search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.
    • கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

    கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

    தனது திட்டத்தின்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை, நல்ல பாம்பை விட்டு மகி கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்து விட்டார். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மகி ஆர்யா உள்ளிட்ட 4 பேர்தான் கொலையாளிகள் என்பதை கண்டுபிடித்துவிட்டனர். 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறுகையில், பாம்புப் பிடாரன் ஒரு வரை அழைத்து வந்து நல்ல பாம்பை மகி ஏவி விட்டு உள்ளார். மகி ஆர்யாவுக்கு தீப் கந்த்பால் என்ற வேறொரு காதலரும் உள்ளார். மகி ஆர்யா, தீப், வேலைக்கார பெண் உஷா தேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

    அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றார்.

    • ஊா்ந்து வந்த பாம்பு சாமியாத்தாளின் வலது காலில் கடித்துள்ளது.
    • அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் அருகேயுள்ள தொட்டியபட்டி பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மனைவி சாமியாத்தாள் (வயது 70). இவா் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு ஊா்ந்து வந்த பாம்பு சாமியாத்தாளின் வலது காலில் கடித்துள்ளது.

    அவரின் அலறல் சப்தம் கேட்டு வந்த குடும்பத்தாா், சாமியாத்தாளை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • உடல் நலம் பாதித்த மனைவிக்கு பதிலாக போனவர்
    • நாகர்கோவிலில் இன்று பரிதாபம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள கீழகோணம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). இவரது மனைவி முத்துசெல்வம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்து செல்வம் நாகர்கோவில் மாநக ராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    முத்து செல்வத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது பணியை கணவர் பரமசிவம் மேற்கொண்டார். இன்று காலை பரமசிவம் கோணம் கம்பி பாலம் பகுதியில் கால்வாயில் முட்புதர்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் கிடந்த விஷ பாம்பு பரமசிவத்தை கடித்தது.

    இதையடுத்து அவர் கூச்சலிட்டார். உடனே பணியில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரமசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். பரமசிவத்தின் உடல் பிரேத  பரிசோதனைக்கு ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூய்மை பணியின் போது ஒருவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் மாநகராட்சி ஊழியர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சுழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கழிவறைக்குள் பாம்பு புகுந்தது.
    • மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஆணைக்குளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.

    மேலும் இந்த அரசுப் பள்ளி காட்டு பகுதியில் அமைந்துள்ளதால் அவ்வப்போது விஷசந்துகள் வரு வது வழக்கமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் சிறப்பு வகுப்புகளுக்காக மாணவ, மாணவியர் படித்து கொண் டிருந்தனர். அப்போது பள்ளிகூடத்தின் கேட் பகுதி வழியாக சுமார் நான்கரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று அங்குள்ள பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் நுழைந்தது.

    இதனை கண்ட மாணவர் கள் கூச்சிலிட்ட நிலையில் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக திருச்சுழி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். உடனே சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ் வரன் தலைமையிலான தீய ணைப்பு குழுவினர் பள்ளிக்கூடத்தின் கழிவறை பகுதிக்குள் நுழைந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை காட்டு பகுதியில் விட்டனர்.

    மேலும் மாணவர்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே சாரை பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிற்ப துறையில் படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு உருவாக்கிய நடராஜர் சிலை உள்ளது.
    • ஊழியர் ஒருவர் பத்திரமாக பாம்பை மீட்டு அடர்ந்த தோட்டப்பகுதியில் விடுவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளது.

    இங்கு சிற்ப துறையில் படிக்கும் மாணவர்கள் பயனற்ற இரும்பு, நட்டு, போல்ட் போன்றவற்றை கொண்டு உருவாக்கிய நடராஜர் சிலை உள்ளது.

    இதன் தலைமீது 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு அமர்ந்து இருந்தது. இதனை ஊழியர்கள் கண்டதும் நாகம் படம் எடுத்து ஆடியது.

    இதைக் கண்ட ஊழியர்கள் வியந்து பார்த்தனர். பின்னர் ஊழியர் ஒருவர் பத்திரமாக பாம்பை மீட்டு அடர்ந்த தோட்டப்பகுதியில் விடுவித்தார்.

    • எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே பாம்பு நுழைந்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி கீழத்தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதியில் சங்கரன் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு நுழைந்தது.

    அங்கே எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே நுழைந்தது. அந்த சமயத்தில் நல்ல பாம்பும் உள்ளே வசமாக சிக்கிக்கொண்டது.

    எலி வலைக்குள் இருந்த நல்ல பாம்பு ஆக்ரோஷமாக சீறியதைக் கண்டு சங்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். பின்னர் இது குறித்து போடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து போடி மெட்டு மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது.
    • நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த செங்கமேடு பகுதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சாமி சிலைகள் வாடகை விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று குடோனுக்குள் ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீள நாகபாம்பு சுற்றிக்கொண்டு இருந்தது.

    இதனை பார்த்து அச்சம் அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் விஜிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் பாம்புபிடி வீரர் சீர்காழி பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.

    தகவலின்படி அங்கு சென்ற பாண்டியன் நடராஜர் சிலையினை சுற்றிக்கொண்டு இருந்த பாம்பினை பிடிக்க முயன்றார். அந்த பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது. பின்னர் லாவகமாக நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சிறிது நேரம் அசையாமல் தூண் போல நின்று கொண்டே இருக்கும் பாம்பு மீண்டும் தரையில் அமர்ந்து ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பாம்பு ஸ்டைலாக நிற்கிறது என்பது போன்ற பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    சமூக வலைதளங்களில் பாம்பு வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படும். அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மிக நீளமுள்ள விஷப்பாம்பு ஒன்று சாலையில் சென்று கொண்டு இருக்கிறது.

    திடீரென அந்த பாம்பு வேல் போல் செங்குத்தாக நிற்கிறது. மேலும் சிறிது நேரம் அசையாமல் தூண் போல நின்று கொண்டே இருக்கும் அந்த பாம்பு மீண்டும் தரையில் அமர்ந்து ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பாம்பு ஸ்டைலாக நிற்கிறது என்பது போன்ற பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    • மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் மண்டி இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆலாம்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகள் பூவிகா (வயது 13). ஒலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார் .அப்போது கழிவறை அருகே பதுங்கி இருந்த பாம்பு அருகே தெரியாமல் சென்று விட்டார்.

    அப்போது பாம்பு மாணவியை கடித்தது. இதனால் அலறி கூச்சலிட்டார்.

    அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவியை மீட்டனர். உடனடியாக மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

    அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் மண்டி இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.
    • பொது மக்களே வாகனத்தில் இருந்த பாம்பை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை காரமடை அரங்கநாதர் கோவில் முன் ஊர்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கிரி. இவரது மனைவி பூரணி.

    நேற்று இவர்களது வீட்டின் முன்பு 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு வந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் சத்தம் போட பாம்பு, கிரியின் வீட்டு வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தினுள் நுழைந்தது.

    குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் இதுதொடர்பாக உடனடியாக காரமடை வனத்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    காரமடை வனத்துறை அலுவலகத்திற்கும் ஊர்கவுண்டர் வீதிக்கும் 500 மீட்டர் தொலைவு தான் இருக்கும். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு 1 மணி நேரத்திற்கு மேலாகியும் வரவில்லை.

    இதையடுத்து வேறு வழியில்லாமல் பொது மக்களே வாகனத்தில் இருந்த பாம்பை 2 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    இதையடுத்து அந்த பாம்பை காரமடை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    பொதுமக்கள் குடியிருப்பில் பாம்பு நுழைந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்கம் போல் காரில் பணிக்கு வந்தனர்
    • காருக்குள் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறியது

    நாகர்கோவில்:

    ஆசாரிப ள்ளம் அரசு மருத்துவ க்கல்லூரி ஆஸ்பத்திரியில் கணவன்- மனைவி 2 பேர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இன்று காலை வழக்கம் போல் காரில் பணிக்கு வந்தனர். வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு செல்வதற்காக தயாரானார்கள்.

    அப்போது காரின் டிக்கியை திறந்த போது பாம்பு ஒன்று காருக்குள்ஓடியதை பார்த்து கணவன்- மனைவி இருவரும் அங்கி ருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்து றைக்கும் தகவல் தெரிவி க்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், வனத்துறையினரும்ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டரின் காரை வனத்துறை ஊழியர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே ஓட்டி சென்றார். பின்னர் காரை வெளியே நிறுத்திவிட்டு தண்ணீரை காருக்குள் பீய்ச்சியடித்த போது பாம்பு ஒன்று காருக்குள் இருந்து சீறிப்பா ய்ந்து வெளி யேறியது. இதையடுத்த அந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். பின்பு அதனை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் தம்பதியினர் காருக்குள் பாம்பு புகுந்த சம்பவம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 3 நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருந்தது.
    • ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பை கொண்டு விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் இந்துமதி.

    இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் நல்லபாம்பு வேலி ஓரம் கிடந்தது.

    பாம்பு சென்று விடும் என இருந்த இந்துமதி குடும்பத்தினர் மூன்று நாட்களாக பாம்பு அதே இடத்தில் உயிருடன் இருப்பதை கண்டு அருகே சென்று பார்த்தனர்.

    அப்போது நல்ல பாம்பின் தலையில் சிறிய பெயிண்ட்டப்பா மாட்டிக்கொண்டதும்,

    இதனால் இந்தப் பாம்பு அந்த இடத்தினை விட்டு செல்ல முடியாமல் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் புளிச்சக்காடு தினேஷ் என்பவருக்கு இந்துமதி குடும்பத்தினர் தகவல் அளித்தனர்.

    இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற தினேஷ் பெயிண்ட்டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பினை லாவகமாக பிடித்து, சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பு தலையில் இருந்த டப்பாவினை லாவகமாக காயம் ஏற்படாதவாறு அறுத்து அகற்றினார்.

    பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நல்ல பாம்பினை கொண்டு விட்டார்.

    இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×