search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருட்காட்சி"

    • ராமநாதபுரத்தில் பொருட்காட்சியை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் நடத்தும் மாபெரும் பொன்னியின் செல்வன் பொருட்காட்சி நேற்று முதல் தொடங்கி 35 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடை பெறும்.

    இதில் பொன்னியின் செல்வன் அரண்மனை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் கூடிய செல்பி பாயிண்ட் இடம்பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கொண்டாடி மகிழ வித விதமான ராட்டினங்கள், ஜெயன்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம்,ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3-டி ஷோ திகிலூட்டும் பேய் வீடு, போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவை யான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள் விற்பனையாகிறது.

    பொருட்காட்சியை ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நகரசபை துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கு ஏற்றினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெய்ன்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதய குமார் செய்திருந்தார்.

    • மதுரையில் அரசு பொருட்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.
    • பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மதுரை

    சித்திரை திருவிழாவை யொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமி நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொருட்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார்.

    வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன்,

    எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் காலோன், சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிவண்ணன்.

    டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, ஐ.சி.டி.சி ஆற்றுநர்கள் ரவிக்கண்ணன், வீரபத்திரன், ஜெயபாலன், தொண்டு நிறுவனங்களான பிரதர் சிகா ரூபி, பக்கீர் வாவா, பேஸ் அறக்கட்டளை பாரதி கண்ணம்மா, தாய் விழுதுகள் அறக்கட்டளை மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு பொருட்காட்சி திறப்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட பயனா ளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    • ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பொன்னியின் செல்வன் பிரமாண்ட பொருட்காட்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
    • 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம்-கேணிக்கரை ரோடு மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ள நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் பொருட்காட்சி இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்க உள்ளது.இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகிக்கிறார்.நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் வரவேற்கிறார். 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதயகுமார் செய்து வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 125 சிறிய கடைகள், 60 தனியார் அரங்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. 70 ஆயிரம் சதுர அடியில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விதமாக நிகழ்ச்சிகள், விளையாட்டு சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்காட்சிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 47 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டு களித்தனர். இந்த எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. மாட்டு பொங்கல் தினமான நேற்று 72,547 பேர் வருகை புரிந்துள்ளனர். 58 518 பெரியவர்களும், 14,029 சிறியவர்களும் பொருட்காட்சியை பார்த்துள்ளனர்.

    பொங்கல் பண்டிகை நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை காணும் பொங்கல் தினமான இன்று அதிகரிக்கும். இன்று குடும்பம் குடும்பமாக மக்கள் பொருட்காட்சிக்கு வருவார்கள். இதனால் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    • ராமநாதபுரத்தில் ரோபோட்டிக் பொருட்காட்சியை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் நடத்தும் மாபெரும் ரோபோட்டிக் பொருட்காட்சி நேற்று (25-ந்தேதி) முதல் 30 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் செல்வராணி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பொருட்காட்சியில் குழந்தைகளை மகிழ்விக்க பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜெயன்ட்வீல், கொலம்பஸ், டிஸ்கோ, ஹெலிகாப்டர், டிராகன் ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
    • சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் தொழில் பொருட்காட்சி நடைபெறும். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக பொருட்காட்சி நடைபெறவில்லை.

    2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் நடத்தப்பட்டது. 2 மாத காலம் நடைபெறும் இந்த பொருட்காட்சியை காண சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதனால் பல்வேறு சிறப்புகளுடன் பொருட்காட்சியை சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

    புயல், மழையால் தீவுத்திடலில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி சற்று தாமதம் ஆன நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள் 40, 100-க்கும் மேலான ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.

    சிறுவர்களை கவரும் பொழுதுபோக்குகள், விளையாட்டு சாதனங்கள் இடம்பெறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் குதூகலப்படுத்தும் வகையில் விதவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைகின்றன.

    பள்ளி குழந்தைகள் பயன்பெறக்கூடிய வகையில் அறிவியல் அரங்கம் நிறுவப்படுகிறது. இதுதவிர சுற்றுலா ரெயில், மாநில உணவு வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தீவுத்திடலில் இருந்து 'டிரைவ் இன்' ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காரில் இருந்தபடியே குடும்பமாக உணவு மற்றும் பொழுதுபோக்கும் வகையில் பிரமாண்டமான திரை அமைக்கப்படுகிறது. அதிக அளவில் கார்களை நிறுத்தி இந்த ஓட்டலில் உணவு சாப்பிடக்கூடிய மிகப்பெரிய கூடாரம் அமைக்கப்படுகிறது.

    இந்த டிரைவ் இன் ஓட்டல் நிரந்தரமாக அங்கு எப்போதும் செயல்படும் வகையில் சுற்றுலாத்துறை சீரமைத்து வருகின்றன. அரசு பொருட்காட்சிக்கான நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை இருந்த நுழைவு கட்டணத்தை விட 5 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும்.

    பொருட்காட்சி நுழைவு வாயில் பாரம்பரிய சிறப்புடன் அமைகிறது. வருகிற 23 மற்றும் 28-ந்தேதிக்கு இடையே பொருட்காட்சியை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரதிபெற்ற பனிமயமாதா கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் அருகில் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் வந்து செல்வதற்கும் மற்றும் பொழுதுபோக்கு மேற்கொள்வதற்கும் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழாவிற்கு மாதாகோவில் பங்குதந்தை குமாரராஜா ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    விழாவில் பாதர் ஆரோக்கியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், ஓஎல்எஸ் பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிர்மலா, மற்றும் மணி, ராக்கேஷ், பெல்லா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெறக்கூடிய பல்வேறு வகையான ராட்சத விளையாட்டு சாதனங்கள் ராட்டினம் உள்ளிட்ட சாதனங்கள் பொருட்காட்சியில் அமைந்துள்ளன.

    • இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பொருட் காட்சி நடைபெறவில்லை
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்

    கன்னியாகுமரி :

    குழித்துறையில் ஆண்டு தோறும் ஆடி அமாவா சையை ஒட்டி குழித்துறை நகராட்சி சார்பில் பொருட் காட்சி நடைபெற்று வரு கிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பொருட்காட்சி நடைபெறவில்லை.இவ்வாண்டு நடைபெறும் 97-வது வாவுபலி பொருட்காட்சி நேற்று மாலை தொடங்கியது. பொருட்காட்சி மைதானத் தில் உள்ள வி.எல்.சி திருமண மண்டபத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    தலைவர் பொன். ஆசைதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விழாவிற்கு தலைமை வகித்தார். ஆணையாளர் ராமத் திலகம், என்ஜினீயர் பேரின்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பிரவீன் ராஜா, சுகாதார அலுவ லர் ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர் குரு சாமி, பொருட்காட்சி காண்ட்ராக்டர் பால்ராஜ், வேளாண்மை இணை இயக் குனர் அவ்வை மீனாட்சி, உதவி இயக்குனர் சந்திர போஸ் கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, லலிதா, ஆட்லீன்கெனில், விஜு, விஜயலட்சுமி, மினி குமாரி, ரவி, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ஜூலியட் மெர்லின் ரூத், பெர்லின தீபா, லில்லி புஷ்பம், ரீகன், ரெத்தினமணி, அருள் ராஜ், ஜலீலா ராணி, சர்தார் ஷா, செல்வகுமாரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மரணக் கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்கு கள், மாயக்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்த மான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகைகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவர்களின் படைப்பு, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பல மரச்சீனி, வாழைக்குலை, கிழங்கு வகைகள் உட்பட ஏராளமான பொருட்களை வளாகத்தினுள் பார்வைக்கு வைத்துள்ளனர். களியக் காவிளை மற்றும் மார்த் தாண்டம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • நாளை தொடங்கி 20 நாட்கள் நடக்கிறது
    • 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயார்

    கன்னியாகுமரி: 

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வாவுபலி பொருட்காட்சி இந்த ஆண்டு நாளை (13-ம் தேதி) தொடங்குகிறது. 97-வது வாவுபலி பொருட்காட்சியின் துவக்க விழா நாளை மாலை 6 மணிக்கு வி.எல்.சி மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்கிறார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலட்சுமி திட்ட உரையாற்றுகிறார். கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார்.

    தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பொருட்காட்சியை திறந்து வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் முன்னிலை வகிக்கிறார்.

    நிகழ்ச்சியில் பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பி னர்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி, பிரின்ஸ், எம். ஆர் காந்தி, தளவாய் சுந்தரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நகர்மன்ற கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை 20 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் விவசாய கண்காட்சி, ராட்சத ராட்டினங்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பல தரப்பட்ட ராகன் ராட்டினங்கள், மரணக்கிணறு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், மாய க்கண்ணாடி, நாகக்கன்னி, மருத்துவத்துறை, விவசாயத்துறை உட்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் சம்பந்தமான அரங்குகள் ஆகியவை இடம் பெறுகிறது.

    வாவுபலி பொருட்காட்சியை முன்னிட்டு விவசாய பொருள்களான மா, பலா, தென்னங்கன்றுகள், கனி வகை கன்றுகள் மற்றும் காய்கறி செடிகள், பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகள் உட்பட ஏராளமான செடி, கொடி வகைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. வாவுபலி பொருட்காட்சி நடத்துவதற்கு ஏதுவாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்புத் துறையினர் வளாகத்திலேயே தயாராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ×