search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    குன்னூர்,

    குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது. தேர்த்திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது.

    குன்னூரில் அனைத்து மதத்தினரும் இணைந்து நடத்தக்கூடிய தேர் திருவிழா இதுவாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • ஆலோசனை கூட்டம் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.

    ஊட்டி,

    ஊட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார்.

    மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர்கள் துரை, பில்லன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ். பாபு, கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழுவினர் விவரங்களையும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளையும் மாவட்ட செயலாளர் முபாரக் ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் ஊட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சாகுல் அமீது, ஈஸ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் சத்யநாதன், முத்து, ஈஸ்வரன், சந்திரன், ராதாகிருஷ்ணன், நேரு, உதகை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தமிழ்வானி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், உமர், சண்முகம், கீழ்குந்தா பேரூராட்சி உறுப்பினர்கள் சண்முகம், மாடாகண்ணு, சாரதா, தீபா, காஞ்சனா, நாகம்மா, மாலினி, பிக்கட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் சாந்தி, நித்யா, சிவகாமி, லட்சுமி, கட்சி நிர்வாகிகள் மனோகரன், சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

    • கடந்த வாரம் கோவில் கட்டிட பணி நிறைவடைந்தது.
    • பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காம்பைக்கடை ஹாப்பிவேலி பகுதியில் உள்ள பால் முனிஸ்வரன் கோவிலின் கட்டிட பணி கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் கோவில் கட்டிட பணி நிறைவடைந்தது.

    இதனை தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுடன் அர்ச்சகர் சக்திவேல் தலைமையில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி வட்டாட்சியர் காயத்திரி, கோத்தகிரி பேரூராட்சி அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    கோத்தகிரி

    கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர்.

    இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மேலும் தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காய்கறி மண்டிகளில் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதை நம்பி பெரும்பாலான விவசாயிகள் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை சாகுபடி செய்து வந்தோம். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.32 மட்டுமே கிடைக்கிறது. மேலும் நல்ல விதை கிழங்குகள் கிடைக்காததாலும், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி குறைந்ததாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
    • டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து குடும்பத்துடன் 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

    நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இன்று காலை ஊட்டியில் இருந்து கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளை யத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன் சென்றுக் கொண்டிருக்கும் போது, டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்தி ற்குள்ளானது.சிகிச்சை

    உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்துப் போலீசார் வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதால், டிரைவர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • நகராட்சி மூலம் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது.
    • நடவடிக்கை எடுக்காமல், கழிப்பிடத்தை மூடிவிட்டனர்.

    குன்னூர்

    குன்னூர் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பிடத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் குன்னூர் வழியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் குன்னூர் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இதனால் ஊட்டிக்கு செல்லும் வழியில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக உள்ளூர் பஸ் நிலையம் கோத்தகிரி சாலையிலும், வெளியூர் பஸ் நிலையம் ஊட்டி சாலையிலும் அமைந்துள்ளது.

    இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. குறிப்பாக உள்ளூர் பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சி மூலம் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு, அதை தனியார் ஒப்பந்ததாரர் எடுத்து நடத்தி வந்தார்.

    அதில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதாரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், கழிப்பிடத்தை மூடிவிட்டனர்.

    இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறினார்கள். எனினும் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கழிப்பிடம் மூடி கிடப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள ராப்ராய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி ருக்குமணி (வயது75). இவர் தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் குழாய் அருகே சென்றுள்ளார்.

    அப்போது அங்குள்ள புதர் மறைவில் இருந்து திடீரென வெளியே வந்த கரடி ருக்குமணியை தாக்கியது. இதனால் கை, மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டி விட்டு, காயமடைந்த ருக்குமணியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததுடன், காய்மடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வரும் ருக்மணிக்கு ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.
    • சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முதல்வரால், ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வரின் காலை உணவு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தகுதியுடைய சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இப்பணிக்கு தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மைய பொறுப்பாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில், நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்கவேண்டும்.காலை உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் போதுமான அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்ப டும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் 5-ம் வகுப்பை நிறைவு செய்யும் பட்சத்திலோ அல்லது அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு வேறு உறுப்பினர் இப்பணியில் அமர்த்தப்படுவார்.சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.

    இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முதன்மை தேர்வு குழுவால் தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இப்பணி தற்காலிகமான, விருப்பபணி மட்டுமே. அரசு நிர்ணயம் செய்யப்படும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதர படிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.

    இப்பணிக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முதன்மை குழு உறுப்பினர்கள் மீதோ, இதர மக்கள் பிரதிநிதிகள் மீதோ, புகார்கள் ஏதும் வரப்பெற்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    • குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் மலர்கள் நடவு செய்யப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூரில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்காவிற்கு பட்டாம்பூச்சிகள் வருகை புரிய தொடங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலுள்ள 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு துர்நாற்றம் வீசுவதால் இந்த இடத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்திய குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.

    அந்தப் பூங்கா பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது புதிய பூங்காவாக மாற்றப்பட்டு குப்பை மேலாண்மை பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொடர் மழை பெய்து வருவதாலும் பூங்காவில் மலர்கள் அதிக அளவில் மலர்ந்து உள்ளதால் பூங்காவிற்கு பட்டாம் பூச்சிகள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த பட்டாம்பூச்சி வருகையை காண உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர்.
    • இதுகுறித்து வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் புலியை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டியில் இருந்து மசின குடி செல்லும் கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும். இந்த கல்லட்டி மலை பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது சீகூர் பாலம் அருகில் திடீரென வன பகுதியிலிருந்து புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து, அடுத்த பகுதியில் இருந்த வனப்பகுதிக்கு சென்றது.

    தீடிரென மின்னலை போல் சாலையை கடந்த புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    • அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் பணிகளை ஆய்வு செய்தார்.
    • எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 25 ஆண்டுகளாக மழை காலங்களில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆற்று வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் முன்னாள் நகர மன்ற தலைவரும் அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் சுமார் ரூ.50 லட்சம் செலவில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் செல்லாதபடி தடுக்கும் வகையில் நீண்ட தடுப்புசுவர் அமைக்கும் பணிக்கு நிதி பெற்றுக்கொடுத்து தற்போது நடைப்பெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    தங்களின் நீண்ட 20 ஆண்டுகால கோரிக்கையை ஒரே ஆண்டில் நிறைவேற்றிய அதிமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு எம்.ஜி.ஆர் நகர் மக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்,

    • சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு உலவியது
    • சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் எமரால்டு சுற்றுவட்டாரப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருவது சமீபகாலமாக தொடா்ந்து வருகிறது.

    இந்நிலையில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை எமரால்டு காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு உலவியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் காவல் நிலைய வளாகத்தில் இரவு நேரத்தில் சிறுத்தை உலவி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×