search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி"

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போன் பிரத்யேக கோகோ கோலா யுஐ உள்ளது.
    • கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட் இமிடேஷன் மெட்டல் பிராசஸ் மூலம் கோகோ கோலா லோகோ உள்ளது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. வலைதள முன்பதிவில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட் இமிடேஷன் மெட்டல் பிராசஸ் செய்யப்பட்ட கோகோ கோலா லோகோ, கேமராவை சுற்றி சிவப்பு நிற வளையங்கள் உள்ளன.

    இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக கோகோ-கோலா யுஐ, ஐகான் பேக், டைனமிக் சார்ஜிங் எஃபெக்ட், ரிங்டோன், கோக் பபிள் நோட்டிஃபிகேஷன் டோன், கோகோ கோலா கேமரா ஃபில்ட்டர், பாட்டில் ஓபனிங் ஷட்டர் சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டீலக்ஸ் பாக்ஸ் செட் மற்றும் லிமிடெட் நம்பர் கார்டு, டிஐவை ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடி வடிவம் கொண்ட பிரத்யேக சிம் கார்டு பின், ரியல்மியோவ் கோகோ கோலா வடிவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி LPDDR4X ரேம்

    128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம்

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனை விட ரூ. 1000 விலை அதிகம் ஆகும். விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் ஆன்லைன் வலைதளங்களிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    • ரியல்மி நிறுவனம் தனது புதிய GT 3 ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது.
    • புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி இந்திய சந்தையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. எனினும், ரியல்மி GT 3 இந்திய வெளியீட்டு தேதி டீசரில் இடம்பெறவில்லை.

    புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்த ரியல்மி GT 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதேபோன்ற ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ரியல்மி GT நியோ 5 மாடலிலும் வழங்கப்படுகிறது. ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    தற்போது ரியல்மி வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ டீசரில் சரியான வெளியீட்டு தேதி இடம்பெறவில்லை. எனினும், இந்த சாதனம் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ரியல்மி GT 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    ரியல்மி நிறுவனம் சார்பில் புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் 240 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 150 வாட் மற்றும் 240 வாட் என இருவித சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ரியல்மி GT 3 தவிர ரியல்மி நிறுவனம் கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் நாளை அறிமுகமாகிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புது கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

    ரியல்மி 10 ப்ரோ 5ஜி கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ரியல்மி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக பெயர் குறிப்பிடாமல், இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை ரியல்மி வெளியிட்டு வந்தது. அந்த வகையில், இந்த மாடல் ரியல்மி 10 ப்ரோ 5ஜி என தெரியவந்துள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிமுக போஸ்டரில் ஸ்மார்ட்போனின் முழு டிசைன் எப்படி இருக்கும் என அம்பலமாகி விட்டது. மேலும் இதற்கான மைக்ரோசைட்டில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. ரூ. 200-க்கு தள்ளுபடி கூப்பன், 3வாட் ப்ளூடூத் ஸ்பீக்கர், எலெக்ட்ரிக் டூத்-பிரஷ், வாட்ச் 2, ரியல்மி கோகோ கோலா சின்னம் மற்றும் டீலக்ஸ் பாக்ஸ் செட் உள்ளிட்டவை வழங்குகிறது.

    ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிசைன் அதன் ஒரிஜினல் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனை தனித்துவம் மிக்கதாக மாற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் டூயல் டோன் டிசைன் கொண்டுள்ளது.

    இதன் ஒருபுறம் பிளாக் நிறமும், மற்றொரு புறம் ரியல்மி லோகோ, மற்ற பாதியில் கோகோ கோலா பிராண்டிங் ரெட் அக்செண்ட் உடன் இடம்பெற்று இருக்கிறது. டூயல் கேமரா சென்சார்களை சுற்றி ரெட் அக்செண்ட் ரிங்குகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் டிசைன் மற்றும் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது.

    ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள்:

    6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    6 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்

    3.5mm போர்ட்

    யுஎஸ்பி டைப் சி போர்ட்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட புது ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • கடந்த மாதம் தான் ரியல்மி தனது 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்தது.

    ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி சீன வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை குறிப்பிடப்படவில்லை.

    எனினும், ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெறும் என ரியலமி உறுதிப்படுத்தி இருக்கிறது. அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்பதை தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் டீசரில் இடம்பெறவில்லை.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இது ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த GT நியோ 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சீனாவில் "4" ஆம் எண் ராசியில்லாத ஒன்றாக பார்க்கப்படுவதால், ரியல்மி நிறுவனம் GT நியோ 4 பெயருக்கு மாற்றாக ரியல்மி GT நியோ 5 பெயரில் அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

    டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார். அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், இண்டகிரேட் செய்யப்பட்ட கைரேகை சென்சார், அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், அதிகபட்சம் 256 UFS 3.1 மெமரி வழங்கப்படுகிறது.

    பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இருவித ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் சில நாட்களுக்கு முன் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

    ரியல்மி இந்தியா நிறுவனம் தனது வலைதளம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் புது அறிவிப்பை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. அதில், "Something exiting is Bubbling" மற்றும் "realme is set to get really refreshing" எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    புது டீசர்களின் படி ரியல்மி நிறுவனம் கோகோ கோலா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என்பதை உணர்த்தும் வகையில் இடம்பெற்று இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர டுவிட்டரில் கோகோ கோலா போன் படம் கொண்ட அக்கவுண்ட் ஒன்று கோலா போன் குளோபல் (@colaphoneglobal) பெயரில் துவங்கப்பட்டு இருக்கிறது.

    குளிர்பான நிறுவனங்களுடன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைப்பது முதல் முறை இல்லை. முன்னதாக 2015 வாக்கில் பெப்சி போன் P1s மாடலை ஷென்சென் ஸ்கூபி கம்யுனிகேஷன் எக்யுப்மெண்ட் கோ லிமிடெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ரியல்மி 10 கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் புதிதாக சிவப்பு நிறம் மற்றும் கோகோ கோலா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பெரும்பாலும் ரியல்மி 10 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ரியல்மி 10 மாடலில் 6.4 இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. புது ரியல்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

    • ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    ரியல்மி நிறுவனம் GT நியோ 5 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த ஸ்மார்ட்போன் பற்றி இணையத்தில் வெளியாகி இருக்கும் புது தகவலில் அதன் முக்கிய அம்சம் தெரியவந்துள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ரியல்மி GT நியோ 5 பற்றி ஏற்கனவே பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது வெய்போ தளத்தில் வெளியாகி இருக்கும தகவல்களின்படி ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போன் இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT நியோ 5 மாடலின் இரு ஆப்ஷன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 6.74 இன்ச் OLED டிஸ்ப்ளே, 2722x1240 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் 199 கிராம் எடை மற்றும் மூன்று கேமரா சென்சொர்களை கொண்டிருக்கிறது.

    இவற்றில் 50MP பிரைமரி கேமரா, 8MP கேமரா மற்றும் 2MP லென்ஸ் வழங்கப்படுகிறது. இரு மாடல்களில் ஒற்றை வித்தியாசமாக சார்ஜிங் ரேட் மற்றும் பேட்டரி பேக் இருக்கின்றன. ஒரு மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றொரு மாடலில் 4600 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களிலும் ரியல்மி GT நியோ 5 இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. சமீபத்திய TENAA சான்றளிக்கும் வலைதளத்தில் ரியல்மி GT நியோ 5 ஸ்மார்ட்போனின் இரு வெர்ஷன்கள் RMX706 மற்றும் RMX3708 மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன.

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
    • பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0 கொண்டிருக்கும் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெற இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரியல்மி 10 ஸ்மார்ட்போன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ரியல்மி 10 அம்சங்கள்:

    6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்

    ARM Mali-G57 MC2 GPU

    4ஜிபி LPDDR4X ரேம், 64ஜிபி UFS 2.2 மெமரி

    8ஜிபி LPDDR4X ரேம், 128ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யுஐ 3.0

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ஸ்மார்ட்போன் கிலாஷ் வைட் மற்றும் ரஷ் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனினும், அறிமுக சலுகையாக 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ரியல்மி வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஜனவரி 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு துவங்குகிறது.

    இதுதவிர புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி பெறலாம். எனினும், இந்த சலுகை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • ரியல்மியின் புது டேப்லெட் பற்றிய விவரங்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட், ரியல்மி மினி மற்றும் ரியல்மி பேட் X மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கும் புது டேப்லெட் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் விரைவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு ஸ்கிரீன்ஷாட்டில் ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் லிஸ்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    அதன்படி ரியல்மி பேட் ஸ்லிம் மாடலில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, வைபை, 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி, கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவைதவிர ரியல்மி பேட் ஸ்லிம் மாடலின் இதர அம்சங்கள் ரியல்மி பேட் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

    ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 2000x1200 பிக்சல், 8MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 7100 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. ரியல்மி பேட் மாடல் இரண்டு எல்டிஇ மாடல்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி பேட் ஸ்லிம் மாடல் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக ரியல்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து விட்டது. எனினும், ரியல்மி பேட் ஸ்லிம் வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்தியாவில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகும் என ரியல்மி அறிவித்துள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP பிளாக் அண்ட் வைட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனில் ஹை-ரெஸ் ஆடியோ, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

    புதிய ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனிற்கான லேண்டின் பேஜ் இடம்பெற்று இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 10 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர்

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0

    50MP பிரைமரி கேமரா

    2MP பிளாக் அண்ட் வைட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்

    • ரியல்மி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • சமீபத்தில் தான் ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டுக்கு அந்நிறுவனம் தயாராகி வருகிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரில், "EpicPowerhouse" எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அசத்தல் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.

    இத்துடன் புது ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 10 4ஜி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+ 90Hz AMOLED ஸ்கிரீன், 16MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2 MP போர்டிரெயிட் கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் படிப்படியாக அறிவிக்கப்படலாம்.

    • ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 18 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது.
    • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ரியல்மி 10 ப்ரோ 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் சற்றே குறைந்த விலையில் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரியல்மி 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், மிக மெல்லிய பெசல்கள், DC டிம்மிங், TUV ரெயின்லாந்து லோ புளூ லைட் சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கும் ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 2D ஃபிரேம் டிசைன், ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமரா, 8.1mm பாடி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, மற்றும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 29 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும்.

    ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள்:

    6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ வளைந்த LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹைப்பர்ஸ்பேஸ் கோல்டு, டார்க் மேட்டர், நெபுலா புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்களிலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் துவங்குகிறது.

    • புதிய ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • இந்தியாவில் மூன்று வித நிறங்களில் கிடைக்கும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ 120Hz OLED வளைந்த ஸ்கிரீன், மிக மெல்லிய பெசல்கள் உள்ளன. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், X ஆக்சிஸ் லீனியர் வைப்ரேஷன் மோட்டார், 4D கேம் வைப்ரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 9-இன்-1 பிக்சல் பியூஷன் தொழில்நுட்பம், ஹைப்பர்ஷாட் ஃபிளாக்‌ஷிப் இமேஜ் ஆர்கிடெக்ச்சர், 3x ஆப்டிக்கல் ஜூம், ஸ்டிரீட் ஷூட்டிங் மோட் 3.0, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP) மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடனஅ அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ வளைந்த OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

    மாலி-G68 MC4 GPU

    6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.2 மெமரி

    8 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 2.2 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஹைப்பர்ஸ்பேஸ், டார்க் மேட்டர், நெபுலா புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை டிசம்பர் 14 ஆம் தேதி முதல் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்களிலும் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் துவங்குகிறது.

    ×