search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது.
    • மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகிக்கிறார். பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் 13 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • 7-ந் தேதி பாத யாத்திரை தொடக்கம்
    • சுற்றுப்பயணம் முழு விவரம் வெளியீடு

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    வருகிற 7-ந்தேதி கன்னி யாகுமரியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார். 3570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் 12 மாநிலங்களை கடந்து காஷ்மீரில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார். ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கு வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசாரும், குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி களும் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    ராகுல் காந்தி செல்ல உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய் யப்பட்டு வருகிறது.ஏற்க னவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் வந்து ஆய்வு செய்திருந்த நிலையில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்லக்குமார், விஜய் வசந்த் ஆகியோர் இங்கேயே முகாமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வரு கிறார்கள்.

    7-ந்தேதி காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரிக்கு வரும் ராகுல்காந்தி மாலை கன்னி யாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் பொதுக் கூட் டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடம் இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட உள்ளது.

    7-ந்தேதி இரவு கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பாத யாத்திரை தொடங்குகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகா னந்தா கல்லூரி வரை பாதயாத்திரை மேற் கொள் கிறார். அன்று இரவு விவே கானந்தா கல்லூரியில் தங்கும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு வரு கிறது.

    8-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம் வருகிறார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து பொற்றையடி, வழுக்கம் பாறை வழியாக சுசீந்தி ரம் வந்தடைகிறார்.சுசீந்தி ரம் பள்ளியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    பின்னர் மாலை அங்கி ருந்து புறப்பட்டு நாகர் கோவில் சவேரியார் ஆலயம் டெரிக் சந்திப்பு வழியாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியை வந்தடைகிறார். இரவு ஸ்காட் கல்லூரியில் தங்குகிறார். 9-ந்தேதி காலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கு கிறார்.

    சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக புலியூர்குறிச்சி செல்கிறார். அங்கு புலியூர்குறிச்சியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியத்திற்கு பிறகு புலியூர் குறிச்சியில் இருந்து மேட்டுக் கடை வழியாக மூளகுமூடு சென்றடைகிறார்.அன்று இரவு மூளகுமூடு சென்மேரிஸ் பள்ளியில் தங்குகிறார்.

    10-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு சாமியார் மடம் சிராயன்குழி வழியாக மார்த்தாண்டம் சென்றடைகிறார். மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் மதியத்திற்கு பிறகு அங்கி ருந்து புறப்பட்டு குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு சந்திப்பு வழியாக தலைச்சன் விளை செல்கிறார். அன்று இரவு செருவாரக்கோணம் பள்ளியில் தங்குகிறார்.

    11-ந்தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் செல்கிறார்.இந்த இடங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    இன்னும் ஒரு சில நாட்களில் ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள பாதைகள் இறுதி வடிவம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.
    • ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தமிழர்களின் வாழ்வு, விடுதலை, பண்பாடு போன்றவை இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வடக்கில் இருந்து எழுதப்பட்ட வரலாறு காரணம் ஆகும். இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள தியாகிகள் மற்றும் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை இடம்பெற வில்லை. இவைகளை உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

    தமிழர்களின் தொன்மை, வாழ்வு, பண்பாடு, கலாசாரம் போன்றவைகளை அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மத்தியில் ஆலோசனை கேட்கும் அளவிற்கு நம்மிடம் பண்பாடு உள்ளது. அனைவருக்கும் வழிகாட்டி தமிழகம் தான். நாட்டின் சரித்திரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது.

    நமது தியாகம், வரலாறு, பண்பாடு போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டுள்ளது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை போன்றவைகளை சில கும்பல் சிதைத்து கொண்டிருக்கிறது.

    எந்த காலத்திலும் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தி.மு.க. மற்றும் திராவிட கருத்துக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வளவு ஒற்றுமையுடன் இருந்தால் வடக்கில் இருந்து யாரும் இங்கே கால் வைக்க முடியாது. இந்த உணர்வுடன் பழக வேண்டும். தமிழர்கள் வலிமையுடன் இருக்க நினைக்கும் ஆட்சி தி.மு.க.. இதற்கு நீங்கள் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சாத்தூர் ரகுநாதன், மணப்பாறை அப்துல் சமது, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் முன்னாள் எம்.பி. லிங்கம், ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, ஒன்றிய செயலாளர்கள் சரவணமுருகன், ஞான்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டத்திற்கு கோவை மாநகராட்சி 74-வதுவார்டு கவுன்சிலர் ஏ.எஸ்.சங்கர் தலைமை தாங்குகிறார்.
    • 2 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்குகிறார்.

    கோவை 

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல்காந்தி நடை பயண விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை கோவை பூசாரி பாளையத்தில் நடக்கிறது. பொதுக்கூட்டத்திற்கு கோவை மாநகராட்சி 74-வதுவார்டு கவுன்சிலர் ஏ.எஸ்.சங்கர் தலைமை தாங்குகிறார்.தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்குகிறார்.


    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்க உள்ளார்.இதில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வக்கீல் கருப்பசாமி, மாவட்ட தலைவர்(எஸ்.சி துறை) சங்கனூர் ஸ்ரீதர், சர்க்கிள் தலைவர் கணேசன், 74-வது வார்டின் டிவிசன் தலைவர் முனுசாமி, பொது செயலாளர் சண்முகராஜன், மாநில சிறப்பு பேச்சாளர் குமரி மகாதேவன், மாநில பொதுசெயலாளர் கணபதி சிவக்குமார், முன்னாள் பொதுசெயலாளர் வீனஸ்மணி மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, இருகூர் சுப்பிரமணியம், உமாபதி, கோவை போஸ், ராமநாகராஜ், எச்.எம்.எஸ் ராஜாமணி, தமிழ்செல்வன், குருசாமி, சரளா வசந்த் மற்றும் 74-வது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் துரை, காந்திதாசன், கண்ணன், ரங்கராஜ், பிரபு, ஜெய்கணேஷ், நந்தகோபால், வசந்தி, விஜயன், ஈஸ்வரன், செல்வராஜ், சேகர், ராஜசேகர், ஜெயபிரகாஷ், குப்புராஜ், சுப்பிரமணி, ராஜேந்திரன், பிரவீன், கொரண்டிராஜன், பிரபு, தியாகு, சற்குணம், கணேசன், மகளிர் அமைப்பு நிர்வாகிகள் பூவை ஜோதிமணி, மகேஸ்வரி, சத்யா, சரண்யா, கற்பகம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடியில் எஸ்டிபிஐ கட்சி 14-வது ஆண்டு தொட தினம் மற்றும் வெறுப்பு அரசியல் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குடி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாள ர் அப்துல்ராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது முஹைதீன் அனைவரையும் வரவேற்றார்.

    ஆலங்குடி தொகுதி து ணைத் தலைவர் ராயல் கனி எஸ்டிபிஐ கட்சியின் அப்துல் சுபஹான், மருத்துவர் அணி தலைவர் டி எஸ் எம் ஜமால்முகமது ஆகியோர் முன் னிலையில் வகித்தனர்.

    மயானம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும். ஆலங் குடி அரசமரம் மற்றும் பழைய நீதிமன்றம் அருகில் உள்ள இரண்டு டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்தவும், ஆலங்குடியில் குற்றங்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட தலைவர்கள் ஸலாஹுதீன், நபிஷா பேகம், அபூபக்கர் சித்திக் , மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆலங்குடி கிளை தலைவர் பீர் முகமது நன்றி கூறினார்.

    • காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பொது இடங்–களில் பொது–மக்–களை பாதிக்–கும் வகை–யில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அரசியல் கட்சியினர் மற்றும் மத அமைப்பினர் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருகிற 29-ந் தேதி வரை தடை விதித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

    பொது இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் கூடுவது, துண்டு பிரசுரங்கள் வினியோகிப்பது உள்ளிட்டவை தடை செய்யப்படுகிறது. திருமணம், துக்க நிகழ்வு, வழிபாட்டு முறைகளுக்கு எந்தவித தடையும் இல்லை. காவல்துறையினரின் உரிய அனுமதி பெற்ற பிறகு நிகழ்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
    • 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் கரையான் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை மாநாடு என்ற பெயரில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. தற்போது மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.சீனிவாசன், கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆலோசனைகள் கூறி வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறியதாவது: - தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி மாநிலத் தலைவர் அண்ணாமலை , சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் ஜூலை 17 ந்தேதி பல்லடத்தில் தாமரை மாநாடு என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டு பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    கூட்டத்திற்கான ஒளி விளக்குகள், நாற்காலிகள், சுகாதார வளாகம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

    • மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் மைதானம், மேடை அமைப்பு, வாகன ஏற்பாடுகள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
    • பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.

    திருப்பூர் :

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பல்லடம் அடுத்த கரையான்புதூரில் வருகிற 17 ந்தேதி நடக்கிறது.

    பொதுக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசுகிறார்.மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முருகானந்தம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் மாநாட்டு மைதானம், மேடை அமைப்பு, வாகன ஏற்பாடுகள் போன்றவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ், வி. கே. பாலசுப்ரமணியம் , பாலகுமார் , மாவட்ட பொருளாளர் நட்ராஜ் ,துணைத் தலைவர் குணசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெற வேண்டும்.
    • 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், உழவர் தினத்தையொட்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுக்குள், ஒரு லட்சம் விவசாய பம்பு செட்டுக்கு மேல் இலவச மின்இணைப்பு வழங்கிய தமிழக அரசை பாராட்டியும், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தில் இருந்தும் விடுதலைப் பெறவும், பால், கரும்பு, மா, தென்னை, நெல், காய்கறி ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும், இலவச மின்சாரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் அஞ்சலி நினைவாக, நேற்று மாலை கிருஷ்ணகிரி எல்.ஐ.சி., அலுவலகத்திலிருந்து ரவுண்டானா வரை விவசாயிகளின் பேரணி நடந்து.

    அதை தொடர்ந்து ரவுண்டானா அருகில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் அனுமந்தராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிரெட்டி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மாவட்ட துணைத் தலைவர் தோப்பைய கவுண்டர், மாவட்ட ஆலோசகர் நசீர்அமகத், மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, மாவட்ட துணைத் தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் வரதராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க பொதுச் செயலாளர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வ சிகாமணி, தென்னிந் திய விவசாயிகள் சங்கத் தலைவர் நரசிம்மம் நாயுடு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

    • பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார்.
    • மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேச உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

    மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம், மாநிலத்துணைத்தலைவர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்டத்தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிமணி, வினோத் வெங்கடேஷ், விவசாய அணி ரமேஷ் குமார், நகரத்தலைவர் வடிவேல், நிர்வாகிகள் ரமேஷ், பன்னீர் செல்வகுமார், துரைக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாநில துணை பொதுச்செயலாளர் பொறியாளர் குமார் வரவேற்று பேசினார்.
    • இதில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இலஞ்சியில் மாநில தலைவர் விஜயமுருகன் தலைமையில் நடந்தது.

    மாநில துணை பொது செயலாளர் பொறியாளர் குமார் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் அழகப்பன், மாநில துணைத்தலைவர் லோகநாதன், தலைமை நிலை செயலாளர் மோகனசுந்தரம், மாநில அமைப்பு செயலாளர் சுந்தரலிங்கம், தேர்தல் ஆணையாளர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மாநில தலைவர் சௌந்தரராஜன் விழா பேரூரை வழங்கினார். இதில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்னி பாத் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக அனைவரையும் ஒன்றிய தலைவர் டி ஆர் தவமணி வரவேற்றார்.அக்னி பாத் விளக்க பொதுக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பொதுக் கூட்டத்தில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி500க்கும் மேற்பட்டவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட மேற்பார்வையாளர் புரட்சி கவிதாசன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஜயகுமார், முரளி, பார்த்திபன், மாவட்ட பொருளாளர் சுகன்யா, மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பவுன்ராஜ் நன்றி கூறினார்.

    ×