search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் 787 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற குமார் கூறியதாவது:-

    என் பெயர் குமார் (வயது 24). என் தகப்பனார் பெயர் தயாளன், நாங்கள் கேத்தி பாலாடா அருகே வசித்து வருகிறோம். நான் 05.05.2023 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    உடனே என்னை ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 நேரம் திட்டத்தின் கீழ் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். இதுபோன்ற திட்டத்தினை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

    இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற அருண் பிரசாத் கூறியதாவது:-

    என் பெயர். அருண் பிரசாத் எனக்கு 30 வயதாகிறது. என் தகப்பனார் பெயர் செல்வராஜ். நான் 16.04.2023 அன்று, கல்லட்டி அருகே உள்ள பைசன் வியூ பாயிண்டில் எனது நான்கு சக்கர வாகனத்தில் சென்ற போது திடீரெனெ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நான் காயம் அடைந்தேன்.

    உடனே ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் போதிய சிகிச்சை அளிக்கப் பட்டது.

    தற்போது சிகிச்சைக்கு பின் நான் நலமாக உள்ளேன். திடீரென ஏற்படும் விபத்துக்களை சாதாரணமாக என்னாமல் உயிர் சேதத்தினை தவிர்க்கும் வகையில், உயிர்காக்கும் நோக்கத்தில் இதுபோன்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போதைய காலத்தில் வாகனம் இல்லாமல் பயணிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    • தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    • ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    இது 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர்அம்ரித் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவ செடிகள் வளர்ப்புக்காக, ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. இதனை கல்லூரி பேராசிரியர்கள் சண்முகம், ராமு ஆகியோர் பெற்று கொண்டனர்.

    • முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது.
    • கணக்கெடுப்பு பணி வருகிற 28-ந்தேதி வரை நடக்கும்.

    ஊட்டி,

    தமிழகத்தில் உள்ள சரணாலயங்களில் குறிப்பிடத்தக்கது முதுமலை புலிகள் சரணாலயம். முதுமலை புலிகள் சரணாலயம், 124 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, வரையாடு, யானை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பாக வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம். இதற்காக 100-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் தரப்பட்டு உள்ளன.

    முதுமலை புலிகள் சரணாலயத்தில் இன்று காலை முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அப்போது வனவிலங்குகளின் எச்சம், நகக்கீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு அமையும் என்று தெரிகிறது.

    இதுதொடர்பாக முதுமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதுலையில் பருவமழைக்கு முன்பான வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளது. இது வருகிற 28-ந்தேதி வரை நடக்கும். முதுமலை சரணாலயத்தில் பருவமழைக்கு முன்பான கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு, இதற்கான அறிக்கை தேசிய புலிகள் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளனர்.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது.
    • திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

    ஊட்டி,

    ஊட்டி லாரன்ஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் புதியன விரும்பு 2023 என்ற தலைப்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறை இசையுடன் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்த பயிற்சி முகாமில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கென தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைகள், இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட 15 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், இலக்கிய ஆளுமை வாதிகளை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    பின்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 11 லட்சம் மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காதர்லா உஷா, கலெக்டர் எஸ்.பி அம்ரித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்துறையினா் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
    • மான் அடா்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் அக்ரஹாரம் பகுதிக்கு ஒரு காட்டு மான் வந்தது. இதனை பார்த்த நாய்கள் துரத்தி சென்று தாக்கின.

    இதில் அந்த மான் படுகாயம் அடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினா், ஈட்டிமூலை பகுதியில் மானை மீட்டு வனத்துறை வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பிறகு அந்த மான் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக வனச்சரக அலுவலா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

    • தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

    முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    அப்போது அம்மனுக்கு பூச்சாட்டுதல், அபிஷேகம்-அலங்காரம், மாவிளக்கு பூஜை மற்றும் கரக ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து. பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரவேல், இளங்கோ, ராமமூர்த்தி, முத்துசாமி, ராமசாமி, அமிர்தலிங்கம், சுப்பிரமணி, பாலு ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
    • சைபர் கிரமை் போலீசார் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாட்டு கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், சிரிப்பு பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டது.

    இதன் ஒருபகுதியாக அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் இசை நாடகம் நேற்று நடந்தது. அப்போது மாணவ- மாணவிகள் பல்வேறு கருவிகளை ராகத்துடன் இசைத்தபடி, கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள். இது சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    ஊட்டி மலர் கண்காட்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மத்தியில் சைபர் கிரமை் போலீசார் ஆன்லைன் மோசடி, ஆபத்தான கடன் செயலிகள், வேலை வாய்ப்பு என்ற பெயரில் வரும் ஆன்லைன் பணமோசடிகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    அப்போது செல்போன்களை கவனமாக கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பொறுப்பாளர் அக்கிம்பாபு புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குந்தா மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அக்கிம்பாபு பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    அதிமுக குந்தா மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கிம்பாபு நியமிக்கபட்டு உள்ளார்.

    அவர் பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து நிர்வாகிகளுடன் ஆலோசணை மேற்கொண்டு பாசறை மகளிர் அணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி வைத்தார்

    உடன் மேற்கு ஒன்றிய செயலாளரா சக்கஸ்சந்திரன் ,உதகை நகர பாசறை துணை செயலாளர் இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

    • நந்தன் நீலகேணி பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்,
    • ஆதாா் மூலம் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி 18 லட்சம் பரிவா்த்தனைகள் நடக்கின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியின் 165-ஆவது நிறுவனா் தின விழா கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் அா்ஜுன் சரண் தேவ் ஆனந்த் கட்டளையின் அணிவகுப்பு நடைபெற்றது.

    இதில், இன்போசிஸ் மற்றும் முன்னாள் ஆதாா் தலைவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான நந்தன் நீலகேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

    தொடா்ந்து, பல்வேறு திறன்களில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு கேடயங்கள், பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

    பின்னா் அவா் பேசியதாவது:-

    மக்கள் தொகையில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனாலும், நமது நாட்டில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்குச் செல்ல வேண்டிய பாதை சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

    அதில் தொழில்நுட்ப வளா்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கிருந்து வரக்கூடிய அந்நிய செலாவாணி அதிகரிக்கிறது.

    2016-ல் இந்தியாவில் ஆயிரம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது 90 ஆயிரம் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.

    ஆதாா் மூலம் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினசரி 18 லட்சம் பரிவா்த்தனைகள் நடக்கின்றன. தொழில், கல்வி, விவசாயம், சுகாதாரத்தில் இந்தியா வளா்ந்து வருகிறது. புவிசாா் அரசியல் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க அதிக ஆா்வம் காட்டுகின்றன.

    ஆப்பிள் நிறுவன உதிரிபாகங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

    நுண்ணறிவு திட்டம் வளா்ந்து வருகிறது. இதற்கு ஏற்றாா்போல மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி மைதானத்தில் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரபாகரன் செய்திருந்தாா். விழாவில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த முன்னாள் மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    • சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா்.
    • இறந்தது 1½ வயதுடைய பெண் மான் என தெரிய வந்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், பந்தலூா் வனச்சரகத்தில் உள்ள தேவாலா-கூடலூா் செல்லும் நெடுஞ்சாலையில் கடமான் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினா் மானின் சடலத்தை பாா்வையிட்டனா். பின்னா் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், மானை பிரேதப் பரிசோதனை செய்தாா்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்தது 1½ வயதுடைய பெண் மான் எனவும், சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்ததாகவும் தெரிவித்தனா்.

    பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-ஊட்டி செல்லும் பிரதான சாலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தினமும் சிறப்பு பூைஜகள் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.

    பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    • குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

    ஊட்டி:

    குன்னூர் சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களை தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேயிலை விற்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியை குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து தேயிலை கண்காட்சியை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை. இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடா்ந்து, தமிழக அரசு தேயிலை தோட்டக் கழக (டேன் டீ) வளாகத்தில் தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறையினருடன் நடைபெற்ற மனித சங்கலி விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாா்.

    இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித், தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் முத்து குமாா், மலைப் பகுதி சிறப்பு திட்ட அதிகாரி ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×