ருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கினர்.

    அவரின் அறிவுரையை அடுத்து அண்ணன் தம்பி 2 பேரும் சேர்ந்து கொண்ட னர். வரும் போது தனித்தனியாக வந்தவர்கள், போகும் போது அண்ணன், தம்பி 2 பேரும் ஒரே காரில் ஏறி சென்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தனது அன்பால் பொதுமக்களை அரவணைத்து அறிவுரைகளை கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரனை பெட்டிசன் மேளாவுக்கு வந்த மக்கள் பாராட்டினர்.

    • நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    ஊட்டி,

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளை போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த 17-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ''அரசு பள்ளி களைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 413 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இதுதவிர ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட நகராட்சியில் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் உள்ளன.

    நீலகிரி மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டது. ஊட்டி ஏ.டி.சி பகுதியில் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, இந்த வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சர்வ சிக்ச அபியான் திட்ட உதவி அலுவலர் அர்ஜூனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், பிரமோத், சுஜித், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு வாகனம் இம்மாத இறுதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    விழிப்புணர்வு வாகனம் மூலம் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    அரசு பள்ளிகளில் ஆடல், பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக்கொள் ளும் எண்ணும் எழுத்தும் திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் மாநில அளவிலான கலை திருவிழா, சிறார் திரைப்பட விழா, இலக்கிய திருவிழா, விளை யாட்டுப்போட்டிகள், வானவில் மன்ற போட்டி கள், வினாடி-வினா மூலம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இல்லம் தேடி கல்வித் திட்டம், வானவில் மன்றம், தேன்சிட்டு, புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1000 கல்வி உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள், காலை உணவு திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்படும்.இந்த பிரசாரத்தின் முக்கிய நோக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதே ஆகும். எனவே பொதுமக்கள் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்துபயன் பெறலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் ஊட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷீலா, ஆசிரியர் பயிற்றுநர்கள் எழிலரசன், விஜயராஜ், ஜமுனா ராணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன் மற்றும் ஜெகதீஸ்குமார் மற்றும் இல்லம் தேடி கல்வியின் மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பிரமோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நாகராஜ் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் ஊட்டியில் இருந்து அணிக்கொரை செல்வதற்காக மார்லிமந்து செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் நாகராஜ் காயமடைந்தார். பின்னர் இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஸ்கூட்டியில் வந்த பெண் உள்பட 3 பேர், நாகராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து நாகராஜ் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகராஜை தாக்கியது கடநாட்டை சேர்ந்த மணிகண்டன் (29), ஊட்டி பசுவையா நகரை சேர்ந்த சத்தியவாணி, விஷ்ணு என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிவதும், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது
    • காருக்குள் சிக்கி இருந்த 4 வாலிபர்களை மீட்டனர்.

    கூடலூர்,

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சமவெளி பகுதியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் முதுமலை தெப்பக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக சென்ற வாகன டிரைவர்கள் காருக்குள் சிக்கி இருந்த 4 வாலிபர்களை மீட்டனர். அவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த மசினகுடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது.

    • பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
    • சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன.

    தற்போது சீசன் காரணமாக மரங்களில் பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.

    அவை அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன.

    எனவே கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. இதேபோல பழங்குடியின மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

    பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாகச் செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோர கிராமங்கள் மட்டுமின்றி காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக பலா மரங்கள் இல்லாத கொணவக்கரை, பர்ன்சைடு, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் உலா வந்த வண்ணம் உள்ளது.

    ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆ.ராசா எம்.பி. மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து அள்ளூா்வயல் பகுதிக்குச் சென்ற அவா், யானைக் தாக்கி உயிரிழந்த பழங்குடியின முதியவா் கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் சொந்த நிதியை வழங்கினாா்.

    செம்பாலா, நந்தட்டி, சளிவயல் மற்றும் ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    அவருடன் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில பொறியாளா் அணி துணை செயலாளா் பரமேஸ்குமாா், நகரச் செயலாளா் இளஞ்செழியன், தொ.மு.ச மண்டல பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

    • கட்டிலில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 73). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. சிதம்பரம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை சிதம்பரத்தை பார்க்க அவரது மகள் வந்தார். அப்போது கட்டிலில் படுத்த நிலையில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த கோத்தகிரி போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    சிதம்பரம் கட்டில் அருகே தீப்பற்ற வைத்து குளிர்காய்வது வழக்கம். அதேபோல் குளிர் காய தீ மூட்டியபோது விபத்து ஏற்பட்டு அவர் பலியாகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    ×